ஆனி 10 ஜூன் 24 ராசி பலன்கள்

🕉️மேஷம்*

ஜூன் 24, 2020

ஆனி 10 – புதன்

தன்னம்பிக்கை மேலோங்கும். வழக்கு விவகாரங்களில் நிதானம் வேண்டும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

அஸ்வினி : நிதானம் வேண்டும்.

பரணி : ஆர்வம் அதிகரிக்கும்.

கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.
—————————————
*🕉️ரிஷபம்*

ஜூன் 24, 2020

ஆனி 10 – புதன்

தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். புத்திரர்களின் மூலம் சுபச்செய்திகள் உண்டாகும். பணியில் திருப்தியான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : இலாபம் உண்டாகும்.

ரோகிணி : நம்பிக்கை அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : திருப்தியான நாள்.
—————————————
*🕉️மிதுனம்*

ஜூன் 24, 2020

ஆனி 10 – புதன்

புத்திக்கூர்மையால் பாராட்டப்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் சுபச்செலவுகள் உண்டாகும். வீடு கட்டுவதற்கான உதவிகள் கிடைக்கும். எண்ணிய செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மிருகசீரிஷம் : சுபச்செலவுகள் உண்டாகும்.

திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.

புனர்பூசம் : அறிமுகம் உண்டாகும்.
—————————————
*🕉️கடகம்*

ஜூன் 24, 2020

ஆனி 10 – புதன்

உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நண்பர்களுக்கிடையே நிதானம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் உண்டாகும். துணிவு மிக்க தீரச் செயல்களால் மேன்மையான சூழல் அமையும். பலதரப்பட்ட எண்ணங்களால் குழப்பம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : சாதகமான நாள்.

பூசம் : நிதானம் வேண்டும்.

ஆயில்யம் : குழப்பம் உண்டாகும்.
—————————————
*🕉️சிம்மம்*

ஜூன் 24, 2020

ஆனி 10 – புதன்

வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். தொழிலில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். தாய்மாமன் உறவினர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மகம் : இலாபம் உண்டாகும்.

பூரம் : அமைதி காக்கவும்.

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
—————————————
*🕉️கன்னி*

ஜூன் 24, 2020

ஆனி 10 – புதன்

பேச்சுக்களால் தனலாபம் உண்டாகும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும். கால்நடைகளை வைத்து பராமரிப்பவர்களுக்கு சாதகமான நாள். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் ஏற்படும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். எண்ணிய முயற்சிகளில் வெற்றியும், அபிவிருத்தியும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திரம் : தனலாபம் உண்டாகும்.

அஸ்தம் : சாதகமான நாள்.

சித்திரை : எண்ணங்கள் மேலோங்கும்.
—————————————
*🕉️துலாம்*

ஜூன் 24, 2020

ஆனி 10 – புதன்
பொதுக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய மனை வாங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : உதவிகள் செய்வீர்கள்.

சுவாதி : வாய்ப்புகள் அமையும்.

விசாகம் : மந்தத்தன்மை உண்டாகும்.
—————————————
*🕉️விருச்சகம்*

ஜூன் 24, 2020

ஆனி 10 – புதன்

சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். சிறுதூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றமான சூழல் உண்டாகும். மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் அமையும். செயல்பாடுகளின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

அனுஷம் : மாற்றம் உண்டாகும்.

கேட்டை : அனுபவம் கிடைக்கும்.
—————————————
*🕉️தனுசு*

ஜூன் 24, 2020

ஆனி 10 – புதன்

சுரங்க பணியாளர்கள் பணிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். மனைவியால் சுபவிரயங்கள் உண்டாகும். புதிய நபர்களிடம் உரையாடும் போது பேச்சில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : எச்சரிக்கையுடன் இருக்கவும்.

பூராடம் : விரயங்கள் உண்டாகும்.

உத்திராடம் : கவனம் வேண்டும்.
—————————————
*🕉️மகரம்*

ஜூன் 24, 2020

ஆனி 10 – புதன்

கௌரவ பதவிகளால் உங்களின் மதிப்பு உயரும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : மதிப்புகள் உயரும்.

திருவோணம் : வெற்றி கிடைக்கும்.

அவிட்டம் : வேறுபாடுகள் குறையும்.
—————————————
*🕉️கும்பம்*

ஜூன் 24, 2020

ஆனி 10 – புதன்

மாணவர்கள் கல்வியில் செய்யும் புதுவிதமான முயற்சிகளால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான போட்டிகளை சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : நன்மை உண்டாகும்.

சதயம் : அனுசரித்து செல்லவும்.

பூரட்டாதி : போட்டிகள் விலகும்.
—————————————
*🕉️மீனம்*

ஜூன் 24, 2020

ஆனி 10 – புதன்

நண்பர்களின் மூலம் பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும். நீர்வழி தொழிலால் இலாபம் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். தலைமை அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.

ரேவதி : இன்னல்கள் குறையும்.
—————————————

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.