🕉️மேஷம்*
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 18
ஆவணி 02 – செவ்வாய்
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செய்யும் முயற்சிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். புத்திரர்களின் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மனை தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பரணி : பிரச்சனைகள் குறையும்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
—————————————
*🕉️ரிஷபம்*
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 18
ஆவணி 02 – செவ்வாய்
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் தடைபட்ட செயல்களை செய்து முடிப்பதற்கான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : முன்னேற்றம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : அனுகூலம் உண்டாகும்.
—————————————
*🕉️மிதுனம்*
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 18
ஆவணி 02 – செவ்வாய்
மனதில் புதுவிதமான உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். பயணங்களின் மூலம் எதிர்பார்த்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் மூலம் மேன்மை அடைவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டார்களின் ஆதரவுகள் மனதிற்கு ஒருவிதமான தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மிருகசீரிஷம் : உத்வேகம் உண்டாகும்.
திருவாதிரை : மேன்மையான நாள்.
புனர்பூசம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
—————————————
*🕉️கடகம்*
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 18
ஆவணி 02 – செவ்வாய்
வீர தீரமான செயல்களை செய்து அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கனவுகளின் மூலம் மனதில் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும். நீண்ட நாட்களாக இருந்துவந்த குழப்பங்களுக்கு அமைதியுடன் செயல்பட்டால் தெளிவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : பாராட்டப்படுவீர்கள்.
பூசம் : அனுகூலமான நாள்.
ஆயில்யம் : ஆர்வம் அதிகரிக்கும்.
—————————————
*🕉️சிம்மம்*
ஆகஸ்ட் 18, 2020
ஆவணி 02 – செவ்வாய்
வாக்கு சாதுர்யத்தின் மூலம் செயல்களை செய்து முடிப்பீர்கள். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மனதில் கற்பனைத்திறன் மேம்படும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும். கணிப்பொறி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் எண்ணிய எண்ணங்களை பொறுமையுடன் வெளிப்படுத்தினால் வெற்றி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : கற்பனைத்திறன் மேம்படும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
—————————————
*🕉️கன்னி*
ஆகஸ்ட் 18, 2020
ஆவணி 02 – செவ்வாய்
தொழில் சம்பந்தமான சிந்தனைகள் மேம்படும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் மதிப்புகள் அதிகரிக்கும். கற்ற கலைகளின் மூலம் இலாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் மீதான மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : மதிப்புகள் அதிகரிக்கும்.
—————————————
*🕉️துலாம்*
ஆகஸ்ட் 18, 2020
ஆவணி 02 – செவ்வாய்
உயர் அதிகாரிகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் செயல்களை செய்து முடிப்பதற்கு ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் தொடர்பான வாய்ப்புகளில் இருந்துவந்த காலதாமதம் அகலும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். உலகியல் நடவடிக்கைகள் பற்றிய புதுவிதமான கண்ணோட்டத்துடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : காலதாமதம் அகலும்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
—————————————
*🕉️விருச்சகம்*
ஆகஸ்ட் 18, 2020
ஆவணி 02 – செவ்வாய்
வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகளில் சாதகமான சூழல் உண்டாகும். மனதிற்கு பிடித்த தெய்வங்களை பிரார்த்தனை செய்வீர்கள். ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகளும், சூழ்நிலைகளும் உண்டாகும். தொடை சார்ந்த பகுதிகளில் அவ்வப்போது சிறு சிறு வலிகள் ஏற்பட்டு மறையும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : ஆசைகள் நிறைவேறும்.
விசாகம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
—————————————
*🕉️தனுசு*
ஆகஸ்ட் 18, 2020
ஆவணி 02 – செவ்வாய்
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். இணைய வர்த்தகம் சார்ந்த முதலீடுகளில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளால் எதிர்காலம் பற்றிய குழப்பமான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும். முத்திரை தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
உத்திராடம் : விழிப்புணர்வு வேண்டும்.
—————————————
*🕉️மகரம்*
ஆகஸ்ட் 18, 2020
ஆவணி 02 – செவ்வாய்
தாய்மாமன் வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். செய்யும் காரியங்களில் இருந்துவந்த தடைகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உங்களின் மீது இருந்துவந்த அவதூறான வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சேவை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் மற்றும் புதிய நபர்களின் அறிமுகம் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : நன்மை உண்டாகும்.
திருவோணம் : முடிவுகள் கிடைக்கும்.
அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.
—————————————
*🕉️கும்பம்*
ஆகஸ்ட் 18, 2020
ஆவணி 02 – செவ்வாய்
வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். உத்தியோகம் தொடர்பான முடிவுகளை எடுப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். உடன் பணிபுரிபவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் சிறு சிறு மனக்கசப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : மனக்கசப்புகள் உண்டாகும்.
—————————————
*🕉️மீனம்*
ஆகஸ்ட் 18, 2020
ஆவணி 02 – செவ்வாய்
சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமையாக இருப்பீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களை மனதிற்கு பிடித்த வகையில் மாற்றி அமைப்பீர்கள். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைப்பதற்கு சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரட்டாதி : மாற்றி அமைப்பீர்கள்.
ரேவதி : சாதகமான நாள்.