கரணம் – நூறு ஜோதிஷ வார்த்தைகள் – 2

நூறு ஜோதிட வார்த்தைகள் தொடரில் ராம்கி எடுத்துக் கொடுத்திருக்கும் அடுத்த சொல் கரணம்

இது குறித்து ஏற்கனவே ஒரு பதிவில் என் மகளுடன் நிகழ்ந்த உரையாடலை எழுதியிருந்தேன்

மீண்டும் அதைத் தொட்டு எழுதுகிறேன்


திதி என்பது நாம் எல்லோரும் அடிக்கடி பயன்படுத்தும் சொல் அதாவது அமாவாசை, பௌர்ணமி, ஏகாதசி, அஷ்டமி , நவமி.. இப்படி

திதி என்பது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இருக்கும் தூரத்தை குறிக்கும். அதாவது அமாவாசையின் போது சந்திரனும் சூரியனும் 0 டிகிரி இடைவெளியில் இருக்கும்

ஒவ்வொரு நாளும் நிலவும் சூரியனும் ஒருவருக்கு ஒருவர் 12 டிகிரி விலக திதிகள் வளர்பிறையில்

பிரதமை ,துவிதியை, த்ரிதியை , சதுர்த்தி, பஞ்சமி , ஷஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி ,ஏகாதசி, துவாதசி, திரயோதசி சதுர்த்தசி என பதினான்கு நாட்கள் முடிந்து பதினைந்தாம் நாள் பௌர்ணமி

பதினைந்தாம் நாள் 180 டிகிரி வித்தியாசத்தில் சூரியனும் சந்திரனும் இருக்கும் அதாவது நாள் ஒன்றுக்கு 12 டிகிரி வீதம், 15 நாட்களுக்கு 180 டிகிரி.,

அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இருக்க பௌர்ணமி அன்று சூரியனின் முழு பார்வையும் சந்திரனின் மீது இருக்கும் படி சூரியனிலிருந்து சந்திரன் ஏழாவது ராசியில் இருக்கும்

பௌர்ணமியில் இருந்து அமாவாசை எனும் தேய்பிறை காலத்திலும் அதே பதினான்கு திதிகளின் பெயர் கொண்டே அழைக்கின்றோம்

கரணம் என்பது திதியில் பாதி அதாவது ஆறு டிகிரி.

15 திதிகளுக்கு என 30 கரணங்கள் இருக்க வேண்டும். ஆனால் 11 கரணங்கள் மட்டுமே நடைமுறை

குமாரஸ்வாமியம் எனும் ஜோதிஷ நூலில் கரணத்தைக் கொண்டு பலன் சொல்லும் முறை விளக்கப்பட்டுள்ளது

பவம், பாலவம், கௌலவம், தைதுலம், கரசை எனும் ஐந்து கரணங்களும் விவசாயத்துக்கானவை என்கிறது அந்த நூல்

ஏனைய ஆறு கரணங்களான நாகவம், சதுஷ்பாதம் , சகுனி, பத்திரை, கௌலவம், ,கிமிஸ்துக்கினம் என்பவை தீய கரணங்கள் என்கிறது அந்த நூல்

ஜாதக அலங்காரம் எனும் ஜோதிஷ நூல் ஒவ்வொரு கரணத்துக்கும் ஒரு பறவை / விலங்கினைக் குறியீடாகக் கொண்டு பலன் சொல்லியிருக்கிறது.


சந்திரமௌலீஸ்வரன் விஸ்வநாதன்

9840656627

https://dailypanchangam.in/2020/05/01/%e0%ae%b7%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%81-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b7-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.