மேஷம்*
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 02
ஆவணி 17 – புதன்
ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான சூழல் உண்டாகும். சங்கீத பயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். இணையதளம் சார்ந்த பணியில் இருப்பவர்களுக்கு இலாபம் உண்டாகும். செய்யும் செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். முக்கிய முடிவுகளில் பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எடுக்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : முன்னேற்றம் ஏற்படும்.
பரணி : இலாபம் உண்டாகும்.
கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.
🕉️ரிஷபம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 02
ஆவணி 17 – புதன்
கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். வாக்குவன்மையால் பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் ஆதரவால் தனவரவு மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
ரோகிணி : தனவரவு மேம்படும்.
மிருகசீரிஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
🕉️மிதுனம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 02
ஆவணி 17 – புதன்
தொழில் தொடர்பாக முக்கிய பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்கும். நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பிற்கான முயற்சிகள் ஈடேறும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். உடல்நலத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : முயற்சிகள் ஈடேறும்.
புனர்பூசம் : சிக்கல்கள் குறையும்.
🕉️கடகம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 02
ஆவணி 17 – புதன்
மனதில் ஒருவிதமான பதற்றமான சூழல் உண்டாகும். ஆவணங்களை கையாளும்போது நிதானம் வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசும்போது கவனத்துடன் இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக செயல்படவும். எண்ணிய செயல்கள் ஈடேறுவதில் மந்தத்தன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : கவனம் தேவை.
ஆயில்யம் : மந்தத்தன்மை உண்டாகும்.
🕉️சிம்மம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 02
ஆவணி 17 – புதன்
தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். புதிய நபர்களின் வரவால் சுபவிரயம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : மேன்மையான நாள்.
பூரம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
🕉️கன்னி
செப்டம்பர் 02, 2020
ஆவணி 17 – புதன்
புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். பொதுக்கூட்ட பேச்சுக்களால் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். வாரிசுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : முயற்சிகள் மேம்படும்.
அஸ்தம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
சித்திரை : தெளிவு கிடைக்கும்.
🕉️துலாம்
செப்டம்பர் 02, 2020
ஆவணி 17 – புதன்
மகான்களின் தரிசனம் கிடைக்கும். தர்ம ஸ்தாபனங்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். அனைவரிடத்திலும் மரியாதைகள் உயரும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளை நிதானத்துடன் கையாண்டு முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
சித்திரை : சுபச்செய்திகள் கிடைக்கும்.
சுவாதி : மரியாதைகள் உயரும்.
விசாகம் : புத்துணர்ச்சியான நாள்.
🕉️விருச்சகம்
செப்டம்பர் 02, 2020
ஆவணி 17 – புதன்
குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். கலை பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி தொடர்பான செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : பொறுமை வேண்டும்.
கேட்டை : அறிமுகம் கிடைக்கும்.
🕉️தனுசு
செப்டம்பர் 02, 2020
ஆவணி 17 – புதன்
தன்னம்பிக்கையுடன் அனைத்து காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அமைதியுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : அமைதி வேண்டும்.
பூராடம் : ஒற்றுமை மேலோங்கும்.
உத்திராடம் : எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
🕉️மகரம்
செப்டம்பர் 02, 2020
ஆவணி 17 – புதன்
தொழில் சார்ந்த துணிச்சலான முடிவுகளின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளை குறை சொல்வதை தவிர்க்கவும். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் பொருளாதாரம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : மாற்றமான நாள்.
திருவோணம் : தெளிவு பிறக்கும்.
அவிட்டம் : பொருளாதாரம் மேம்படும்.
🕉️கும்பம்
செப்டம்பர் 02, 2020
ஆவணி 17 – புதன்
உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வீடு மற்றும் வாகனத்தை மனதிற்கு பிடித்தாற்போல் மாற்றி அமைப்பீர்கள். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : இடமாற்றம் உண்டாகும்.
சதயம் : விருப்பங்கள் ஈடேறும்.
பூரட்டாதி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
🕉️மீனம்
செப்டம்பர் 02, 2020
ஆவணி 17 – புதன்
தொழில் மற்றும் உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். பயணங்கள் தொடர்பான செயல்களில் நிதானம் வேண்டும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : திருப்தியான நாள்.
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.