அக்டோபர் 17 – ராசிபலன்

அக்டோபர் 17 – ராசிபலன்

🕉️மேஷம்*
அக்டோபர் 17 – ராசிபலன்
ஐப்பசி 01 – சனி

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : சிந்தனைகள் தோன்றும்.
பரணி : அன்பு அதிகரிக்கும்.
கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.


🕉️ரிஷபம்
அக்டோபர் 17 – ராசிபலன்
ஐப்பசி 01 – சனி

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். பழைய சிந்தனைகளால் செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடலாம். உத்தியோகம் தொடர்பான பணிகளில் அலைச்சலும், பொறுப்புகளும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : மாற்றங்கள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


🕉️மிதுனம்
அக்டோபர் 17 – ராசிபலன்
ஐப்பசி 01 – சனி

உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். போட்டிகளில் ஈடுபட்டு பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். மனதில் கற்பனைத்திறனும், ஒருவிதமான சஞ்சலமான சிந்தனைகளும் தோன்றும். புத்திரர்களின் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : பாராட்டுகள் கிடைக்கும்.
திருவாதிரை : சஞ்சலமான நாள்.
புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.


🕉️கடகம்
அக்டோபர் 17 – ராசிபலன்
ஐப்பசி 01 – சனி
சுயதொழில் தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். மருமகன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : சுபிட்சம் உண்டாகும்.


🕉️சிம்மம்
அக்டோபர் 17 – ராசிபலன்
ஐப்பசி 01 – சனி

தந்தையின் ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் மனதில் தெளிவை உண்டாக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஆதரவுகள் மனத்தெளிவை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : தெளிவு பிறக்கும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


🕉️கன்னி
அக்டோபர் 17, 2020
ஐப்பசி 01 – சனி

எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் மற்றும் முயற்சிகளில் சற்று கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் உண்டாகும். திருத்தலங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திரம் : கலகலப்பான நாள்.
அஸ்தம் : வாய்ப்புகள் ஏற்படும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.


🕉️துலாம்
அக்டோபர் 17, 2020
ஐப்பசி 01 – சனி

பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் ஒருவிதமான இறுக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். தனவரவுகள் நன்றாக இருக்கும். சகோதரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : இறுக்கமான நாள்.
சுவாதி : தனவரவுகள் உண்டாகும்.
விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.


🕉️விருச்சகம்
அக்டோபர் 17, 2020
ஐப்பசி 01 – சனி

எதிர்பாராத சில செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சலுக்கு பின் சாதகமான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் சில மனக்கசப்புகள் நேரிடலாம். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : விரயங்கள் ஏற்படலாம்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : முன்னேற்றம் உண்டாகும்.


🕉️தனுசு
அக்டோபர் 17, 2020
ஐப்பசி 01 – சனி

திட்டமிட்ட பணிகளில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்ப நபர்களிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் அன்பு குறையாது. மாணவர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இலாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : புத்துணர்ச்சியான நாள்.
பூராடம் : திறமைகள் வெளிப்படும்.
உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.


🕉️மகரம்
அக்டோபர் 17, 2020
ஐப்பசி 01 – சனி

வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தன நெருக்கடிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் ஒரு புதிய புத்துணர்ச்சி உண்டாகும். மனை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு தனவரவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவோணம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
அவிட்டம் : தனவரவு மேம்படும்.


🕉️கும்பம்
அக்டோபர் 17, 2020
ஐப்பசி 01 – சனி

செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். பெற்றோர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : தாமதங்கள் அகலும்.
சதயம் : ஆதரவான நாள்.
பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.


🕉️மீனம்
அக்டோபர் 17, 2020
ஐப்பசி 01 – சனி

புதிய நண்பர்களிடம் பேசுவதை குறைத்து கொள்வது நன்மை அளிக்கும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் தடையும், அலைச்சலும் அதிகரிக்கும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
உத்திரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ரேவதி : கவனம் வேண்டும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.