உச்சம் – நூறு ஜோதிஷ வார்த்தைகள்

”மௌளீ எப்படி இருக்கீங்க”

“நல்லாருக்கேன் ராம்கி சார்..

நீங்க whatsapp ல் கேட்டிருந்த கேள்வி தானே”

“ஆமாம் நீங்களே பதில் மெசேஜ் அனுப்புவீங்கனு தான் இருந்தேன்.

சொல்லுங்க”

“நீங்கள் அனுப்பிய ஜாதக ராசிக் கட்டத்தில் என்ன தப்பு அப்படினு கேட்கின்றீர்கள் சரியா”

“ஆமாம்”

“ ரொம்ப எளிமையான விஷயம்.

புதன் கிரஹம் சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரஹம். சுமார் 88 நாட்கள் சூரியனைச் சுற்றி வர ஆகும். பூமியிலிருந்து பார்க்கும் போது 115 நாள் மாதிரி கணக்கு வரும். சூரியனுக்கும் புதனுக்கும் இருக்கும் angular distance குறைந்தபட்சம் 18 டிகிரி அதிக பட்சம் 28 டிகிரி இருக்கும். இதை astronomy ல் elongation என்று சொல்லுவார்கள். எனவே சூரியனும் புதனும் அதிகபட்சம் அடுத்த ராசிகளில் இருப்பது தான் சாத்தியம் . அதாவது சூரியன் இருக்கும் ராசிக்கு முந்தைய ராசி, அல்லது சூரியனுடன் இணைந்து அல்லது சூரியனுக்கு அடுத்த ராசி இப்படித்தான் இருக்க வேண்டும். நீங்கள் அனுப்பிய ஜாதக இமேஜ் அப்படி இல்லை. அதான் காரணம் .

உங்களிடமிருந்து நூறு ஜோதிட வார்த்தைகள் வார்த்தையும் வந்திருக்கு உச்சம் இது தானே வார்த்தை”

“ஆமாம்”ஓகே . பொதுவாக கிரஹங்களை ஒரு குறிப்பிட்ட ராசியில் உச்சம் பெறுகிறது என்று சொல்வது சாதாரண வார்த்தை. உதாரணமாக சூரியன் மேஷத்தில்சந்திரன் ரிஷபத்தில் செவ்வாய் மகரத்தில் புதன் கன்னியில் குரு கடகத்தில்சுக்கிரன் மீனத்தில்சனி துலாமில் என உச்சமாக இருக்கும் இடங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஆனால் அந்தந்த ராசிகளின் முழு 30 டிகிரியிலும் அந்தந்த கிரஹங்கள் உச்சம் என சொல்ல முடியாது . ஒரு குறிப்பிட்ட டிகிரியில் தான் கிரஹங்கள் உச்சம் சூரியன் மேஷத்தில் 19 வது பாகையில் சந்திரன் ரிஷபத்தில் 3 வது பாகையில்செவ்வாய் மகரத்தில் 28 பாகையில் புதன் கன்னியில் 15 வது பாகையில்குரு கடகத்தில் 5 வது பாகையில் சுக்கிரன் மீனத்தில் 27 வது பாகையில்சனி துலாமில் 21 வது பாகையில்என ஒரு கணக்கு இருக்கிறதுல் இந்தக் கணக்குகளிலும் ஜோதிட சாஸ்த்திர நூல்களில் கொஞ்சம் வித்தியாசமும் இருக்கின்றன. ஏன் இந்தப் பாகையில் மட்டும் உச்சம் என்பதை astronomical mathematical calculation களுடன் அறிஞர்கள் புரிய வைத்திருக்கின்றார்கள்.

விரிவாக இல்லாமல் சொல்ல வேண்டுமெனில் North and south node of those sidereal path வைத்துக் கொண்டு கணக்கிட்டு சொல்லியிருக்கின்றார்கள். இதில் நமது வேதம் சார்ந்த ஜோதிட முறை என்று மட்டுமில்லை அரேபிய கிரேக்க முறைகளிலும் உச்சம் நீச்சம் கணக்கு இருக்கிறது.

ஆனால் நமது சித்தாந்தத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தலா 4 பாதங்கள் உண்டல்லவா அதை தர்ம , அர்த்த காம மோட்சம் என்பதாகப் பிரித்து கொண்டிருக்கிறோம். உதாரணமாக குருவை எடுத்துக் கொண்டால் அவர் கடகத்தில் உச்சம் அதுவும் 5 டிகிரியில், கடகத்தில் முதல் 3 டிகிரி 20 விநாடி புனர் பூசம். ( அதாவது புனர்பூசம் 10 டிகிரி மிதுனத்தில் போக மீதம்) குரு பூச நட்சத்திரத்தில் இருக்கும் போது உச்சம். பூசம் 13 டிகிரி 20 விநாடியை நான்காகப் பிரிக்க 3 டிகிரி 20 விநாடி ஒரு பாதம். ஆக அவர் 5 டிகிரியில் உச்சமாக இருக்கும் போது பூசம் முதல் பாதத்தில் இருப்பார். முதல் பாதம் 3 டிகிரி 20 விநாடி முதல் 6 டிகிரி 40 விநாடி வரை.

ஆக தர்ம பாதத்தின் மத்தியில் உச்சம் பெறுகிறார். ஒவ்வொரு கிரஹமும் இப்படி உச்சம் நீச்சம் பெறும் நட்சத்திர பாதங்களை தர்ம அர்த்த, காம மோட்சமாகக் கொண்டு பலா பலன்கள் சொல்ல வேண்டும்.

இன்னுமொரு சுவாரசியமான விஷயம் Cyril Fagan என்றொரு ஐரோப்பிய ஜோதிடர் இந்த கிரஹ உச்ச நிலைக் கணக்கை, நன்பு எனும் பாபிலோனியக் கடவுளின் கோவிலைக் கொண்டு எழுதியிருக்கிறார்.

நன்பு எனும் கடவுள் ரோமானிய சித்தாந்தத்தில் புதனுக்கான அதி தேவதை இன்னுமொரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும். நிலையான நட்சத்திரங்களின் இருப்பிடம் & பூமியின் சுழற்சி ( தன்னைத் தானே & சூரியனைச் சுற்றி) மற்றும் சூரியனின் நகர்வு ( ராசி மண்டலங்களின் வழியே ) என இரண்டு விதமான கணக்கீடுகள் உண்டல்லவா . அதை Sidereal and Tropical என அழைப்பார்கள். இந்த விஷயத்தில் Cyril Fagan ம் Donald A. Bradley எனும் அறிஞரும் சேர்ந்து தான். நவீன காலத்தில் ஜோதிஷத்தில் ஒரு புதிய உத்வேகத்தைக் கொண்டு வந்தார்கள் எனச் சொல்லலாம். இருவரின் புத்தகங்களிலும் வேத ஜோதிடம் தொடர்பான பல குறிப்புகள் உள்ளன.

சந்திரமௌலீஸ்வரன்

அனைத்து பாகங்களையும் படிக்க

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.