ஏப்ரல் 6 2022 தின ராசி பலன்கள்

ஏப்ரல் 6 2022 தின ராசி பலன்கள்

🕉️மேஷம்
ஏப்ரல் 06, 2022

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணி மாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : முயற்சிகள் ஈடேறும்.


🕉️ரிஷபம்
ஏப்ரல் 06, 2022

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : புரிதல் உண்டாகும்.
ரோகிணி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.


🕉️மிதுனம்
ஏப்ரல் 06, 2022

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் சுதந்திரப்போக்கு மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மிருகசீரிஷம் : விருப்பம் நிறைவேறும்.
திருவாதிரை : பயணங்கள் கைகூடும்.
புனர்பூசம் : கட்டுப்பாடுகள் குறையும்.


🕉️கடகம்
ஏப்ரல் 06, 2022

உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். புதுவிதமான ஆடைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் வித்தியாசமான சிந்தனைகளை செயல்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.
பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் உண்டாகும்.


🕉️சிம்மம்
ஏப்ரல் 06, 2022

வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த மாற்றங்கள் சாதகமாகும். குழந்தைகளின் மூலம் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு மேம்படும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
பூரம் : அலைச்சல்கள் நீங்கும்.
உத்திரம் : ஒத்துழைப்பு மேம்படும்.


🕉️கன்னி
ஏப்ரல் 06, 2022

செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த சிந்தனைகளில் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத
சில உதவிகளின் மூலம் சேமிப்பு மேம்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : புரிதல் உண்டாகும்.
சித்திரை : சேமிப்பு மேம்படும்.


🕉️துலாம்
ஏப்ரல் 06, 2022

வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். அரசு சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் நிதானம் வேண்டும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சிறு சிறு விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
சுவாதி : நிதானம் வேண்டும்.
விசாகம் : விரயங்கள் ஏற்படும்.


🕉️விருச்சிகம்
ஏப்ரல் 06, 2022

தள்ளிப்போன சில காரியங்கள் திடீரென முடியும். வாழ்க்கை துணைவர் வழியில் உதவி கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

விசாகம் : உதவி கிடைக்கும்.
அனுஷம் : அறிவு வெளிப்படும்.
கேட்டை : முன்னேற்றம் உண்டாகும்.


🕉️தனுசு
ஏப்ரல் 06, 2022

உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

மூலம் : எதிர்ப்புகள் குறையும்.
பூராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திராடம் : முடிவு கிடைக்கும்.


🕉️மகரம்
ஏப்ரல் 06, 2022

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மாணவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். திருப்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
திருவோணம் : வாய்ப்புகள் கைகூடும்.
அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


🕉️கும்பம்
ஏப்ரல் 06, 2022

பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் நீங்கும். உணர்ச்சிபூர்வமாக செயல்படுவதை குறைத்துக் கொள்வது நல்லது. பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : குழப்பம் நீங்கும்.
சதயம் : அனுபவம் கிடைக்கும்.
பூரட்டாதி : புரிதல் மேம்படும்.


🕉️மீனம்
ஏப்ரல் 06, 2022

குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். ஆன்மிக வழிபாடு மற்றும் பயணங்கள் கைகூடும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். முயற்சிகள் ஈடேறும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : அமைதி உண்டாகும்.
உத்திரட்டாதி : போட்டிகள் குறையும்.
ரேவதி : ஒத்துழைப்பு மேம்படும்.


வாட்ஸ் ஆப் நெம்பர் : 9842177500

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.