இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 30

🕉️மேஷம்
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 30

ஆவணி 14 – ஞாயிறு
கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் நன்மை ஏற்படும். தொழில் சம்பந்தமான பயணங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அஸ்வினி : முன்னேற்றமான நாள்.
பரணி : இன்னல்கள் குறையும்.

கிருத்திகை : அனுகூலம் ஏற்படும்.

🕉️ரிஷபம்
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 30
ஆவணி 14 – ஞாயிறு
தாயாரிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை மாறுபடும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : சிந்தனைகள் மேம்படும்.

மிருகசீரிஷம் : நம்பிக்கை மாறுபடும்.

🕉️மிதுனம்
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 30

ஆவணி 14 – ஞாயிறு
இளைய உடன்பிறப்புகளிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். முக்கியமான பேச்சுவார்த்தைகளின் போது பொறுமையை கடைபிடிக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். கவனக்குறைவினால் சில அவப்பெயர்கள் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : அமைதி வேண்டும்.
திருவாதிரை : பொறுமையுடன் செயல்படவும்.

புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.

🕉️கடகம்
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 30

ஆவணி 14 – ஞாயிறு
குடும்ப உறுப்பினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் நினைத்த எண்ணங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வர்த்தக முதலீடுகள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பும், புரிதலும் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

ஆயில்யம் : அன்பு மேம்படும்.

🕉️சிம்மம்
இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 30
ஆவணி 14 – ஞாயிறு
எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் நேரிடும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சலுக்கு பின்பே அனுகூலம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் கருத்துக்களை பகிரும்போது சிந்தித்து செயல்பட வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மகம் : பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
பூரம் : காலதாமதம் நேரிடும்.

உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

🕉️கன்னி
ஆகஸ்ட் 30, 2020
ஆவணி 14 – ஞாயிறு
சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். செய்யும் செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகளின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். கால்நடைகளிடம் விழிப்புணர்வுடன் செயல்படுவதன் மூலம் இலாபம் மேம்படும். தம்பதியர்களின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : தடைகள் அகலும்.
அஸ்தம் : புரிதல் உண்டாகும்.

சித்திரை : இலாபம் மேம்படும்.

🕉️துலாம்
ஆகஸ்ட் 30, 2020
ஆவணி 14 – ஞாயிறு
தொழில் தொடர்பான செயல்பாடுகளில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மன அமைதியுடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : பொருளாதாரம் மேம்படும்.
சுவாதி : வெற்றி அடைவீர்கள்.

விசாகம் : சுபிட்சமான நாள்.

🕉️விருச்சகம்
ஆகஸ்ட் 30, 2020
ஆவணி 14 – ஞாயிறு
வியாபாரம் தொடர்பான செயல்பாடுகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். பணிபுரியும் இடங்களில் செல்வாக்கும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மேலோங்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : செயல்பாடுகள் அதிகரிக்கும்.
அனுஷம் : காலதாமதம் அகலும்.

கேட்டை : சாதகமான நாள்.

🕉️தனுசு
ஆகஸ்ட் 30, 2020
ஆவணி 14 – ஞாயிறு
மருத்துவ பணியில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அங்கீகாரமும், செல்வாக்கும் அதிகரிக்கும். சட்டம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட தூர பயணங்கள் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நேர்மைக்கு உண்டான பாராட்டுகளும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
பூராடம் : சிந்தனைகள் மேம்படும்.

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

🕉️மகரம்
ஆகஸ்ட் 30, 2020
ஆவணி 14 – ஞாயிறு
காப்பீடு தொடர்பான செயல்களில் தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். செயல்பாடுகளில் உள்ள சோர்வினால் கடைசி நிமிடத்தில் காரியத்தை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உபரி வருமானத்தின் மூலம் பொருளாதாரம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
உத்திராடம் : தனவரவுகள் கிடைக்கும்.
திருவோணம் : எண்ணங்கள் மேம்படும்.

அவிட்டம் : காரியசித்தி உண்டாகும்.

🕉️கும்பம்
ஆகஸ்ட் 30, 2020
ஆவணி 14 – ஞாயிறு
வெளியூர் தொடர்பான பயணங்கள் சார்ந்த சிந்தனைகளும், செயல்பாடுகளும் மேம்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த சில பிரச்சனைகளை முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். மனதிற்கு பிடித்த ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளில் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : செயல்பாடுகள் மேம்படும்.
சதயம் : தீர்வுகள் கிடைக்கும்.

பூரட்டாதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.

🕉️மீனம்
ஆகஸ்ட் 30, 2020
ஆவணி 14 – ஞாயிறு
மறைமுகமாக இருந்துவந்த சில தடைகளை தகர்த்தெறிந்து எண்ணிய இலக்கை அடைவீர்கள். மனதில் இருந்துவந்த ஆசைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். வாகனப் பயணங்களில் நிதானத்துடன் செல்ல வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : தடைகள் அகலும்.
உத்திரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.
ரேவதி : வெற்றிகரமான நாள்.
‐————–‐———————–

சம்பத் குமார்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.