இன்றைய ராசி பலன்கள் வெள்ளிக்கிழமை 17/04/2020

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்
செய்யும் செயல்களில் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் சாதகமாக அமையும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 6.
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

🌟அஸ்வினி : கவனம் வேண்டும்.
🌟பரணி : மாற்றம் பிறக்கும்.
🌟கிருத்திகை : செலவுகள் குறையும்.


🌈ரிஷபம்
மனதில் நினைத்த எண்ணங்கள் கைகூடும். சுபச்செயல்கள் தொடர்பான வழிகாட்டுதல் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி அடையும். விருப்பமான இடங்களுக்கு சென்று மனம் மகிழ்வீர்கள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 9.
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

🌟கிருத்திகை : எண்ணங்கள் கைகூடும்.
🌟ரோகிணி : வெற்றி கிடைக்கும்.
🌟மிருகசீரிஷம் : ஆசைகள் நிறைவேறும்.


🌈மிதுனம்
முக்கிய முடிவுகளில் மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவு எடுக்கவும். உத்தியோகம் தொடர்பான செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். வியாபாரத்தில் இலாபம் மேம்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 3.
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

🌟மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.
🌟திருவாதிரை : இலாபம் மேம்படும்.
🌟புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.


🌈கடகம்
உத்தியோகத்தில் மற்றவர்களின் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நன்று. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லவும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படலாம்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 6.
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

🌟புனர்பூசம் : அமைதி வேண்டும்.
🌟பூசம் : அனுசரித்து செல்லவும்.
🌟ஆயில்யம் : செலவுகள் ஏற்படலாம்.


🌈சிம்மம்
முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் ஒற்றுமை மேம்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும். உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 2.
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

🌟மகம் : அறிமுகம் கிடைக்கும்.
🌟பூரம் : ஒற்றுமை மேம்படும்.
🌟உத்திரம் : ஆதரவு பெருகும்.


🌈கன்னி
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். பழைய கடன் பிரச்சனைகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை செய்யும்போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 3.
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.

🌟உத்திரம் : இடமாற்றம் உண்டாகலாம்.
🌟அஸ்தம் : இன்னல்கள் குறையும்.
🌟சித்திரை : எச்சரிக்கை வேண்டும்.


🌈துலாம்
நிலுவையில் இருந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் மத்தியில் புகழ் மற்றும் கௌரவம் உயரும். வாகன வசதிகள் பெருகும். உத்தியோகத்தில் தலைமை அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 9.
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

🌟சித்திரை : காரியசித்தி உண்டாகும்.
🌟சுவாதி : வசதிகள் பெருகும்.
🌟விசாகம் : ஆதாயம் உண்டாகும்.


🌈விருச்சிகம்
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகளை மாறுபட்ட அணுகுமுறையால் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப பெரியோர்களிடம் நிதானத்தோடு செயல்படவும்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 6.
💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

🌟விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
🌟அனுஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
🌟கேட்டை : விருப்பங்கள் நிறைவேறும்.


🌈தனுசு
பிள்ளைகளிடம் கனிவுடன் நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். அலைச்சல் சம்பந்தமான பணிகளால் சோர்வு ஏற்படும். உறவினர்களின் எதிர்பாராத வருகை உண்டாகும். கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 8.
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

🌟மூலம் : கனிவு வேண்டும்.
🌟பூராடம் : சோர்வு ஏற்படும்.
🌟உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.


🌈மகரம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய நபர்கள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டார்களின் ஆதரவு பெருகும்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 5.
💠அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்.

🌟உத்திராடம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.
🌟திருவோணம் : துரிதம் ஏற்படும்.
🌟அவிட்டம் : ஆதரவு பெருகும்.

🌈கும்பம்
உணர்ச்சி வசப்படாமல் விவேகத்துடன் செயல்படவும். அந்நியர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறி அகலும். மனதில் நினைத்த செயல்களை அலைந்து திரிந்து செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 1.
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.

🌟அவிட்டம் : விவேகத்துடன் செயல்படவும்.
🌟சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
🌟பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.


🌈மீனம்
சொத்துப் பிரச்சனைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக சில பிரபலமானவர்களின் சந்திப்பு நிகழும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு .
💠அதிர்ஷ்ட எண் : 3.
💠அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீலம்.

🌟பூரட்டாதி : தீர்வு கிடைக்கும்.
🌟உத்திரட்டாதி : சந்திப்பு நிகழும்.
🌟ரேவதி : ஆதாயம் உண்டாகும்.✒✒🙏🙏🙏🙏🙏

சம்பத் குமார்

இன்றைய பஞ்சாங்கம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.