ஆனி 30 ஜூலை 14 – ராசி பலன்கள்

*🕉️மேஷம்*

ஜூலை 14, 2020

ஆனி 30 – செவ்வாய்

உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழ்நிலை உண்டாகும். தனவரவில் இருந்துவந்த தடைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். மனதில் தோன்றும் புதுவகையான சிந்தனைகளால் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

அஸ்வினி : சாதகமான நாள்.

பரணி : தடைகள் நீங்கும்.

கிருத்திகை : புத்துணர்ச்சி உண்டாகும்.
—————————————
*🕉️ரிஷபம்*

ஜூலை 14, 2020

ஆனி 30 – செவ்வாய்

நீண்ட நாட்களாக இருந்துவந்த சில பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சூழ்நிலை உண்டாகும். மருத்துவ சிகிச்சைகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். எதிர்பாராத பொருள் வரவும், ஆதரவும் கிடைக்கும். மனைவியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நன்மையை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

கிருத்திகை : பிரச்சனைகள் தீரும்.

ரோகிணி : முன்னேற்றமான நாள்.

மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
—————————————
*🕉️மிதுனம்*

ஜூலை 14, 2020

ஆனி 30 – செவ்வாய்

தானியங்களின் மூலம் இலாபம் மேம்படும். பேச்சு திறமையால் பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழல் அமையும். வேலையாட்களின் மூலம் ஆதரவான பலன்கள் கிடைக்கும். இசை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : இலாபம் மேம்படும்.

திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும்.

புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
—————————————
*🕉️கடகம்*

ஜூலை 14, 2020

ஆனி 30 – செவ்வாய்

உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். கூட்டாளிகளிடம் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அனுசரித்து செல்லவும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். சக பணியாளர்களிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.

பூசம் : அனுசரித்து செல்லவும்.

ஆயில்யம் : ஒற்றுமை உண்டாகும்.
—————————————
*🕉️சிம்மம்*

ஜூலை 14, 2020

ஆனி 30 – செவ்வாய்

செய்யும் முயற்சிகளுக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகள் கிடைக்கப்பெறுவீர்கள். தெளிவான சிந்தனைகளின் மூலம் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கிடைக்கும் தகவல்களில் தன்மையை அறிந்து செயல்படவும். தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். இயந்திர வேலைகளில் ஈடுபடுவோர்களுக்கு நுட்ப அறிவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மகம் : அங்கீகாரம் கிடைக்கும்.

பூரம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

உத்திரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
—————————————
*🕉️கன்னி*

ஜூலை 14, 2020

ஆனி 30 – செவ்வாய்

அரசு தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்கவும். வாகனப் பயணங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்லவும். தூரத்து உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். சகோதரர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அனுசரித்து செல்லவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பான முகத்துடன் காணப்படுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.

அஸ்தம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

சித்திரை : குழப்பமான நாள்.
—————————————
*🕉️துலாம்*

ஜூலை 14, 2020

ஆனி 30 – செவ்வாய்

வீர தீரமான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான புதிய செயல்திட்டம் அமைத்து அதை செயல்படுத்துவீர்கள். எழுத்து தெடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். பொறுமை குணத்தால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : ஆர்வம் உண்டாகும்.

சுவாதி : வாய்ப்புகள் சாதகமாகும்.

விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
—————————————
*🕉️விருச்சகம்*

ஜூலை 14, 2020

ஆனி 30 – செவ்வாய்

நிலுவையில் இருந்துவந்த சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவகையான கற்பனைகளும், சிந்தனைகளும் அதிகரிக்கும். குடும்ப பொருளாதாரம் மேம்படும். நெருங்கிய நபர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பூமி விருத்தி தொடர்பான பணிகளில் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

அனுஷம் : பொருளாதாரம் மேம்படும்.

கேட்டை : இலாபம் உண்டாகும்.
—————————————
*🕉️தனுசு*

ஜூலை 14, 2020

ஆனி 30 – செவ்வாய்

கால்நடைகளின் மூலம் இலாபம் மேம்படும். புதுமையான சிந்தனைகள் மூலம் சபைகளில் ஆதரவு உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். உள்ளூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். மற்றவர்களிடம் எதிர்பார்த்திருந்த தன உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்

மூலம் : இலாபம் மேம்படும்.

பூராடம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
—————————————
*🕉️மகரம்*

ஜூலை 14, 2020

ஆனி 30 – செவ்வாய்

சமூக செயல்பாடுகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்துக் கொள்வீர்கள். புதிய தொழில் சம்பந்தமான புதிய தகவல்களை சேர்ப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். நெருக்கமானவர்களின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான அலைச்சல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.

திருவோணம் : புரிதல் உண்டாகும்.

அவிட்டம் : கவனம் வேண்டும்.
—————————————
*🕉️கும்பம்*

ஜூலை 14, 2020

ஆனி 30 – செவ்வாய்

கலை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். மனதில் இருக்கும் பிரச்சனைகளை உடன்பிறந்தவர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் தெளிவான சிந்தனைகள் உண்டாகும். மின்சாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு இலாபம் மேம்படும். வாகன வசதியும் அது தொடர்பான பயணங்களில் அறிமுகமும் கிடைக்கும். மனதிற்கு பிடித்த புதிய ஆடைகளை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : ஆர்வம் உண்டாகும்.

சதயம் : சிந்தனைகள் மேலோங்கும்.

பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
—————————————
*🕉️மீனம்*

ஜூலை 14, 2020

ஆனி 30 – செவ்வாய்

நிலுவையில் இருந்துவந்த பொருட்களின் மூலம் தொழிலில் இலாபம் மேம்படும். முத்திரை தொடர்பான செயல்பாடுகளில் நண்பர்களின் ஆதரவு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : இலாபம் மேம்படும்.

உத்திரட்டாதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.

ரேவதி : மேன்மை உண்டாகும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.