இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 1 மேஷம்
ஆடி 17 – சனி
நண்பர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். பொருளாதாரம் சார்ந்த சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகள் மேம்படும். இளைய உடன்பிறப்புகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : ஆதரவான நாள்.
பரணி : சிந்தனைகள் மேம்படும்.
கிருத்திகை : வேறுபாடுகள் அகலும்.
—————————————
இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 1 ரிஷபம்
ஆடி 17 – சனி
உத்தியோகம் சம்பந்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதை குறைத்துக் கொள்வது சிறப்பாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். எதிர்பாராத சில செயல்பாடுகளின் மூலம் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
ரோகிணி : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.
மிருகசீரிஷம் : பயணங்கள் மேலோங்கும்.
—————————————
*🕉️மிதுனம்*
இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 1
ஆடி 17 – சனி
உயர் அதிகாரிகளிடத்தில் உங்களின் மீதான கருத்துகள் மாறுபடும். பெற்றோர்களின் ஆரோக்கியம் சம்பந்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கலை நுட்பமான சிந்தனைகள் அதிகரிக்கும். சில மறைமுக செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வுகளை புரிந்துகொள்வதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : கருத்துகள் மாறுபடும்.
திருவாதிரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.
—————————————
*🕉️கடகம்*
இன்றைய ராசி பலன் ஆகஸ்ட் 1
ஆடி 17 – சனி
புதிய மனை தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் உண்டாகும். உறவினர்களிடத்தில் கருத்துகளை பரிமாறும் போது கவனம் வேண்டும். சபை தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகளும், சில புரிதலும் உண்டாகும். உலக நிகழ்வுகளின் மூலம் மனதில் சில கசப்பான சூழ்நிலைகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூசம் : முன்னேற்றமான நாள்.
ஆயில்யம் : சங்கடங்கள் உண்டாகும்.
—————————————
*🕉️சிம்மம்*
ஆகஸ்டு 01, 2020
ஆடி 17 – சனி
தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் மனதளவில் தெளிவு கிடைக்கப்பெறுவீர்கள். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள் மற்றும் எண்ணங்களின் மூலம் இலாபம் அடைவீர்கள். மூத்த உடன்பிறப்புகளிடம் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஆதரவான சூழ்நிலைகள் அமையும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : தெளிவு கிடைக்கும்.
பூரம் : ஆதரவான நாள்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
—————————————
*🕉️கன்னி*
ஆகஸ்டு 01, 2020
ஆடி 17 – சனி
சுயதொழில் புரிவோருக்கு தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த ஆதரவான சூழல் அமையும். மாணவர்களுக்கு தொழிற்கல்வி சார்ந்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சம்பந்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : இலாபம் கிடைக்கும்.
அஸ்தம் : ஆதரவான நாள்.
சித்திரை : கவனம் வேண்டும்.
—————————————
*🕉️துலாம்*
ஆகஸ்டு 01, 2020
ஆடி 17 – சனி
சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு பெரியோர்களின் ஆதரவுகளால் தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தந்தையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : மாற்றம் உண்டாகும்.
சுவாதி : தீர்வு கிடைக்கும்.
விசாகம் : இன்னல்கள் குறையும்.
—————————————
*🕉️விருச்சகம்*
ஆகஸ்டு 01, 2020
ஆடி 17 – சனி
நண்பர்களிடம் கருத்துக்களை பரிமாறும் பொழுது சிந்தித்து செயல்பட வேண்டும். தம்பதிகளுக்குள் சிறு சிறு வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். வர்த்தகம் தொடர்பான பணிகளின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். திறமையை வெளிப்படுத்துவதற்கான எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
அனுஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
கேட்டை : வாய்ப்புகள் சாதகமாகும்.
—————————————
*🕉️தனுசு*
ஆகஸ்டு 01, 2020
ஆடி 17 – சனி
உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் மூலம் ஆதரவான சூழல் கிடைக்கப்பெறுவீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் நற்செய்திகள் கிடைக்கும். தொலைந்துபோன சில பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மூலம் : ஆதரவான நாள்.
பூராடம் : நற்செய்திகள் கிடைக்கும்.
உத்திராடம் : வாய்ப்புகள் ஏற்படும்.
—————————————
*🕉️மகரம்*
ஆகஸ்டு 01, 2020
ஆடி 17 – சனி
இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சில நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புத்திரர்களின் மூலம் சுப விரயங்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திராடம் : நெருக்கடியான நாள்.
திருவோணம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : அனுபவங்கள் கிடைக்கும்.
—————————————
*🕉️கும்பம்*
ஆகஸ்டு 01, 2020
ஆடி 17 – சனி
விவசாய பணிகளின் மூலம் மேன்மை உண்டாகும். தொழில் சார்ந்த துறையில் நுட்ப அறிவினால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையப்பெறுவீர்கள். உயர் அதிகாரிகளால் உத்தியோகத்தில் ஆதரவுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.
சதயம் : முன்னேற்றமான நாள்.
பூரட்டாதி : ஆதரவுகள் அதிகரிக்கும்.
—————————————
*🕉️மீனம்*
ஆகஸ்டு 01, 2020
ஆடி 17 – சனி
பதவி உயர்விற்கான முயற்சிகள் மற்றும் அதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். இளைய உடன்பிறப்புகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். மனதிற்குப் பிடித்த அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனப் பயணங்களில் சற்று நிதானத்துடன் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
ரேவதி : நிதானத்துடன் செயல்படவும்.