இன்றைய ராசிபலன் அக்டோபர் 1

இன்றைய ராசிபலன் அக்டோபர் 1

🕉️மேஷம்
அக்டோபர் 01, 2020
புரட்டாசி 15 – வியாழன்

எதிர்பார்த்த உதவிகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். மூத்த சகோதரர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரணி : முன்னேற்றம் உண்டாகும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


🕉️ரிஷபம்
இன்றைய ராசிபலன் அக்டோபர் 1

புரட்டாசி 15 – வியாழன்

ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : இன்னல்கள் குறையும்.
ரோகிணி : வாய்ப்புகள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.


🕉️மிதுனம்
இன்றைய ராசிபலன் அக்டோபர் 1

புரட்டாசி 15 – வியாழன்

பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடை அளித்து மகிழ்வீர்கள். வெளியூர் பணிகளால் மனதில் மாற்றமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும்.
திருவாதிரை : மாற்றமான நாள்.
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.


🕉️கடகம்
இன்றைய ராசிபலன் அக்டோபர் 1

புரட்டாசி 15 – வியாழன்

நண்பர்களின் மூலம் பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
ஆயில்யம் : மந்தமான நாள்.


🕉️சிம்மம்
அக்டோபர் 01, 2020
புரட்டாசி 15 – வியாழன்
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். கணவன் மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
உத்திரம் : காலதாமதம் ஏற்படும்.


🕉️கன்னி
அக்டோபர் 01, 2020
புரட்டாசி 15 – வியாழன்

புதிய மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வர்த்தக மேம்பாட்டிற்கான செயல்களில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். சக பணியாளர்களை அனுசரித்து செல்லவும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.


🕉️துலாம்
அக்டோபர் 01, 2020
புரட்டாசி 15 – வியாழன்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். பணி செய்யும் இடங்களில் மேன்மையான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களை கொண்டு புதிய தொழில்கள் அமைக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நிலத்தில் பாசன வசதியால் இலாபம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.
சுவாதி : எண்ணங்கள் ஈடேறும்.
விசாகம் : நினைவாற்றல் மேலோங்கும்.


🕉️விருச்சகம்
அக்டோபர் 01, 2020
புரட்டாசி 15 – வியாழன்

பொறுமையுடன் புதிய செயல்திட்டங்களை அமைப்பீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசியல் பிரமுகர்கள் அமைதிப்போக்கினை கடைபிடிப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களால் சுபவிரயம் செய்வீர்கள். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். தாயாரின் ஆதரவுகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
விசாகம் : உயர்வு உண்டாகும்.
அனுஷம் : அமைதி வேண்டும்.
கேட்டை : முன்னேற்றம் ஏற்படும்.


🕉️தனுசு
அக்டோபர் 01, 2020
புரட்டாசி 15 – வியாழன்
எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். கால்நடைகளின் மூலம் இலாபம் உண்டாகும். பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : இலாபகரமான நாள்.
பூராடம் : நிதானம் வேண்டும்.
உத்திராடம் : கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.


🕉️மகரம்
அக்டோபர் 01, 2020
புரட்டாசி 15 – வியாழன்

சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் கீர்த்தி உண்டாகும். பொருள் சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
உத்திராடம் : கீர்த்தி உண்டாகும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : வெற்றி உண்டாகும்.


🕉️கும்பம்
அக்டோபர் 01, 2020
புரட்டாசி 15 – வியாழன்

புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். ஜாமீன் கையெழுத்திட்டு மற்றவர்களுக்கு கடன் வாங்கி தருவதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
அவிட்டம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : எண்ணங்கள் தோன்றும்.


🕉️மீனம்
அக்டோபர் 01, 2020
புரட்டாசி 15 – வியாழன்

பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பிறமொழி பேசும் மக்கள் சிலரால் நன்மை உண்டாகும். கல்வி தொடர்பான செயல்பாடுகளால் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். எதிர்பாராத புதிய பொருள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : அனுபவம் உண்டாகும்.
உத்திரட்டாதி : நன்மையான நாள்.
ரேவதி : தீர்வுகள் கிடைக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.