ஆனி 31 ஜூலை 15 ராசி பலன்

*🕉️மேஷம்*

ஜூலை 15, 2020

ஆனி 31 – புதன்

நண்பர்கள் வட்டாரத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத பொருள் வரவால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். புதுமையான செயல்பாடுகளின் மீது ஆர்வம் உண்டாகும். கனிவான பேச்சுக்களின் மூலம் மற்றவர்களை கவர்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அஸ்வினி : நம்பிக்கை அதிகரிக்கும்.

பரணி : மகிழ்ச்சியான நாள்.

கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.
—————————————
*🕉️ரிஷபம்*

ஜூலை 15, 2020

ஆனி 31 – புதன்

மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் போது சற்று நிதானத்துடன் செயல்படவும். இளைய சகோதரர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். அவ்வப்போது ஞாபகமறதி தோன்றி மறையும். மற்றவர்கள் கூறும் ஆலோசனைகளை கூர்ந்து கவனிப்பது நன்மையை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

கிருத்திகை : நிதானத்துடன் செயல்படவும்.

ரோகிணி : ஆதரவான நாள்.

மிருகசீரிஷம் : நன்மை உண்டாகும்.
—————————————
*🕉️மிதுனம்*

ஜூலை 15, 2020

ஆனி 31 – புதன்

உத்தியோகத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் உருவாகும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். கால்நடைகளை வளர்ப்பவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். இழுபறியாக இருந்துவந்த பொருள் வரவுகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேலோங்கும்.

திருவாதிரை : தடைகள் நீங்கும்.

புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
—————————————
*🕉️கடகம்*

ஜூலை 15, 2020

ஆனி 31 – புதன்

உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பூமி விருத்திக்கான செயல்பாடுகள் மற்றும் முயற்சிகள் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். நெருங்கிய நண்பர்களின் மூலம் மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

புனர்பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

பூசம் : முயற்சிகள் மேம்படும்.

ஆயில்யம் : சாதகமான நாள்.
—————————————
*🕉️சிம்மம்*

ஜூலை 15, 2020

ஆனி 31 – புதன்

வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு பேரும், புகழும் மேம்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கேற்ப இலாபம் உண்டாகும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மகம் : முன்னேற்றம் ஏற்படும்.

பூரம் : புகழ் உண்டாகும்.

உத்திரம் : உதவிகள் சாதகமாகும்.
—————————————
*🕉️கன்னி*

ஜூலை 15, 2020

ஆனி 31 – புதன்

அறிமுகமில்லாத புதிய நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நன்மையை அளிக்கும். மருத்துவம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும். தேவையற்ற சிந்தனைகளால் கவலைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாகவே நடைபெறும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : பேச்சுக்களை தவிர்க்கவும்.

அஸ்தம் : நிதானத்துடன் செயல்படவும்.

சித்திரை : கவலைகள் உண்டாகும்.
—————————————
*🕉️துலாம்*

ஜூலை 15, 2020

ஆனி 31 – புதன்

பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனைவியின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். கடன் தொடர்பான தொல்லைகள் குறையும். வாகனங்களின் மூலம் புதிய சிந்தனைகளும், அனுபவமும் உண்டாகும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

சுவாதி : மகிழ்ச்சியான நாள்.

விசாகம் : அனுபவம் உண்டாகும்.
—————————————
*🕉️விருச்சகம்*

ஜூலை 15, 2020

ஆனி 31 – புதன்

பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மக்களின் தொடர்பும், ஆதரவும் கிடைக்கப்பெறுவீர்கள். கிடைக்கும் அதிகாரத்தை சூழ்நிலைக்கு ஏற்ப பயன்படுத்துவது எதிர்ப்புகளை குறைக்கும். நெருங்கிய நபர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

அனுஷம் : எதிர்ப்புகள் குறையும்.

கேட்டை : மகிழ்ச்சி உண்டாகும்.
—————————————
*🕉️தனுசு*

ஜூலை 15, 2020

ஆனி 31 – புதன்

கால் மூட்டுகள் தொடர்பான இடங்களில் வலிகள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் இருக்கும் எண்ணங்களை நெருக்கமானவர்களிடம் பகிர்வதன் மூலம் தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்க இயலும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். தந்தையின் தொழிலில் மேன்மை அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

பூராடம் : சிந்தனைகளை தவிர்க்கவும்.

உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
—————————————
*🕉️மகரம்*

ஜூலை 15, 2020

ஆனி 31 – புதன்

மறைமுக எதிர்ப்புகளை பற்றி அறிந்து கொள்வீர்கள். இறைவழிபாடு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சிலருக்கு அஜீரணக் கோளாறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். வெளியூர் தொடர்பான பயணங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதிற்கு பிடித்த சில புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.

திருவோணம் : பிரச்சனைகள் மறையும்.

அவிட்டம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
—————————————
*🕉️கும்பம்*

ஜூலை 15, 2020

ஆனி 31 – புதன்

வங்கித்துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். உங்கள் மீதான தேவையற்ற வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். அருகில் இருப்பவர்களால் ஆதரவான பலன்கள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களை எண்ணியபடி செய்து முடிப்பீர்கள். மறைமுகமான சக்திகளை அறிந்துக் கொள்வதில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : சாதகமான நாள்.

சதயம் : வதந்திகள் ஏற்படும்.

பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.
—————————————
*🕉️மீனம்*

ஜூலை 15, 2020

ஆனி 31 – புதன்

நண்பர்களின் மூலம் ஆதரவு மற்றும் பொருள் வரவு உண்டாகும். அடமானம் வைத்த பொருட்களை மீட்பதற்கான முயற்சிகள் மேலோங்கும். சேமிப்பதற்கான எண்ணங்கள் மேம்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். புதிய இலக்கை அடைவதற்கான முயற்சிகள் மேம்படும். இணையதளம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : பொருள் வரவு உண்டாகும்.

உத்திரட்டாதி : எண்ணங்கள் மேம்படும்.

ரேவதி : மேன்மை உண்டாகும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.