இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 22 மேஷம்
ஆவணி 06 – சனி
மாமன் வழியில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்வுடன் இருப்பது நன்மை அளிக்கும். பிள்ளைகளின் வழியில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : மனக்கசப்புகள் நீங்கும்.
பரணி : செலவுகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.
🕉️ரிஷபம்
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 22
ஆவணி 06 – சனி
போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உங்களின் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : வெற்றி கிடைக்கும்.
ரோகிணி : அனுபவ அறிவு வெளிப்படும்.
மிருகசீரிஷம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
🕉️மிதுனம்
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 22
ஆவணி 06 – சனி
உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். தனவரவு திருப்தியை தரும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
திருவாதிரை : ஆதரவான நாள்.
புனர்பூசம் : நட்பு கிடைக்கும்.
🕉️கடகம்
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 22
ஆவணி 06 – சனி
மனதில் எதையும் சமாளிக்கும் திறமையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும்.
பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஆயில்யம் : தீர்வு காண்பீர்கள்.
🕉️சிம்மம்
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 22
ஆவணி 06 – சனி
புண்ணிய தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் மனம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : சிந்தித்து செயல்படவும்.
பூரம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
🕉️கன்னி
ஆகஸ்ட் 22, 2020
ஆவணி 06 – சனி
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். நெருக்கமானவர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். குடும்பத்தாருடன் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : அறிமுகம் கிடைக்கும்.
அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
சித்திரை : சாதகமான நாள்.
🕉️துலாம்
ஆகஸ்ட் 22, 2020
ஆவணி 06 – சனி
வீட்டிற்கு தேவையான வசதியை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் செய்யும் சில மாற்றங்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். சில செயல்களை பக்குவமாக பேசி செய்து முடிப்பீர்கள். இடமாற்றம் தொடர்பான சுபச்செய்திகள் கிடைக்கும். மற்றவர்களை நம்பி எந்தவொரு வேலையையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : வசதிகள் மேம்படும்.
சுவாதி : சாதகமான பலன்கள் உண்டாகும்.
விசாகம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
🕉️விருச்சகம்
ஆகஸ்ட் 22, 2020
ஆவணி 06 – சனி
அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான சூழல் உண்டாகும். குடும்பத்தில் உங்களின் மீதான மதிப்பும், மரியாதையும் உயரும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : அபிவிருத்தி செய்வீர்கள்.
கேட்டை : மதிப்புகள் உயரும்.
🕉️தனுசு
ஆகஸ்ட் 22, 2020
ஆவணி 06 – சனி
உத்தியோகத்தில் எதிர்பாராத பொறுப்புகளும், பதவி உயர்வும் கிடைக்கும். பழைய கடன் பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசாங்கத்தின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : பதவி உயர்வு கிடைக்கும்.
பூராடம் : அனுகூலம் உண்டாகும்.
உத்திராடம் : வாய்ப்புகளை தவறவிடாதீர்கள்.
🕉️மகரம்
ஆகஸ்ட் 22, 2020
ஆவணி 06 – சனி
எண்ணிய காரியங்கள் எண்ணியபடி நிறைவேறும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் இலாபம் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திராடம் : எண்ணங்கள் நிறைவேறும்.
திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.
அவிட்டம் : இலாபம் அதிகரிக்கும்.
🕉️கும்பம்
ஆகஸ்ட் 22, 2020
ஆவணி 06 – சனி
திட்டமிட்ட பணிகளில் காலதாமதம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். மனதில் குழப்பமும், கவலையும் உண்டாகும். பணியில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வீண் அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் விரயங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : காலதாமதம் உண்டாகும்.
சதயம் : குழப்பமான நாள்.
பூரட்டாதி : மனச்சோர்வு உண்டாகும்.
🕉️மீனம்
ஆகஸ்ட் 22, 2020
ஆவணி 06 – சனி
மனதிற்கு நெருக்கமானவர்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக செயல்படுவீர்கள். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். நண்பர்களின் மூலம் ஆதரவு உண்டாகும். உழைப்பிற்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
உத்திரட்டாதி : கலகலப்பான நாள்.
ரேவதி : பாராட்டுகள் கிடைக்கும்.