ஆடி 1 16.07.2020 ராசி பலன்

ஆடி 1 16.07.2020 ராசி பலன்

*🕉️மேஷம்*

வெளியூரிலிருந்து வரும் செய்திகளின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : மகிழ்ச்சி ஏற்படும்.

பரணி : அனுகூலம் உண்டாகும்.

கிருத்திகை : அன்பு அதிகரிக்கும்.
—————————————
*🕉️ரிஷபம்*

ஆடி 1 16.07.2020 ராசி பலன்

மனதில் எதையாவது ஒன்றை பற்றி சிந்தித்து கொண்டே இருப்பீர்கள். சிறு தூர பயணங்களின் மூலம் நல்ல தகவல்கள் கிடைக்கும். கல்வியில் ஏற்பட்ட தடைகள் அகலும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். எதையும் சமாளிக்கும் தைரியம் மனதில் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : சிந்தனைகள் மேலோங்கும்.

ரோகிணி : தடைகள் அகலும்.

மிருகசீரிஷம் : தைரியம் உண்டாகும்.
—————————————
*🕉️மிதுனம்*

ஆடி 1 16.07.2020 ராசி பலன்

நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.

திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.

புனர்பூசம் : கவனம் வேண்டும்.
—————————————
*🕉️கடகம்*

ஆடி 1 16.07.2020 ராசி பலன்

புதிய நண்பர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : புதிய நட்பு கிடைக்கும்.

பூசம் : மேன்மை உண்டாகும்.

ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.
—————————————
*🕉️சிம்மம்*

ஆடி 1 16.07.2020 ராசி பலன்

வியாபாரம் சம்பந்தமான போட்டிகளில் சாதகமான பலன்களும், இலாபங்களும் கிடைக்கும். எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம். மனதில் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும், செலவும் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : சாதகமான நாள்.

பூரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

உத்திரம் : அலைச்சல்கள் ஏற்படலாம்.
—————————————
*🕉️கன்னி*

16.07.2020

உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். செய்யும் தொழிலில் சிறப்படைவீர்கள். நண்பர்களின் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலை நுணுக்கம் உள்ள பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

உத்திரம் : ஆதரவு உண்டாகும்.

அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.

சித்திரை :ஆர்வம் உண்டாகும்.
—————————————
*🕉️துலாம்*

16.07.2020

வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. எதிர்பார்த்த பலன்கள் தாமதமாக கிடைக்கும். பழைய நினைவுகளால் மன அமைதி குறைவதற்கான சூழ்நிலை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை : அலைச்சல்கள் உண்டாகலாம்.

சுவாதி : கவனம் தேவை.

விசாகம் : அமைதி குறையும்.
—————————————
*🕉️விருச்சகம்*

16.07.2020
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் சாதகமாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : தன்னம்பிக்கை உண்டாகும்.

அனுஷம் : மரியாதை அதிகரிக்கும்.

கேட்டை : சாதகமான நாள்.
—————————————
*🕉️தனுசு*

16.07.2020

நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : கவனம் வேண்டும்.

பூராடம் : அனுசரித்து செல்லவும்.

உத்திராடம் : பிரச்சனைகள் தீரும்.
—————————————
*🕉️மகரம்*

16.07.2020

கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த சில காரியங்கள் சாதகமாக முடியும். மாணவர்களுக்கு மனதில் தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். திடீர் பணத்தேவைகள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.

திருவோணம் : சாதகமான நாள்.

அவிட்டம் : பணத்தேவைகள் உண்டாகலாம்.
—————————————
*🕉️கும்பம்*

16.07.2020

உறவினர்கள், நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் திறமையாக செயல்பட்டு எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இழுபறியாக இருந்துவந்த காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.

சதயம் : திறமைகள் வெளிப்படும்.

பூரட்டாதி : திருப்பம் ஏற்படும்.
—————————————
*🕉️மீனம்*

16.07.2020

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். செய்தொழிலில் மன நிம்மதியும், நன்மையும் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். போட்டிகளில் எண்ணிய வெற்றி சிறிது அலைச்சலுக்கு பின்பே கிடைக்கும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : நிம்மதி உண்டாகும்.

உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ரேவதி : யோசித்து செயல்படவும்.

சம்பத் குமார்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.