ஏப்ரல் 7 2022 தின ராசி பலன்கள்

ஏப்ரல் 7 2022 தின ராசி பலன்கள்

🕉️மேஷம்
ஏப்ரல் 07, 2022

வாக்குவன்மையின் மூலம் லாபம் அடைவீர்கள். மனை சார்ந்த பணிகளில் வரவு மேம்படும். வாழ்க்கை துணை வழி உறவினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அஸ்வினி : லாபம் உண்டாகும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.


🕉️ரிஷபம்
ஏப்ரல் 07, 2022

சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

கிருத்திகை : வரவு மேம்படும்.
ரோகிணி : ஆதரவான நாள்.
மிருகசீரிஷம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


🕉️மிதுனம்
ஏப்ரல் 07, 2022

பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்துவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு காலதாமதமாக கிடைக்கும். நம்பிக்கை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும்.
திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும்.
புனர்பூசம் : காலதாமதம் ஏற்படும்.


🕉️கடகம்
ஏப்ரல் 07, 2022

புதிய வியாபாரம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : புரிதல் ஏற்படும்.
பூசம் : சிந்தனைகள் உண்டாகும்.
ஆயில்யம் : விவாதங்களை தவிர்க்கவும்.


🕉️சிம்மம்
ஏப்ரல் 07, 2022

வெளியூர் தொடர்பான பயணங்களில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். தடைகள் அகலும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

மகம் : சாதகமான நாள்.
பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️கன்னி
ஏப்ரல் 07, 2022

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கூட்டு வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். அரசு சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு

உத்திரம் : விருப்பம் நிறைவேறும்.
அஸ்தம் : பயணங்கள் சாதகமாகும்.
சித்திரை : உதவி கிடைக்கும்.


🕉️துலாம்
ஏப்ரல் 07, 2022

நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும்.
மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்

சித்திரை : தெளிவு பிறக்கும்.
சுவாதி : பொறுப்புகள் மேம்படும்.
விசாகம் : ஆசைகள் உண்டாகும்.


🕉️விருச்சிகம்
ஏப்ரல் 07, 2022

குழப்பமான சிந்தனைகளும், செயல்பாடுகளில் காலதாமதமும் ஏற்படும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்படும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் நிதானத்துடன் செயல்படவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விசாகம் : காலதாமதம் ஏற்படும்.
அனுஷம் : இழுபறியான நாள்.
கேட்டை : நிதானத்துடன் செயல்படவும்.


🕉️தனுசு
ஏப்ரல் 07, 2022

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தொழில் தொடர்பான நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். வெளி உலக அனுபவங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மூலம் : ஆர்வம் உண்டாகும்.
பூராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.


🕉️மகரம்
ஏப்ரல் 07, 2022

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றம் உண்டாகும். திருப்திகரமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : புரிதல் மேம்படும்.
அவிட்டம் : மாற்றம் உண்டாகும்.


🕉️கும்பம்
ஏப்ரல் 07, 2022

புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். சிறு மற்றும் குறுந்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். போட்டிகளில் கலந்து கொண்டு பாராட்டுகளை பெறுவீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.
சதயம் : தெளிவு பிறக்கும்.
பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும்.


🕉️மீனம்
ஏப்ரல் 07, 2022

வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : அறிமுகம் கிடைக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.