இன்றைய ராசிபலன் செப்டம்பர் 8

மேஷம்*
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 8
ஆவணி 23 – செவ்வாய்
பூர்வீக சொத்துக்களை கொண்டு புதிய தொழில்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாரிசுகளின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும். உயர் கல்விக்கான முயற்சிகள் நல்ல பலன்களை தரும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : முயற்சிகள் மேம்படும்.
பரணி : சுபவிரயங்கள் ஏற்படும்.

கிருத்திகை : நன்மை உண்டாகும்.

🕉️ரிஷபம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 8

ஆவணி 23 – செவ்வாய்
உடல் தோற்றப்பொலிவில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களிடம் உறவுநிலை மேம்படும். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். இளைய சகோதரர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.
ரோகிணி : உறவுநிலை மேம்படும்.

மிருகசீரிஷம் : இலாபம் உண்டாகும்.

🕉️மிதுனம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 8

ஆவணி 23 – செவ்வாய்
உடல்நலத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். கடன் தொல்லைகள் குறையும். சிறு தூர பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : சுபிட்சம் உண்டாகும்.
திருவாதிரை : நிதானம் வேண்டும்.

புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.

🕉️கடகம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 8

ஆவணி 23 – செவ்வாய்
சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். மூத்த சகோதரர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.

ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.

🕉️சிம்மம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 8

ஆவணி 23 – செவ்வாய்
தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்கள் புத்திக்கூர்மையின் மூலம் பாராட்டப்படுவீர்கள். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும். அரசு தொடர்பான காரியங்களில் ஆதாயம் உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மகம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூரம் : பாராட்டப்படுவீர்கள்.

உத்திரம் : ஆதாயம் உண்டாகும்.

🕉️கன்னி
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 8

ஆவணி 23 – செவ்வாய்
தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். திடீர் யோகத்தால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
அஸ்தம் : செல்வாக்கு உயரும்.

சித்திரை : மனம் மகிழ்வீர்கள்.

🕉️துலாம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 8

ஆவணி 23 – செவ்வாய்
பணியில் உள்ளவர்களுக்கு தேவையற்ற கவலைகள் தோன்றும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். எதிர்பாராத வீண் அலைச்சல்கள் உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
சித்திரை : கவலைகள் தோன்றும்.
சுவாதி : மாற்றங்கள் உண்டாகும்.

விசாகம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

🕉️விருச்சகம்
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 8

ஆவணி 23 – செவ்வாய்
தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். சர்வதேச வணிகம் எதிர்பார்த்த பலன்களை தரும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : மேன்மை உண்டாகும்.
அனுஷம் : அபிவிருத்தி ஏற்படும்.

கேட்டை : சாதகமான நாள்.

🕉️தனுசு
இன்றைய ராசிபலன் செப்டம்பர் 8ஆவணி 23 – செவ்வாய்
தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். எண்ணிய முயற்சிகள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள்.

உத்திராடம் : முயற்சிகள் ஈடேறும்.

🕉️மகரம்
செப்டம்பர் 08, 2020
ஆவணி 23 – செவ்வாய்
தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடக்கவும். தொழில் அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : தன்னம்பிக்கை மேம்படும்.
திருவோணம் : இலாபம் அடைவீர்கள்.

அவிட்டம் : அமைதி வேண்டும்.

🕉️கும்பம்
செப்டம்பர் 08, 2020
ஆவணி 23 – செவ்வாய்
பொதுநலத்திற்கான செயல்பாடுகளில் எண்ணங்கள் ஈடுபடும். நீர்வழி தொழிலின் மூலம் இலாபம் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நண்பர்களுடன் இணைந்து புதிய செயல்களை செய்வதன் மூலம் தனலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : இலாபம் அதிகரிக்கும்.
சதயம் : முடிவுகள் கிடைக்கும்.

பூரட்டாதி : தனலாபம் உண்டாகும்.

🕉️மீனம்
செப்டம்பர் 08, 2020
ஆவணி 23 – செவ்வாய்
முயற்சிகள் ஈடேறக்கூடிய அனுகூலமான சூழல் உண்டாகும். கால்நடைகள் வளர்ப்பவர்களுக்கு சில விரயங்கள் ஏற்படும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசியல் பிரமுகர்கள் அமைதி போக்கினை கடைபிடிப்பது நல்லது. உடன்பிறப்புகளின் மூலம் சுபவிரயங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
பூரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.
உத்திரட்டாதி : விரயங்கள் ஏற்படும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சம்பத் குமார்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.