🕉️மேஷம்
ஏப்ரல் 28, 2021
மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். செய்யும் பணியில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். சுபச்செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : நிதானம் தேவை.
பரணி : பொறுமை வேண்டும்.
கிருத்திகை : விரயங்கள் உண்டாகும்.
🕉️ரிஷபம்
ஏப்ரல் 28, 2021
தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் முக்கியமான சில முடிவுகளை எடுப்பீர்கள். தலைமைப் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். போட்டிகளை சமாளித்து லாபம் அடைவீர்கள். தொழிலில் புதிய நபர்களை கூட்டாளியாக சேர்ப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிஷம் : வேகம் அதிகரிக்கும்.
🕉️மிதுனம்
ஏப்ரல் 28, 2021
நண்பர்களிடம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். மனதில் இருக்கும் பலதரப்பட்ட எண்ணங்களில் இருந்து விடுதலை அடைவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தவறிப்போன சில பொருட்கள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் அளவாக பழகுவது உத்தமம்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை : அனுபவம் உண்டாகும்.
புனர்பூசம் : ஆதரவான நாள்.
🕉️கடகம்
ஏப்ரல் 28, 2021
வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றமான சூழல் உண்டாகும். கடன்களை அடைக்க முயல்வீர்கள். நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். வாரிசுகளின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு
தெளிவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : மாற்றமான நாள்.
பூசம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
ஆயில்யம் : தெளிவு கிடைக்கும்.
🕉️சிம்மம்
ஏப்ரல் 28, 2021
வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற கருத்துக்களை தவிர்க்கவும். கூட்டாளிகளால் விரயச் செலவுகள் உண்டாகும். உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான புதிய கண்ணோட்டம் உண்டாகும். தாய்வழி உறவுகளிடம் சற்று கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
பூரம் : ஆதாயம் உண்டாகும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
🕉️கன்னி
ஏப்ரல் 28, 2021
உடல்நலம் சீராகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். செய்யும் பணியில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். பணிகளில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மறைந்து இருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பயணங்களால் லாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : தனலாபம் உண்டாகும்.
அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
🕉️துலாம்
ஏப்ரல் 28, 2021
இளைய உடன்பிறப்புகளால் ஆதாயம் ஏற்படும். பிள்ளைகளின் வழி பெருமை உண்டாகும். மனதைரியத்துடன் செயல்பட்டு காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பண விஷயங்களில் சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
சித்திரை : ஆதாயம் ஏற்படும்.
சுவாதி : முயற்சிகள் கைகூடும்.
விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.
🕉️விருச்சகம்
ஏப்ரல் 28, 2021
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பொறுமையுடன் செயல்பட்டு எடுத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை சமாளித்து லாபம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அனுஷம் : சுபமான நாள்.
கேட்டை : லாபம் உண்டாகும்.
🕉️தனுசு
ஏப்ரல் 28, 2021
மாணவர்கள் கல்வி பயிலும் விதங்களில் மாற்றங்கள் ஏற்படும். புதியவற்றை கண்டறிந்து புகழப்படுவீர்கள். கலைத்துறை கலைஞர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். சகோதரர்களால் சுபவிரயங்கள் உண்டாகும். சிறு தூர பயணங்கள் தொடர்பான முயற்சிகளில் எண்ணிய பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மூலம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : சுபவிரயங்கள் உண்டாகும்.
🕉️மகரம்
ஏப்ரல் 28, 2021
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். பிள்ளைகளின் வழி சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் நட்பால் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். வாதத்திறமையால் புகழ் உண்டாகும். இணையதள வேலைவாய்ப்புகளினால் மேன்மை ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : கலகலப்பான நாள்.
திருவோணம் : அபிவிருத்தி உண்டாகும்.
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.
🕉️கும்பம்
ஏப்ரல் 28, 2021
பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். தொழில் நிறுவனங்களை விரிவுப்படுத்த முயல்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறைந்து தெளிவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தனவரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும்.
சதயம் : தெளிவு உண்டாகும்.
பூரட்டாதி : சேமிப்புகள் அதிகரிக்கும்.
🕉️மீனம்
ஏப்ரல் 28, 2021
தொழிலில் புதுவிதமான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மரியாதைகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். தந்தையிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் முயற்சிகளில் பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : மரியாதைகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் மறையும்.
ரேவதி : ஆலோசனைகள் கிடைக்கும்.