ஏப்ரல் 8 ராசிபலன்

*08-04-2021

*வியாழக்கிழமை*

*️மேஷம்*

ஏப்ரல் 08, 2021

உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் சுபச்செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உபரி வருமானம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : ஆரோக்கியம் மேம்படும்.

பரணி : ஆதரவு கிடைக்கும்.

கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.
—————————————
*️ரிஷபம்*

ஏப்ரல் 08, 2021

அரசு தொடர்பான காரியங்களில் சில நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய சிந்தனைகள் தோன்றும். தெளிந்த சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் பணவரவுகள் அதிகரிக்கும். பொதுச்சேவையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

கிருத்திகை : மரியாதை அதிகரிக்கும்.

ரோகிணி : சிந்தனைகள் தோன்றும்.

மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
—————————————
*️மிதுனம்*

ஏப்ரல் 08, 2021

எதிர்பாராத சில வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இனம்புரியாத சில கனவுகளின் மூலம் குழப்பமான சூழல் ஏற்படும். நிர்வாகத்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த சில எதிர்ப்புகளை பற்றி அறிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.

திருவாதிரை : குழப்பமான நாள்.

புனர்பூசம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.
—————————————
*️கடகம்*

ஏப்ரல் 08, 2021

எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஒத்துழைப்பு காலதாமதமாக கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : சேமிப்புகள் குறையும்.

பூசம் : அனுசரித்து செல்லவும்.

ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.
—————————————
*️சிம்மம்*

ஏப்ரல் 08, 2021

உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த துன்பங்கள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். தொழில் தொடர்பான முன்னேற்றமான சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

மகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

பூரம் : துன்பங்கள் குறையும்.

உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.
—————————————
*️கன்னி*

ஏப்ரல் 08, 2021

பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பொருள் வரவுகளின் மூலம் மேன்மை அடைவீர்கள். மனதில் இனம்புரியாத ஒருவிதமான பதற்றமான சூழ்நிலைகள் ஏற்பட்டு மறையும். புனித தலங்களுக்கு சென்று வருவதற்கான எண்ணங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : மாற்றங்கள் பிறக்கும்.

அஸ்தம் : மேன்மையான நாள்.

சித்திரை : எண்ணங்கள் மேம்படும்.
—————————————
*️துலாம்*

ஏப்ரல் 08, 2021

கால்நடை வளர்ப்பு சார்ந்த தொழிலில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் உதவிகளால் நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். மனதில் அஞ்ஞானம் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். மனதில் கற்பனைத்திறன் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : கவலைகள் குறையும்.

சுவாதி : எண்ணங்கள் அதிகரிக்கும்.

விசாகம் : கற்பனைத்திறன் மேம்படும்.
—————————————
*️விருச்சகம்*

ஏப்ரல் 08, 2021

கேளிக்கை மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கால்நடைகளின் மூலம் பொருள் வரவு கிடைக்கும். போட்டியில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கையும், புத்துணர்ச்சியும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

விசாகம் : பொருள் வரவு மேம்படும்.

அனுஷம் : வெற்றி கிடைக்கும்.

கேட்டை : புத்துணர்ச்சியான நாள்.
—————————————
*️தனுசு*

ஏப்ரல் 08, 2021

வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். மற்றவர்களின் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். எதையும் திட்டமிட்டு செயல்படுவது நன்மையளிக்கும். மனதில் இனம்புரியாத பயம், கவலைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தொழில் தொடர்பான எதிர்பார்த்த வங்கி கடன் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மூலம் : போட்டிகள் குறையும்.

பூராடம் : கவலைகள் நீங்கும்.

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
—————————————
*️மகரம்*

ஏப்ரல் 08, 2021

பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். நண்பர்களின் உதவிகளால் பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

திருவோணம் : லாபம் உண்டாகும்.

அவிட்டம் : நெருக்கடிகள் குறையும்.
—————————————
*️கும்பம்*

ஏப்ரல் 08, 2021

பிள்ளைகளின் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவான உதவிகள் கிடைக்கும். நுட்பமான சில விஷயங்களின் மீது ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். நீர் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அவிட்டம் : கவனம் வேண்டும்.

சதயம் : ஆர்வம் அதிகரிக்கும்.

பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.
—————————————
*️மீனம்*

ஏப்ரல் 08, 2021

புதிய முயற்சிகளின் மூலம் பாராட்டப்படுவீர்கள். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பத்திரிக்கை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சலும், அதற்கான அங்கீகாரமும் கிடைக்கும். சங்கீதம் சார்ந்த தொழில் நிபுணர்களுக்கு எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.

உத்திரட்டாதி : அலைச்சல்கள் மேம்படும்.

ரேவதி : வாய்ப்புகள் சாதகமாகும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.