இன்றைய ராசிபலன் அக்டோபர் 02

இன்றைய ராசிபலன் அக்டோபர் 02

🕉️மேஷம்
அக்டோபர் 02, 2020
புரட்டாசி 16 – வெள்ளி

வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவு திருப்திகரமாக அமையும். பிறருக்கு உதவிகள் செய்வதில் விருப்பம் உண்டாகும். மனதில் பல்வேறு குழப்பங்களினால் சோர்வு ஏற்படும். புதிய செயல்திட்டம் அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். கலைஞர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அஸ்வினி : திருப்திகரமான நாள்.
பரணி : சோர்வு உண்டாகும்.
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.


🕉️ரிஷபம்
இன்றைய ராசிபலன் அக்டோபர் 02
புரட்டாசி 16 – வெள்ளி

மனதில் இருந்துவந்த கவலைகள் அகலும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாதத்திறமையால் அனைவரையும் கவர்வீர்கள். உயர் அதிகாரிகள் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பார்கள். எதிர்பாலின மக்களால் ஆதரவான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
கிருத்திகை : நம்பிக்கை அதிகரிக்கும்.
ரோகிணி : அனைவரையும் கவர்வீர்கள்.
மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.


🕉️மிதுனம்
இன்றைய ராசிபலன் அக்டோபர் 02
புரட்டாசி 16 – வெள்ளி

புதிய சிந்தனைகளில் ஆர்வம் உண்டாகும். மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். தொழிலில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றங்களை செய்வீர்கள். கால்நடைகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.
திருவாதிரை : இலாபம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.


🕉️கடகம்
இன்றைய ராசிபலன் அக்டோபர் 02
புரட்டாசி 16 – வெள்ளி

புதிய முயற்சிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். போட்டிகளில் கவனத்துடன் செயல்படவும். பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் நீங்கும். தம்பதிகளுக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : எதிர்ப்புகள் நீங்கும்.
ஆயில்யம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.


🕉️சிம்மம்
அக்டோபர் 02, 2020
புரட்டாசி 16 – வெள்ளி

எதிர்பாராத அலைச்சல்களும், செலவுகளும் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் நிதானமாக இருக்கவும். எடுத்த காரியங்களை செய்து முடிக்க தடை, தாமதம் நேரிடலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மகம் : நிதானம் வேண்டும்.
பூரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


🕉️கன்னி
அக்டோபர் 02, 2020
புரட்டாசி 16 – வெள்ளி

அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவால் இலாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் உதவியால் தொழில் சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : காலதாமதம் நீங்கும்.
அஸ்தம் : ஆதரவு கிடைக்கும்.
சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.


🕉️துலாம்
அக்டோபர் 02, 2020
புரட்டாசி 16 – வெள்ளி

வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தடைகள் அகலும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் காரியசித்தி உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். தாய்மாமனின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். நீண்ட நாள் கனவை நடைமுறைப்படுத்த முயல்வீர்கள். நிர்வாக முடிவுகளில் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : தடைகள் அகலும்.
சுவாதி : காரியசித்தி உண்டாகும்.
விசாகம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.


🕉️விருச்சகம்
அக்டோபர் 02, 2020
புரட்டாசி 16 – வெள்ளி

மனைவியின் ஆதரவால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். பணியில் எதிர்பார்த்த சில மாற்றங்கள் உண்டாகலாம். கோபத்தை விடுத்து அனைவரிடமும் அமைதியுடன் செயல்பட வேண்டும். புத்திக்கூர்மையில் மந்தத்தன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : நிதானம் வேண்டும்.
அனுஷம் : மாற்றங்கள் பிறக்கும்.
கேட்டை : மந்தமான நாள்.


🕉️தனுசு
அக்டோபர் 02, 2020
புரட்டாசி 16 – வெள்ளி

உத்தியோகஸ்தர்கள் பணி தொடர்பான முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். நண்பர்களுக்கு இடையே இருந்துவந்த மனக்கசப்புகள் அகலும். எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்வி சம்பந்தமான வீண் கவலைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : அறிமுகம் கிடைக்கும்.
பூராடம் : மனக்கசப்புகள் அகலும்.
உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.


🕉️மகரம்
அக்டோபர் 02, 2020
புரட்டாசி 16 – வெள்ளி

புதிய தொழில் முயற்சிகளில் எண்ணிய இலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் குறையும். எண்ணிய செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். துணிவுடன் புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : இலாபம் உண்டாகும்.
திருவோணம் : பொறுப்புகள் குறையும்.
அவிட்டம் : சாதகமான நாள்.


🕉️கும்பம்
அக்டோபர் 02, 2020
புரட்டாசி 16 – வெள்ளி

குழந்தைகள் பற்றிய வீண் கவலைகள் அகலும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதாரத்தில் மேன்மை உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் இருந்துவந்த பலவிதமான குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் தனலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அவிட்டம் : கவலைகள் அகலும்.
சதயம் : மேன்மை உண்டாகும்.
பூரட்டாதி : தனலாபம் ஏற்படும்.


🕉️மீனம்
அக்டோபர் 02, 2020
புரட்டாசி 16 – வெள்ளி

கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களில் அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
ரேவதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.