இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 5

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 5

🕉️மேஷம்*

ஆடி 21 – புதன்

இளைய சகோதரர்களின் மூலம் ஆதாயமான பலன்கள் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

அஸ்வினி : ஆதாயமான நாள்.

பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

கிருத்திகை : சுபச்செய்திகள் கிடைக்கும்.
—————————————

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 5


*🕉️ரிஷபம்*

ஆடி 21 – புதன்

புதிய நபர்களின் மூலம் தொழில் சார்ந்த வாய்ப்புகள் ஏற்படும். விலை உயர்ந்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். குலதெய்வ வழிபாடு தொடர்பான எண்ணங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

ரோகிணி : அனுகூலம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : பாராட்டப்படுவீர்கள்.
—————————————

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 5

*🕉️மிதுனம்*

ஆடி 21 – புதன்

மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றும். எதிர்காலம் சம்பந்தமான செயல்பாடுகளில் தயக்கமும், பயமும் ஏற்பட்டு மறையும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த துறையில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : எண்ணங்கள் தோன்றும்.

திருவாதிரை : விழிப்புணர்வு வேண்டும்.

புனர்பூசம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
—————————————

இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 5

*🕉️கடகம்*

ஆடி 21 – புதன்

பழைய நினைவுகளின் மூலம் மனதில் சோர்வும், செயல்பாடுகளில் காலதாமதமும் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் முழு கவனத்துடன் செயல்படுவதன் மூலம் தேவையற்ற அவப்பெயரை தவிர்க்கலாம். வர்த்தகம் தொடர்பான புதிய முதலீடுகளில் நிபுணர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவு செய்யவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும்.

பூசம் : கவனம் வேண்டும்.

ஆயில்யம் : ஆலோசனைகள் தேவை.
—————————————
*🕉️சிம்மம்*

ஆகஸ்டு 05, 2020

ஆடி 21 – புதன்

நண்பர்களின் மூலம் வெளியூர் பயணங்கள் மற்றும் தொழில் சார்ந்த சில ஆலோசனைகள் கிடைக்கும். வர்த்தகம் சம்பந்தமான பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் பெரியோர்களின் வழிகாட்டுதல் மனத்தெளிவை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : முன்னேற்றமான நாள்.

பூரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.

உத்திரம் : மனத்தெளிவு ஏற்படும்.
—————————————
*🕉️கன்னி*

ஆகஸ்டு 05, 2020

ஆடி 21 – புதன்

பங்காளி வகை உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சம்பந்தமான செயல்பாடுகளில் புதுவிதமான ஆலோசனைகளும், கண்ணோட்டங்களும் ஏற்படும். தந்தைவழி உறவினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் இலாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் உங்களின் மீதான நன்மதிப்பு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.

அஸ்தம் : அனுகூலமான நாள்.

சித்திரை : இலாபம் கிடைக்கும்.
—————————————
*🕉️துலாம்*

ஆகஸ்டு 05, 2020

ஆடி 21 – புதன்

குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியும், மாற்றங்களும் ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனைவிவழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சில முதலீடுகள் பற்றிய தெளிவான சிந்தனைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி : சாதகமான நாள்.

விசாகம் : சிந்தனைகள் உண்டாகும்.
—————————————
*🕉️விருச்சகம்*

ஆகஸ்டு 05, 2020

ஆடி 21 – புதன்

உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கால்நடைகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும், அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தாயிடம் அவ்வப்போது சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : விழிப்புணர்வு வேண்டும்.

அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கேட்டை : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
—————————————
*🕉️தனுசு*

ஆகஸ்டு 05, 2020

ஆடி 21 – புதன்

காது தொடர்பான உபாதைகள் சற்று குறையும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் சாதகமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பம் சார்ந்த சில தெளிவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : உபாதைகள் குறையும்.

பூராடம் : சாதகமான நாள்.

உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
—————————————
*🕉️மகரம்*

ஆகஸ்டு 05, 2020

ஆடி 21 – புதன்

சுபகாரியங்கள் தொடர்பான சுபச்செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். கருத்துக்களை எடுத்துரைக்கும் விதத்தில் புதுவிதமான செயல்முறைகளை கையாண்டு அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். இழந்த சில பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.

திருவோணம் : பாராட்டப்படுவீர்கள்.

அவிட்டம் : சாதகமான சூழல் உண்டாகும்.
—————————————
*🕉️கும்பம்*

ஆகஸ்டு 05, 2020

ஆடி 21 – புதன்

மனதில் தேவையற்ற சிந்தனைகளால் குழப்பமும், தூக்கமின்மையும் ஏற்படலாம். ஆகவே மனதில் இருக்கும் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் தெளிவு உண்டாகும். உத்தியோகம் தொடர்பான சில இடமாற்றங்கள் மற்றும் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் சிலருக்கு ஏற்படும். மாணவர்கள் கல்வியில் முழு கவனத்துடன் ஈடுபடுவதன் மூலம் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : குழப்பங்கள் உண்டாகும்.

சதயம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பூரட்டாதி : கவனம் வேண்டும்.
—————————————
*🕉️மீனம்*

ஆகஸ்டு 05, 2020

ஆடி 21 – புதன்

பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் சில அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த செயல்பாடுகளை செய்து முடிப்பதற்கான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.

உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.

ரேவதி : ஆதரவு கிடைக்கும்.

சம்பத் குமார்

இன்றைய பஞ்சாங்கம்

About Author