ஜெய் ஸ்ரீமன் நாராயணா! கடக மாத – ஆடி மாத ராசி பலன்கள் (16.07.2020 முதல் 16.08.2020 வரை) கிரஹ நிலைகள் 16.07.2020 அன்று.
சூரியன் கடக ராசிக்கு 16.07.2020 காலை 10.21 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
ஆடி மாத ராசி பலன்கள் B.V.ராமன் கணித பஞ்சாங்கப்படி ஜகந்நாத்ஹோரா ஸிஸ்டத்தில் கணித்தது. கிரஹங்கள் ஆடி மாதம் முழுவதும் ஒவ்வொரு நக்ஷத்திரகால்களில் இருப்பதை கொண்டும், வக்ர நிவர்த்தி காலங்களையும் கணக்கில் கொண்டு மேலும் சந்திரன் சஞ்சாரத்தையும் சேர்த்து கொண்டு பலன் சொல்லப்பட்டது.
கீழே ஒவ்வொரு ராசிக்கும் உண்டான தனி தனி ஆடி மாத ராசி பலன்கள்
மேஷ ராசி (அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் முடிய) :
ராசிநாதன் செவ்வாய் 12ல் இது நல்ல தல்ல கொஞ்சம் பொறுமை அமைதி காக்க வேண்டும், வீண் விவாதங்கள் விரயங்கள் ஏற்படும், மாதி மத்தி வரை புதனும் மறதி அசதி போன்றவற்றை கொடுக்கும். சூரியன் நாலில் உஷ்ண சம்பந்தமான வியாதிகள் வயறு உபாதைகள், போட்ட திட்டங்களுக்கு தடை வரும், சந்திரனின் சஞ்சாரம் அவ்வப்போது சில சந்தோஷங்களை தரும். மனதில் மகிழ்ச்சி குடியிருக்கும். 9ல் இருக்கும் குரு ஓரளவு நன்மை தரும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திரபாக்கியம் போன்று ஏற்படும், உத்தியோகம் சொந்தத்தொழிலில் முன்னேற்றம், மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம், விரும்பிய இடமாற்றம் இவை உண்டாகும். சுக்ரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் நல்ல பலனைதரும், உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம், லக்ஷ்மீ கடாக்ஷம், எதிலும் வெற்றி, வியாபார முன்னேற்றம், அரசயல்வாதிகள் கலைஞர்கள் என அனைத்து பிரிவினருக்கும் சுக்ரனால் நன்மை உண்டாகும். 3ல் இருக்கும் ராகுவும் புகழ், திருமண வைபோகம் குடும்பத்தில் உண்டாகும், தன ஆதாயம் ஏற்படும் கேது கொஞ்சம் தாமதப்படுத்தும் இருந்தாலும் சனியின் சஞ்சாரமும் வக்ரியாக இருப்பதால் ஓரளவு நன்மை உண்டாகும். பொதுவில் அனைத்து பிரிவினருக்கும் இந்த மாதம் நன்மைகள் ஓரளவு தான் இருக்கு காரணம் சுக்ரன் ராகு குரு இவர்கள் தருகிறார்கள் மற்ற கிரஹங்கள் சாதகம் இல்லை எதிலும் ஒரு நிதானத்தை கடைபிடிப்பது விட்டுக்கொடுத்து செல்வது என்று இருந்தால் நன்மை உண்டாகும். சுமாரான மாதம்.
சந்திராஷ்டமம் : அஸ்வினி – ஜூலை 29, பரணி – ஜூலை 30, க்ருத்திகை – ஜூலை 31
வணங்கவேண்டிய தெய்வம் நற்செயல்கள் : வைத்யநாதனை வணங்கவேண்டும், மேலும் அம்பாள் துர்கை, லக்ஷ்மி போன்ற பெண் தெய்வங்களை வணங்குவது அருகில் உள்ள கோயிலில் விளக்கேற்றுவது போன்றவை நன்மை தரும், முடிந்த வரை அன்னதானம், வஸ்திர தானங்களை செய்யுங்கள்.
ரிஷப ராசி (கிருத்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிஷம் 1,2 பாதகங்கள் மட்டும்) :
ராசிநாதன் சுக்ரன் மாதம் முழுவதும் நன்மை தருகிறார் பெண்களால் நன்மை, பணவரவு, உத்தியோகத்தில் உயர்ந்த நிலை, தொழிலில் மேன்மை, லக்ஷ்மீ கடாக்ஷம் உண்டாகும். 3ல் இருக்கும் சூரியன் தன்பங்குக்கு நன்மை செய்கிறார் அனைத்து பிரிவினருக்கும் நினைத்த செயல்கள் நடக்கும், பகைவர்களின் பலம் குறையும், சந்திரன் சஞ்சாரமும் நன்மைகளை வாரி வழங்குகிறது புத்திரபாக்கியம், இல்லத்தில் சுப நிகழ்வுகள், செவ்வாய் 11ல் பகைவர்களை வெல்லும் திறன், அதிகாரம், பதவி உயர்வு கிடைக்கும்.
குழந்தைகளின் கல்வி, உடல் நலம் போன்றவை சிறக்கும். புதனால் நல்வாக்கு, எப்படிப்பட்ட எதிர்ப்புகளையும் பேச்சுத்திறனால் முறியடிக்கும் திறமை உண்டாகும். மற்றவர்களை பொருட்படுத்தாத நிலை இருக்கும். குருவால் பெரிய நன்மை ஏதுமில்லை ஆனால் அவரின் 5,9 பார்வை பலத்தை தரும், ஓரளவு நன்றாக இருக்கும். 9ல் வக்ர சனி காரியங்களில் தடை, எதிர்ப்புகள் அதிகரித்தல் பொருள் நஷ்டம் என்று உண்டாகும். ராகு கேதுக்களும் நன்மை தரவில்லை, குடும்பத்தினர் முன்னேற்றம் தடை படுதல், விபத்து, மன கஷ்டம், நண்பர்களால் அபகீர்த்தி, பொருள் திருட்டு போகுதல், நெருங்கிய நண்பரே சதி செய்வார் மனது பாரமாக இருக்கும். இருந்தாலும் ராசிநாதன் சுக்ரன், மற்றும் சூரியன், செவ்வாய் பலமாய் இருப்பதால் நன்மைகள் அதிகம் நடக்கும். உழைக்கும் வர்க்கம் எதிர்பார்த்த பலனை பெறும்.
உத்தியோகஸ்தர்கள், சொந்த தொழில் செய்பவர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், விவசாயிகள், பெண்கள் என்று அனைவருக்கும் நன்மை அதிகம் இருப்பதால் கவலை வேண்டாம்.
சந்திராஷ்டமம்: கார்த்திகை – ஜூலை 31, ரோஹிணி – ஆகஸ்டு 1, மிருகசீரிடம் – ஆகஸ்ட் 2
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி தீர்த்தம் வாங்கி அருந்துங்கள் அன்னதானம் போன்று தான தர்மங்களை செய்யுங்கள் ஓம் நமோ நாராயணா என்று சொல்லுங்கள்.
மிதுன ராசி (மிருகசீரிஷம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய) :
ராசிநாதன் புதன் ஆட்சி, மாத மத்தியில் 2ம் இடம் பெயர்கிறார். இவர் நிறைய நன்மைகளை செய்கிறார். பிரயாணங்கள், எப்பட்டிப்பட்ட எதிர்ப்புகளையும் சமாளித்துவிடும் திறன், சூரியன் சஞ்சாரம் நன்றாக இல்லை பொருளாதார நெருக்கடியை தருவார், அடுத்தவர் சொல்வதை முழுவதுமாக நம்பிவிடவேண்டாம். கண்ணில் பிரச்சனை வரலாம், பத்தில் இருக்கும் செவ்வாயும் பெரிய நன்மையை செய்யவில்லை உத்தியோகத்தில் நல்ல பெயர் உண்டாகுமே தவிர பணவரவு இருக்காது. தொழில் ஓரளவு ஓடும். உடல் ரீதியான பிரச்சனைகளை தரும். பெண்களிடம் பேசும்போது கவனமாக இருங்கள் பிரச்சனை வரலம். குருபகவான் நல்லது செய்கிறார். மனைவியிடம் ஒற்றுமை உண்டாகும், எப்படிப்பட்ட துன்பத்தையும் கடந்துவிடும் மன பக்குவம் வரும். புத்திர பாக்கியம் சிலருக்கு உண்டாகும், மீடியா, எழுத்து கல்வி, புத்தகம், பிரிண்டிங்க் தொழிலில் இருப்பவர்கள் நல்ல பலனை பெறுவார்கள். சுக்ரனும் மாதம் முழுவதும் 12லிலும், ராசியிலுமாக இருந்து நன்மை செய்கிறார். ஆடம்பர பொருட்களை விற்பவர்கள், அழகுசாதன தொழில் செய்வர் ஆடை தொழில் இவர்களுக்கு மிகுந்த நன்மையை செய்கிறார். பணவரவையும் கொடுக்கிறார். குடும்பத்துக்கு தேவையான பொருள்களை வாங்கி தருகிறார். ஜனன ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இல்லை என்றால் இந்த மாதம் பெரிய பாதிப்புகளை தருவார், விபத்து, வியாதிகள் உறவினர் வகையில் துயரச்செய்தி ஜீவன வகையில் கஷ்டம் என்று தருவார் . சனி நல்ல நிலையில் இருந்தால் கவலை பட வேண்டாம். ராகு கேதுக்களும் பெரிய நன்மை செய்யவில்லை. இருந்தாலும் இந்த மாதம் ஓரளவு நன்றாகவே அனைத்து பிரிவினருக்கும் ஓடும். பெரிய கஷ்டங்கள் இருக்காது சமாளித்து விடுவீர்கள்.
சந்திராஷ்டமம்: மிருகசீரிடம் – ஆகஸ்ட் 2, திருவாதிரை – ஆகஸ்ட் 3, புனர்பூசம் – ஆகஸ்ட் 4
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : அனுமனை வணங்குங்கள் ராமநாமம் சொல்லுங்கள் அஷ்டம சனியின் கஷ்டம் தீரும். முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள், அருகில் உள்ள அனுமர் கோயிலில் சனிக்கிழமையில் வெண்ணை சாற்றுங்கள், விளக்கேற்றுங்கள்.
கடக ராசி (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் ) :
ஜென்மத்தில் சூரியன் கொஞ்சம் உடல் உபாதைகள், பயணக்களைப்பு, சோர்வை உண்டாக்குவார், இருந்தாலும் பெரிய கெடுதல்களை தரமாட்டார், மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் லாபத்தில், அதனல் சந்திரனின் சஞ்சாரம் மாதம் முழுவதும் மகிழ்ச்சியை தரும். பெரிய பிரச்சனைகளை கூட எளிதில் கையாளும் தன்மை வந்துவிடும். 9ல் இருக்கும் செவ்வாய் உடல் பலகீனத்தை தரும், தொடர்ந்து அலைச்சலை தரும், ஜீவன வகையில் கஷ்டம் ஏற்படும். புதன் மாத மத்தி வரை மகிழ்ச்சியை தருவார், எடுத்தகாரியங்களில் வெற்றி கொண்டுவருவார். மாத பிற்பகுதியில் கௌரவ பாதிப்படி தருவார். 6ல் இருக்கும் குருவும் வியாதி, கடன் வழக்கு பிரச்சனை என்று கொண்டுவருவார். கேது சஞ்சாரம் நன்மை தராது. உழைப்பவர்கள் உத்தியோகஸ்தர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். வீண் விவாதங்களை தவிர்ப்பது உடன் பணி செய்வோரிடம் கவனமாய் இருத்தல், மேலதிகாரிகளிடம் மோதல் இல்லாமல் இருத்தல் போன்றவையும், சொந்த தொழில் செய்வோர் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளுதல், தொழிலாளர்களிடம் அனுசரணையாக நடப்பது போன்றவையும் அரசியல்வாதிகள் வாக்கு கொடுக்காமல் இருப்பது கட்சி மேலிடத்தில் மோதல் போக்கு இல்லாதிருத்தல் மற்ற அனைத்து பிரிவினரும் கவனமாக இருப்பது என்று இருந்தால் இந்த மாதத்தை எளிதாக கடந்துவிடலாம் பெரும்பாலான கிரஹ அமைப்புகள் சாதகம் இல்லை. ஜனன ஜாதகம் நன்றாக இருந்தால் சமாளிக்கலாம்.
சந்திராஷ்டமம் : புனர்பூசம் – ஆகஸ்ட் 5, பூசம் – ஆகஸ்ட் 5,6, ஆயில்யம் – ஆகஸ்ட் 6,7
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்வது பெருமாள் கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றுவது முடவர்களுக்கு உடல் ஊனமுற்றோருக்கு உதவுவது போன்றவை நல்ல பலனை தரும். அன்னதானம் செய்வது நல்லது
சிம்ம ராசி (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் முடிய) :
ராசிநாதன் 12ல் வீண் வழிகளில் பணம் செலவாகும், கடன் பெறக்கூடிய சூழல் உண்டாகும். உத்தியோகம், செய்தொழில் வர்த்தகம் போன்றவற்றில் மந்தமான போக்கு இருக்கும். லாபத்தில் புதன் மாத மத்திவரை கொஞ்சம் மகிழ்ச்சி பொருள்வரவு, வாகன யோகம், விவசாயிகளுக்கு நன்மை என்று இருக்கும். செவ்வாயும் ஒன்றும் சரியில்லை விபத்துகளை தருவார் எச்சரிக்கை தேவை குரு பகவான் நன்மை தருகிறர். மழலை செல்வம் சிலருக்கு உண்டாகும். பொருளாதாரம் மேம்படும். சுக்ரனும் தன் பங்குக்கு ஆடை ஆபரண சேர்க்கை வீட்டில் லக்ஷ்மீ கடாக்ஷம், இறைவழிபாட்டில் நாட்டம், தெய்வ தரிசனம், என்று தருகிறார். சனி பகவான் 6ல் ஆட்சி பகைவர்களை வெல்லுதல், வழக்கு கடன்கள் தீருதல், தொழில் விருத்தி உத்தியோகத்தில் உயர்வு, மாதம் முழுவதும் நல்லதை செய்வதால் கவலையே வேண்டாம். மேலும் ராகு லாபத்தில் இருப்பதால் சகல துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படும். அனைத்து பிரிவினருக்கும் பொருளாதாரம் உயரும், சுறுசுறுப்பு உண்டாகும், பெண்களால் நன்மை உண்டாகும். 5ல் கேது இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. குரு கேது இணைவு நன்மை தரும். பொதுவில் இந்த மாதம் சில கிரஹங்கள் பிரச்சனை தந்தாலும் பெரும்பாலான கிரஹங்கள் நன்மை தருவதால் உற்சாகம் அதிகரிக்கும். முயற்சிகள் வெற்றி அடையும் ஜீவன வகையில் நல்லது இருக்கும். கவலை வேண்டாம். கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும்.
சந்திராஷ்டமம் : மகம் – ஆகஸ்ட் 7,8, பூரம் – ஆகஸ்ட் – 8,9, உத்திரம் – ஆகஸ்ட் – 10
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : பரமேஸ்வரனை வழிபடுங்கள், ப்ரதோஷ காலங்களில் நந்தி வழிபாடு நல்லதை செய்யும் மேலும் குல தெய்வ வழிபாடும் மன கவலையை போக்கும். அன்னதானம் நிறைய செய்யுங்கள். உடல் ஊனமுற்றோர் அல்லது நடக்க இயலாதோர் போன்றோருக்கு சரீர ஒத்தாசைகளை செய்யுங்கள்
கன்யா ராசி (உத்திரம் 2,3,4, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதம் முடிய) :
ராசிநாதன் மாத மத்தி வரை 10லும் பின் 11லுமாக சஞ்சரித்து நன்மை செய்கிறார், உத்தியோகத்தில் உயர்ந்த நிலை, வியாபாரம், தொழில் நன்றாக இருத்தல், உடல் ஆரோக்கியம் மேம்படுதல், பொருளாதாரம் உயருதல், விவசாயிகளுக்கு நன்மை, சமூகத்தில் நல்ல மதிப்பு மரியாதை என்று இருக்கும். சூரியன் 11ல் இருக்கிறார். எதிர்கள் மறைந்துவிடுவர் ஜீவன வகையில் எதிர்பாராத ஆதாயம், அரசியல்வாதிகளுக்கு பதவி, புகழ், வங்கி துறையினர் வளர்ச்சி பெறுவர். செவ்வாய் 7ல் சஞ்சரிப்பதால் குடல் சம்பந்தமான பிரச்சனைகள், கண், தலைவலி உண்டாகலாம், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு நண்பர்களுடன் சண்டை 4லில் குரு நண்பர்கள் உறவினர் விலகி செல்வர், வீண் பழி உண்டாகும் ஏற்ற தாழ்வுகளும் இருக்கும். கடன் படுதல் உண்டாகும், 5ல் சனி குழந்தைகளுக்கு உடல் பாதிப்பு, கர்பஸ்திரீகளுக்கு கெடுதல், குழப்பம் , 4ல் கேது சுக குறைவு, முன்னேற்றம் தடை படுதல் என்று இவை இருந்தாலும் 9ல் இருக்கும் சுக்ரன் பொருள்வருவாயை இரட்டிப்பாக்குதல், சந்தோஷம் தருதல், எதிலும் மகிழ்ச்சி என்று இருக்கும் மேலும் 10ல் இருக்கும் ராகு இருவித வருவாயை தருவார் இடமாற்றம், அல்லது உத்தியோக மாற்றம் ஏற்படும், சொந்த தொழில் வளர்ச்சியடையும், பொதுவில் நன்மைகள் அதிகம் இருக்கின்றன. தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் கெடுபலன்கள் குறைவாக அல்லது இருக்கவே இருக்காது. லாபங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த மாதம் மகிழ்ச்சியான மாதம்.
சந்திராஷ்டமம் : உத்திரம் – ஆகஸ்ட் 10, ஹஸ்தம் – ஆகஸ்ட் 11, சித்திரை – ஜூலை 16, ஆகஸ்ட் – 12
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : பெருமாளையும் தாயாரையும் வணங்க வேண்டும் குரு கேது சனி பாதக பலன்கள் என்பதால் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலனை தரும். முடிந்த அளவு தான தர்மங்களை செய்வதும் ஊனமுற்றோருக்கு உதவுவதும் நன்மை தரும்.
துலா ராசி (சித்திரை 3,4, ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய) :
ராசிநாதன் சுக்ரன் 1.8.20 வரை 8ல் ஆட்சி பின் 9ல் மாதம் முழுவதும் ஆரம்பம் சுமார் ஆனால் 1ம் தேதிக்கு பின் செல்வ சேர்க்கை தர்ம காரியங்களில் ஈடுபடுதல் மாணவர்கள் நன்கு படிப்பர் சிலருக்கு இல்லத்தில் சுப காரியங்கள் நடக்கும். சூரியன் பத்தில் இருந்து கொண்டு பிணியை போக்குகிறார். சுறுசுறுப்பு உண்டாகும் எடுத்தகாரியங்களில் வெற்றி உண்டாகும். உத்தியோகம் சொந்த தொழில்,வியாபாரம் அனைத்து பிரிவினருக்கும் உயர்வு ஏற்படும். சிலருக்கு அரசாங்க ஆதரவு உண்டாகும். சந்திரனும் அவ்வப்போது நன்மைகளை தரும். செவ்வாய் 6ல் வழக்குகள் தீரும், கடன் தீரும் வியாதிகள் அனுகாது, புதன் மாத பிற்பகுதியில் நன்மை செய்கிறார். எதிரிகள் மறைவர், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குரு சஞ்சாரம் நன்மை தரவில்லை ஜீவன வகையில் பாதிப்பு உண்டாகும். இடம் மாறி வாசம் செய்ய வேண்டிய நிலை சிலருக்கு இருக்கும் ஆனால் பார்வை மூலம் நன்மை செய்வதால் கவலை வேண்டாம். அர்தாஷ்டம சனி ஆட்சி வக்ரம் அதனால் சில பயணக்களியப்பு அசதி ஏற்படுமே தவிர பெரிய பிரச்சனி ஏற்படாது சனியின் 10ம் பார்வை ராசியை பார்ப்பதும் நன்மை தரும். 3ல் கேது புகழ் பரவும் நோய் நீங்கிவிடும். மனைவி மக்கள் நன்மை உண்டாகும். வருமானம் பெருகும். ராகு பெரிய கெடுதலை செய்யாது. பொதுவில் பல கிரஹங்கள் நன்மையே செய்வதாலும் குரு சனி பார்வையால் நன்மை தருவதாலும் உத்தியோகஸ்தர்கள், தொழில் வியாபாரம் செய்வோர், அரசியல்வாதிகள், கலைத்துறையினர், விவசாயிகள், மாணவர்கள்,பெண்கள் என்று துலாம் ராசி அன்பர்கள் அனைவருக்கும் இந்த மாதம் மிகுந்த நன்மை உண்டாகும் கவலை வேண்டாம்.
சந்திராஷ்டமம் : சித்திரை – ஜூலை 16 & ஆகஸ்ட் 12, ஸ்வாதி – ஜூலை 17, ஆகஸ்ட் 13, விசாகம் – ஜூலை 18 & ஆகஸ்ட் 14
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : நரசிம்மரை வழிபடுங்கள் ஸ்வாதி நாளிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் ந்ருஸிம்ஹருக்கு விளக்கேற்றி மூல மந்திரம் சொல்லுங்கள், முடிந்த அளவு அன்னதானம், வஸ்திரதானம் செய்யுங்கள் சரீர ஒத்தாசை செய்யுங்கள்.
விருச்சிக ராசி (விசாகம் 4, அனுஷம், கேட்டை ) :
சூரியன் 9ல் உத்தியோகத்தில், சொந்த தொழிலில் ஒரு மாற்றம் உண்டாகும். பெற்றோர் நலனில் அக்கறை கொள்ளவேண்டும். ஆரோக்கியம் அவர்களுக்கு பாதிக்க படும். சந்திரன் 7ல் மாதம் தொடங்கும் போது அதனால் சந்தோஷ நிலையுடன் தொடங்கும். சந்திரனின் சஞ்சாரம் ஓரளவு நன்மையை தரும். ராசிநாதன் 5ல் சஞ்சரிப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்க படும் அல்லது குழந்தை பற்றிய சிந்தனை மேலோங்கும். மாணவர்களின் கல்வி செலவு அதிகரிக்கும், புதன் முற்பகுதியில் அதிக நன்மையை செய்கிறது. தெய்வானுகூலம் உண்டாகும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் பிறருக்கு உதவி செய்வீர்கள். மேலும் குருபகவான் 2ல் இருந்து பொருளாதாரத்தை மேம்படுத்துவார், உத்தியோகம், சொந்த தொழில் வியாபாரத்தில் உயர்வு ஏற்படும், சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சுக்ரன் உடல் நலத்தில் முன்னேற்றத்தை தருவார், பொருள் வரவு, அனைத்து பிரிவினருக்கும் முன்னேற்றம், ஆடை ஆபரண சேர்க்கை என்று இருக்கும். 3ல் சனிபகவான் சுகத்தை அள்ளித்தருவார் வியாதிகள் நீங்கும், பகைவர் இடம் தெரியாமல் போவார், வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம் உண்டாகும். அனைத்து பிரிவினரும் சுகம் அடைவர். ராகுகேதுவால் அதிக நன்மை இல்லை சில தடைகளும் குருவின் பார்வையால் நீங்கும். பொதுவில் இந்த மாதம் நன்மைகள் அதிகம் இருக்கிறது. கெடுதல்கள் இருந்தாலும் பெரிய அளவில் இல்லை கொஞ்சம் கவனமாய் இருந்தால் போதும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் : விசாகம் -ஜூலை 18 & ஆகஸ்ட் 14, அனுஷம் – ஜூலை 19 & ஆகஸ்ட் 15, கேட்டை – ஜூலை 20 & ஆகஸ்ட் 16
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : மகிழ்ச்சி அதிகம் இருப்பதால் அருகில் இருக்கும் அம்பாள் கோவிலுக்கோ லக்ஷ்மி கோவிலுக்கோ சென்று நெய் தீபம் ஏற்றுங்கள். மேலும் உங்கள் இஷ்ட தெய்வம் குல தெய்வ வழிபாட்டையும் செய்யுங்கள். முடிந்த அளவு அன்னதானம், தான தர்மம் செய்யுங்கள்.
தனூர் ராசி (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய) :
ராசிநாதன் குரு ஜென்மத்தில் சஞ்சரிப்பதும் கேதுவுடன் இணைவதும் அவ்வளவு சரியல்ல, முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீர்போல் வீணாகும், இடம் மாற்றம், கௌரவ பாதிப்பு, எல்லோரும் விலகிவிட்டது போல தோற்றம் இருக்கும் ஆனால் குரு பார்வை கொஞ்சம் நிம்மதியை தரும், சூரியனும் பெரிய நன்மையை தரவில்லை, குடல், கண், சம்பந்தப்பட்ட வியாதிகள் உண்டாகும் உத்தியோகத்தில் இருப்பவருக்கு இடைஞ்சல், சொந்த தொழில் செய்வோருக்கு பின்னடைவு, பெண்களால் தொல்லை அவதி, 4லில் சஞ்சரிக்கும் செவ்வாய் எல்லாவிதத்திலும் எதிர்ப்பும், கைகால் குடைச்சல்,நோய் பாதிப்பு என்றிருக்கும். புதன் மாத முற்பகுதியில் அதிக சுகத்தை தராவிட்டாலும் 2ம் தேதிக்கு மேல் தெய்வ அனுகூலத்தை தருகிறார் நல்ல சிந்தனைகள் தோன்றும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர், வேலையில் நல்ல நிலை ஏற்படும், நல்ல பெயர் உண்டாகும், 6ல் இருக்கும் சுக்கிரனும் ஓரளவு நன்மை செய்கிறார் கடன் வசூலாகும், எதிரிகள் தொல்லை நீங்கும், 2ல் இருக்கும் சனிபகவான் வக்ர ஆட்சியாக இருப்பதால் ஜீவன வகையில் அடுத்தவரை எதிர்பார்க்கும் நிலையை தருவார் வழக்கில் வெற்றியை தருவார், குடும்பத்தில் சில கஷ்டங்களை மன கசப்பை தருவார், 7ல் ராகுவும் வாழ்க்கை துணைவரின் உடல் நலத்தை பாதிக்க செய்வார். ஆக இந்த மாதம் கிரஹ சூழல்கள் சாதகம் இல்லை சந்திரன் ஒருசில நாட்கள் மகிழ்ச்சியை தருவார். பொதுவாக கஷ்டம் அதிகம் இருக்கும் எதிலும் நிதானம், கவனம், அனுசரனையான போக்கு இருந்தால் சமாளித்து விடலாம். தனிப்பட்ட ஜாதகத்தில் கிரஹ வலிமைகள் நன்றாக இருந்தால் பெரிய அளவில் கெடுதல்கள் இருக்காது.
சந்திராஷ்டமம் : மூலம் – ஜூலை 21, பூராடம் – ஜூலை 22, உத்திராடம் – ஜூலை 23
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : ஸ்ரீராமனை வணங்கி கொள்ளுங்கள் ராம நாமத்தை சொல்லி கொண்டிருங்கள். நவக்ரஹ காயத்ரி, கோளறு பதிகம் போன்றவற்றை ஆடிமாதம் முழுவதுமே சொல்லி கொண்டிருப்பது நல்லது. வறியவர்களுக்கு பொருளுதவி அன்னதானம் போன்றவற்றை செய்யுங்கள். நிறைய தான தர்மங்களை செய்யுங்கள்.
மகர ராசி (உத்திராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய) :
ராசிநாதன் ஜென்மத்தில் வக்ரியாக சஞ்சரித்தாலும் பெரிய பாதிப்பு இல்லை, கொஞ்சம் சோம்பேறித்தனம் வரும், செயல்கள் மெதுவாக நகரும், வீண் விவாதத்தை தவிர்த்தால் வழக்குளிலிருந்து தப்பிக்கலாம், சூரியன் 7ல் சஞ்சரிப்பதால் ஜீரணக்கோளாறுகள் ஏற்படலாம், சூரியன் பலமாக இருப்பதால் பெரிய கஷ்டங்கள் இருக்காது கணவன் மனைவி அனுசரித்து போவது நலம் தரும். சந்திரன் நல்ல நிலையை மகிழ்ச்சியை தருகிறார். செவ்வாய் 3ல் வாகன யோகம் பூமிலாபம், ஆடை ஆபரண சேர்க்கை, உத்தியோகம், தொழிலில் முன்னேற்றம், நினைத்த காரியம் கைகூடுதல், மாதத்தின் முதல் பாதியில் புதன் பொருளாதார முன்னேற்றம் செய்கிறார், குடும்பத்தில் சந்தோஷம், சமூக அந்தஸ்து நல்ல பெயர் இவற்றை தருகிறார். 2.8.20க்கு பின் கொஞ்சம் பிரச்சனை தருவார் கொஞ்சம் கவனம் தேவை, குரு பகவான் 12ல் சஞ்சரித்து சுப விரயங்களை செய்கிறார். ப்ரயாணம் உண்டாகும், குழந்தைகளின் கல்வி செலவு அதிகரிக்கும், வீடு, வாகனம் இவற்றில் கொஞ்சம் செலவை கொடுக்கிறார். அவரின் 5, 9 பார்வை 4,8ம் வீடுகளில் அதனால் சுகம், பயமின்மை, தைரியம் ஆயுள் தீர்க்கம் ஏற்படும். 5ல் சுக்ரன் பணத்தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்.வாக்கு வண்மை கூடும்.
அவரே 1.08.20 முதல் 6ல் பெயர்ச்சியாகி கடன்,பகை, வழக்கு என்று உண்டாக்கிவிடுகிறார் கவனம் தேவை, 6ல் ராகு ஓரளவு நன்மையை செய்கிறார், வருவாயையும் தருகிறார், மேல்மட்ட மனிதர்களின் பாராட்டை கொண்டுவருகிறார். 12ல் இருக்கும் கேது சுப செலவு, மருத்துவ செலவு வழக்கை முடிக்க செலவு கடனை அடைக்க வட்டி செலவு என்று செலவாகவே செய்கிறார். பொதுவில் இந்த மாதம் நன்மை அதிகமாகவும் கெடுதல் குறைவாகவும் இருக்கிறது. அனைத்து பிரிவினரும் விட்டுக்கொடுத்து அனுசரித்து வீண் விவாதங்களை தவிர்த்தால் கெடுதல்கள் இன்னும் குறையும். மகிழ்ச்சியும் பெருகும்.
சந்திராஷ்டமம் : உத்திராடம் – ஜூலை 23, திருவோணம் – ஜூலை 24, அவிட்டம் – ஜூலை 25
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : சூரிய நமஸ்காரம் செய்யுங்கள், துர்க்கைக்கு ராகு காலத்தில் விளக்கேற்றுங்கள், கால பைரவரை வழிபடுங்கள், ப்ரதோஷ காலங்களில் நந்தி அபிஷேகம் பாருங்கள் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்யுங்கள். அடுத்தவருக்கு கொடுங்கள்.
கும்ப ராசி (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய ) :
ராசிநாதன் 12ல் சுப செலவுகளை தருகிறார். ஏற்கனவே மருத்துவ செலவு செய்து கொண்டிருந்தால் அது தொடரும்.பிரயாணங்கள் அதிகரிக்கும். சூரியன் 6ல் நோய் நீங்கி ஆரோக்கியம் மேம்படும், உத்தியோகத்தில் உயர்ந்த நிலை, சொந்த தொழில், வியாபாரத்தில் அரசின் ஆதரவு, எதிரிகள் மறைவு அனைத்து பிரிவினருக்கும் ஜீவன வகையில் முன்னேற்றம் சந்திரனின் மாத ஆரம்ப சஞ்சாரம் ஓரளவு நன்மை, விடாமுயற்சியில் வெற்றி, 2ல் செவ்வாய் வாழ்க்கையில் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும், குடும்பத்தில் சஞ்சலம் ஏற்படும், கவனமாய் இருந்தால் தவிர்க்கலாம். புதன் 2ம் தேதி வரை நன்மை தராது அதன் பின் மாத முடிய பொருளாதாரத்தில் நல்ல நிலை, குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி எல்லாம் நன்றாக இருக்கும். குரு லாபத்தில் கடந்தகாலத்தில் பட்ட கஷ்டம் நிவர்த்தியாகும் பறிபோன பதவி கிடைக்கும் உத்தியோகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும் தொழிலதிபர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள் என அனைவருக்கும் பெரிய நிலை உண்டாகும், புதுவித ஆடை ஆபரண சேர்க்கை, ஜீவனவகையில் புதிய ஆதாயமும், வீடு,பூமி நிலம் போன்றவற்றில் வருவாயும், விவசாயிகளுக்கு விளைச்சல் மற்றும் கால்நடை மூலம் ஆதாயமும் உண்டாகும். சிலர் புதுவீடு வாங்கும் நிலை ஏற்படும், புத்திரபாக்கியம் சிலருக்கு உண்டாகும்.
சுக்ரனும் மாதம் முழுவதும் நல்ல பலனை தருகிறார் பணத்தட்டுப்பாடு ஏற்படாது. விருந்துண்ணல் கேளிக்கைகள், என்று நன்றாக இருக்கும் சினிமா , மீடியா துறையில் இருப்பவருக்கு வருமானம் இரட்டிப்பாகும். 11ல் கேதுவும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை உண்டாக்குகிறார், நண்பர்கள் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். செய்தொழில் வியாபாரம் உத்தியோகம் சுறுசுறுப்பாய் இயங்கும். அதே நேரம் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் கவனம் தேவை. பொதுவில் இந்த மாதம் அநேக கிரஹங்கள் நன்மை தருவதால் மகிழ்ச்சியாக இருக்கலாம் அனைத்து பிரிவினருக்கும் நன்மையே அதிகம் உண்டாகும்.
சந்திராஷ்டமம் : அவிட்டம் – ஜூலை 25, சதயம் – ஜூலை 26, பூரட்டாதி – ஜூலை 27
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : அம்பாளை மனதில் நினைத்து கொண்டு அருகிலுள்ள கோவிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடவும், தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு சிறந்தது, முடிந்த அளவு இஷ்ட தெய்வம் குல தெய்வ வழிபாட்டை செய்யவும். அன்னதானம் செய்யவும். தான தர்மங்களை செய்யவும்.
மீன ராசி (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி ) :
ராசிநாதன் பத்தில் ஆட்சி, உத்தியோகம், தொழிலில் மாற்றம் ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சித்து கொண்டிருப்பவர்கள், புதிய தொழிலை தொடங்க இருப்பவர்களுக்கு ஏற்றகாலம். கொஞ்சம் உடல் பாதிப்பு இருக்கும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் தொழிலில், உத்தியோகத்தில் தடைகளும் உண்டாகும். 5ல் சூரியன் பெரியோர்களிடம் சண்டை ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் மோதல் ஏற்படும் நிதானம் தேவை, சிறு சிறு தவறுகள் கௌரவத்தை பாதிக்கும். செவ்வாயும் ஜென்மத்தில் சாதகம் இல்லை முன் யோசனை இன்றி நடக்க நேரிடும். அடிபடுதல், காயம் ஏற்படுதல் அல்லது உஷ்ண சம்பந்தப்பட்ட நோய் தாக்கம் ஏற்படலாம். புதன் மாத முற்பகுதியில் வாகன யோகம் சுகம், கௌரவம் அதிகரித்தல் இவற்றை தரும் பிற்பகுதி நன்றாக இருக்காது எச்சரிக்கை தேவை, சுக்ரன் ஓரளவு நன்மை தருகிறார். லாகிரி வஸ்து ஆடம்பர பொருள் விற்பனையாளர்கள் நல்ல பலனை பெறுவர். இடமாற்றம் உண்டாகும். சனி ஒருவரே 11ல் இருந்து பலத்த நன்மையை செய்கிறார். நஷ்டம் சரியாகும். முன்னேற்றம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை கொடுக்கும். தொழில், வியாபாரத்தில் கனிசமான லாபத்தையும், போட்ட திட்டங்களில் வெற்றியையும் தரும். ராகு கேதுவும் நன்மை தரவில்லை. பொதுவாக சனி, புதன், குருவின் பார்வை இவை மட்டுமே இந்த மாதம் நன்மை தருவதால் அதிக நன்மை என்று சொல்ல முடியாது. உத்தியோகஸ்தர்கள், தொழில் செய்வோர், கலைஞர்கள் விவசாயிகள் என்று அனைத்து பிரிவினரும் எதிலும் ஒரு கவனமும் நிதானமும் இருக்கவேண்டும். நல்ல சூழல்போல் தெரியும் பின்னாலேயே கஷ்டம் வரும். கலந்துகட்டி நன்மை தீமை இருப்பதால் எதிலும் ஒரு கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
சந்திராஷ்டமம்: பூரட்டாதி – ஜூலை 27, உத்திரட்டாதி – ஜூலை 28, ரேவதி – ஜூலை 29
வணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள், தக்ஷிணாமூர்த்தி, சனீஸ்வரர் என்று வணங்குங்கள் , முடிந்தவரை அன்னதானம் மற்றும் தான தர்மங்களை நிறைய செய்யுங்கள். உங்கள் இஷ்ட தெய்வம் குல தெய்வ வழிபாடு நல்ல பலனை தரும்.
குறிப்பு:
இதுவரை சொல்லப்பட்ட ஆடி மாத ராசி பலன்கள் எல்லாம் பொதுவானவை. உங்கள் ஜனன ஜாதகம் நன்றாக இருந்தால் நல்லபலன்கள் அதிகமாகவும் கெடுபலன்கள் குறைவாகவும் இருக்கும். மேலும் தசாபுக்திகள் சாதகமாய் இருந்தாலும் நல்லதாகவே நடக்கும். உங்கள் ஜனன ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி ஆடி மாத ராசி பலன்கள் சரிபார்த்து கொள்ளுங்கள்.
அன்புடன்
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, I Block, Alsa Green park, Near MIT Gate
Nehru Nagar, Chrompet, Chennai – 600 044
Email: mannargudirs1960@gmail.com
Phone: 044-22230808 / 8056207965
Skype ID: Ravisarangan
!!சர்வே ஜனா சுகினோ பவந்து!!