ஏப்ரல் 29 ராசி பலன்

🕉️மேஷம்
ஏப்ரல் 29, 2021

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். கூட்டாளிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். மனதில் பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : சோர்வு ஏற்படும்.


🕉️ரிஷபம்
ஏப்ரல் 29, 2021

அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். பொருளாதார மேன்மை உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் நட்பு உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

கிருத்திகை : தாமதங்கள் அகலும்.
ரோகிணி : நட்பு உண்டாகும்.
மிருகசீரிஷம் : மனமகிழ்ச்சியான நாள்.


🕉️மிதுனம்
ஏப்ரல் 29, 2021

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வங்கிகளில் எதிர்பார்த்த சூழல் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான பணிகளில் புதிய முயற்சிகளை செய்வீர்கள். தொழிலில் செல்வாக்கு மற்றும் மேன்மையான சூழல் உண்டாகும். தந்தையிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். பொதுப்பணி சார்ந்த செயல்பாடுகளால் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

மிருகசீரிஷம் : தீர்வு கிடைக்கும்.
திருவாதிரை : மேன்மையான நாள்.
புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.


🕉️கடகம்
ஏப்ரல் 29, 2021

தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு லாபம் அடைவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சிந்தனைகளில் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

புனர்பூசம் : லாபம் கிடைக்கும்.
பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.
ஆயில்யம் : கலகலப்பான நாள்.


🕉️சிம்மம்
ஏப்ரல் 29, 2021

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பங்கள் அகலும். பணிகளில் உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும். புதுவிதமான தொழில் நுட்பங்களை கற்றுக்கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் ஆதரவான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரம் : குழப்பங்கள் அகலும்.
உத்திரம் : அன்பு அதிகரிக்கும்.


🕉️கன்னி
ஏப்ரல் 29, 2021

தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சந்தேக உணர்வுகளால் நெருக்கமான உறவினர்களுக்கிடையே விரிசல்கள் உண்டாகும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். தாய் சம்பந்தப்பட்ட கவலைகள் மேலோங்கும். பிள்ளைகளால் சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திரம் : முயற்சிகள் மேம்படும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : கவலைகள் மேலோங்கும்.


🕉️துலாம்
ஏப்ரல் 29, 2021

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். கேளிக்கை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும். பொதுநலத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : ஆதரவு கிடைக்கும்.
சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
விசாகம் : அனுபவம் உண்டாகும்.


🕉️விருச்சிகம்
ஏப்ரல் 29, 2021

அமைதியான செயல்பாடுகளால் எண்ணிய சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் வருகை ஏற்படும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். எந்தவொரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.
அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை : திருப்தியான நாள்.


🕉️தனுசு
ஏப்ரல் 29, 2021

திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் தொடர்பான புதிய ஆர்டர்கள் கிடைக்கும். எந்தவொரு சூழ்நிலைகளையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். அக்கம்-பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். மனதிற்கு பிடித்த சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : அங்கீகாரம் கிடைக்கும்.
பூராடம் : வெற்றிகரமான நாள்.
உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.


🕉️மகரம்
ஏப்ரல் 29, 2021

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். புத்திக்கூர்மையும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். மனதில் ஒருவிதமான பதற்றங்கள் ஏற்பட்டு மறையும். கலைத்துறையினருக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.
அவிட்டம் : பதற்றமான நாள்.


🕉️கும்பம்
ஏப்ரல் 29, 2021

அரசாங்கத்திடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் விரிவாக்கம் தொடர்பான முயற்சியில் ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் சிந்தித்து பேசவும். புதுமையான செயல்பாடுகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சில வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : சிந்தித்து பேசவும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️மீனம்
ஏப்ரல் 29, 2021

எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளில் எண்ணங்கள் ஈடேறும். சபைகளில் தனக்கான ஒத்துழைப்பு அதிகரிக்கும். அறக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். தந்தையுடன் எழுந்த பிரச்சனைகள் குறையும். நிர்வாகத்துறையில் உள்ளவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். பொருள் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
ரேவதி : கீர்த்தி உண்டாகும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.