குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022

நிகழும் ப்லவ ஆண்டு கார்த்திகை மாதம் 4ம் தேதி சனிக்கிழமை இரவு 43:11:26 நாழிகைக்கு ஆங்கில வருடம் 2021, நவம்பர் மாதம், 20ம் தேதி இரவு 11:30:28 மணிக்கு குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது திருக்கணிதம் லஹரி அயனாம்ஸப்படி. கும்ப ராசியில் அவர் 13.04.2022 பிற்பகல் 03.49.47 மணி வரை சஞ்சரிக்கிறார். அதன் பின் மீன ராசியில் சஞ்சாரம் . வாக்கிய பஞ்சாங்கம் படி 13.11.2021 ஐப்பசி மாதம் 27ம் தேதி இரவு 08.46 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்கிறார். அடியேன் எப்பொழுதும் லஹரி அயனாம்ஸப்படி செல்வதால் இந்த குருப்பெயர்ச்சி பலன்கள் 20.11.2021 முதல் 13.04.2022 வரைக்குமான பலன்களை கணித்து இருக்கிறேன். வெறும் 144 நாட்கள் மட்டுமே கும்பத்தில் குரு சஞ்சாரம் ஏற்கனவே 06.04.2021 முதல் 14.09.2021 வரை கும்ப ராசியில் சஞ்சரித்த பலன்கள் போன குருபெயர்ச்சியில் தெரிவித்து இருந்தோம். இனி மேற்படி 144 நாட்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள் கீழே.

குறிப்பு : இந்த 144 நாட்களுக்குள் மற்ற சூரியன், செவ்வாய்,புதன் சுக்ரன் ராகு கேது இவர்களின் சஞ்சாரங்களையும் கணக்கில் கொண்டு கணிக்கப்பட்ட பலன்கள்

குறிப்பு 2 : இவை பொதுப்பலன்கள். இதை கொண்டு தீர்மானிப்பது அவ்வளவு சரியாக இருக்காது.  ஒவ்வொருவரும் அவருடைய ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி பலன் பெறுவது சிறந்த ஒன்று. மேலும் லக்னத்தை ஒட்டியும் பலன் சொல்லி இருப்பதால் உங்கள் லக்னம் தெரிந்தால் அதையும் சேர்த்து பார்த்து கொள்வது நல்லது.

மேஷம் ராசி:  (அஸ்வினி 4 பாதம், பரணி 4 பாதம், கிருத்திகை 1 பாதம் முடிய) :

 மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு இந்த குருபெயர்ச்சி 20.11.2021  முதல் மிக நன்றாக இருக்கிறது வாழ்வில் எல்லா வளமும் பெறக்கூடிய நேரமாக இருக்கும் கடந்த காலத்தில் கும்பத்தில் குரு வரும்போது சில சங்கடங்கள் ஏற்பட்டிருக்கலாம் அது இப்பொழுது நீங்கும் உத்தியோகத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் மீண்டும் வேலையை தொடங்குவீர்கள் அல்லது புதிய வேலை உங்களை தேடி வரும் அது பொருளாதாரத்தை உயர்த்தும் உங்களுடைய தேவைகள் பூர்த்தி ஆகும் சொந்த தொழில் செய்வோர், மற்ற பிரிவினர் அனைவருக்கும் நன்றாக இருக்கும் பொருளாதாரம் மேம்படும். பொதுவாக இந்த குருபெயர்ச்சி வெறும் 144 மாதங்கள் நாட்கள் மட்டுமே அதனால் தொழில் ரீதியான மாற்றங்கள் மற்றும் இல்லத்தில் நடக்கவேண்டிய சுப நிகழ்வுகள் நடைபெற இந்த பெயர்ச்சி உங்களுக்கு உதவுகிறது வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் பொருளாதாரம் நன்றாக இருப்பதால் கேளிக்கைகள் புனித யாத்திரைகள் சுபச்செலவுகள் என்று விரையம் சுபமாக அமையும் பொதுவாக இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மை அதிகரிக்கும் அதிகமாக செய்கிறது  உங்கள் எண்ணங்களை முயற்சிகளை தொடங்கலாம் வெற்றி உண்டாகும். மிக நன்றாக இருப்பதற்கு ஜென்மத்தில் ராகுவும் 7ல் கேதுவும்  17.03.2022 முதல்  நட்பாக வந்து நன்மை தருவதாலும் நன்றாக இருக்கும்.

குடும்பம் : பொதுவாக இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் மற்றவர்களால் போற்றப்படுவீர்கள், குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் கடந்தகால திருமணம் மற்ற சுப நிகழ்வுகள் தடை ஏற்பட்டு இருந்தது அது  இப்போது நீங்கி அவை பூர்த்தியாகும் இல்லத்தில் புதுவரவு உண்டாகும் குழந்தை பாக்கியம் சிலருக்கு இருக்கும் பொதுவில் பணத்தேவைகள் பூர்த்தியாகும் படி பொருளாதார நிலை இருக்கும் கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை நிறைந்திருக்கும் பிள்ளைகள் உங்களின் ஆலோசனையை ஏற்று நடப்பர் மகிழ்ச்சியைத் தருவார்

ஆரோக்கியம் : ஆரோக்கியத்தைப் பொருத்தமட்டில் ஓரளவுக்கு வைத்திய செலவுகள் இருந்து கொண்டிருக்கும் உங்களது ஆறுக்குடைய புதன் தற்போது எழில் இருந்தாலும் டிசம்பர் 2 2021 எட்டாம் இடம் செல்வது உங்களது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவும் அதேபோல 9-க்குடைய குரு லாபத்தில் இருப்பது பெற்றோர்களால் இருந்துவந்த வைத்திய செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும்படி செய்யும் பொதுவாக இந்த குரு பெயர்ச்சியில் பெரிய ஆரோக்கிய செலவுகள் என்பது இல்லாமல் பரவாயில்லை எண்ணும்படி தேக ஆரோக்கியம் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும் வாழ்க்கை துணைவர் வழியிலும் பெரிய மருத்துவ செலவுகள் இருக்காது கவலை வேண்டாம்

வணங்க வேண்டிய தெய்வம் : மொத்தத்தில் இந்த குருபெயர்ச்சி அனைத்து பிரிவினருக்கும் சாதகமான பலனை தருகிறது பெரிய சங்கடங்கள் ஏதும் இருக்காது தனிப்பட்ட ஜாதகத்தில் கிரஹ நிலைகள்  நன்றாக இருந்தால் இன்னும் அதிக நற்பலன்களை பெறலாம் நீங்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி உண்டாகவும், மனம் சாந்தமாக இருக்கவும் உங்கள் குலதெய்வம் மற்றும் பிள்ளையார் வழிபாடு சிறந்த ஒன்று முடிந்தவரை தான தர்மங்களை செய்யுங்கள் அது நல்ல பலனை தரும்

ரிஷ்பம் : (கிருத்திகை 2,3,4 பாதங்கள், ரோஹிணி 4 பாதம், மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய) :

 ரிஷப ராசி அன்பர்களே இந்த குரு பெயர்ச்சி ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உங்களுக்கு வழங்க போகிறது காரணம் பத்தில் குரு வருவது ஆட்சிமாற்றம் அதாவது உங்களுடைய நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் இடமாற்றம் தொழில் மாற்றம் என்று மேலும் மார்ச் 17 2022 முதல் ராகு பகவான் 12ஆம் வீட்டிலும் கேது 6லும் இடப்பெயர்ச்சியாவது நன்மையைத் தரும் உங்களுடைய கடந்தகால தொல்லைகள் நீங்கும் பொருளாதாரம் பொருத்தவரை நல்ல நிலையில் இருக்கும் சிறப்பாக இருக்கும் காரணம் குரு பகவானின் பார்வை இரண்டாம் இடத்துக்கு இருப்பதால் தனம் பெருகும் மற்ற கிரகங்கள் இந்த 144 நாட்களில் செய்யும்  சஞ்சாரம் சாதகமாக இருக்கிறது அதனாலும் இதுவரை உங்களுடைய உங்களுடைய முயற்சிகள் தடைபட்டு வந்திருந்தால் அது இப்போது பூர்த்தியாகும் உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் புதிய பதவி கிடைக்கலாம் வேற வேலை வெளிநாடு வாய்ப்பு என்று மனதுக்கு பிடித்தார் போல் அமையும் மேலும் சம்பள உயர்வு புதிய வீடு வாகனம் ஆபரணங்கள் இப்படி வாங்க தூண்டும் வீடு வாகன யோகங்கள் நன்றாக இருக்கிறது வீடு பழுது பார்ப்பது போன்ற செயல்களும் நன்றாகவே இருக்கும் மேலும் சொந்தத் தொழில் செய்வோர் தொழில் விரிவாக்கம் வருமானம் பெருகும் படி செய்யும் எதிர்பார்த்த வங்கி கடன் அரசு உதவி போன்றவை எளிதில் கிடைக்கும் தொழிலில் இருந்துவந்த போட்டி நிலைகள் மாறி எதிரிகளை வீழ்த்தும் படி உற்பத்தி பெருகி விற்பனை அதிகரிக்கும் மற்ற அனைத்து பிரிவினருக்கும் நன்மை அதிகரிக்கும் குறிப்பாக விவசாயிகளின் முன்னேற்றமும் கட்டுமானத் தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றமும் மிக நன்றாக இருக்கும் அதேபோல் பெண்கள் தங்களுடைய விருப்பங்களை பூர்த்தி செய்வார்கள் அதேபோல் புனித யாத்திரை கேளிக்கைகள் விருந்துகள் என்று மகிழ்ச்சியாக இந்த குருபெயர்ச்சி கழியும் நல்ல நிலை இருக்கிறது 

குடும்பம் : கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நீடிக்கும். கடந்த காலத்தில் மணக்கசப்பினால் அல்லது தொழில் உத்தியோகம் காரணமாக பிரிந்திருந்த தம்பதிகள் இந்த குரு பெயர்ச்சியில் சேர்ந்து விடுவார்கள் பின் ஒற்றுமை அதிகரிக்கும். தாமதமாகிக் கொண்டிருந்த திருமணம் நடைபெற, சிலருக்கு  குழந்தை பாக்கியம் உண்டாக இந்த பெயர்ச்சி சாதகமாக இருக்கிறது இல்லத்தில் அம்பும் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும் பெற்றோர்கள் பிள்ளைகள் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வர் உறவுகளின் ஆதரவு இருந்து கொண்டிருக்கும் எல்லோருடனும் அனுசரித்து போவதால் மகிழ்ச்சியான குடும்பமாக அமையும்

ஆரோக்கியம் :  ஏற்கனவே மன உளைச்சல் அல்லது உடல் ரீதியான பாதிப்புகள் இருந்து நாள்பட்ட வைத்தியங்கள் செய்து கொண்டிருந்தவர்கள் அந்த வியாதிகள் குறைந்து மருத்துவ செலவை பெருமளவில் குறைத்து விடும் மகிழ்ச்சி ஏற்படும் வாழ்க்கை துணைவர் வகையிலும் மருத்துவ செலவுகள் இருக்காது அதேபோல பெற்றோர்கள் வகையில் இருந்துவந்த வைத்திய செலவுகள் கட்டுக்குள் இருக்கும் குறையவும் வாய்ப்பு அதிகம் பிள்ளைகள் வழியிலும் பெரிய ஆறுகள் இல்லை மகிழ்ச்சியான நிலைகள் இருப்பதால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் குடும்ப ஆரோக்கியம் நன்றாக இருக்கும்

வணங்க வேண்டிய தெய்வம் நற்செயல்கள்  இந்த  குரு பெயர்ச்சி தொடர்ச்சியாக வரும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு பலவித நன்மைகள் செய்வதால் உங்கள் குலதெய்வம் மற்றும் இஷ்டமான தெய்வம் இவற்றை வணங்குங்கள் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று விளக்கு ஏற்றுங்கள் முடிந்தவரையில் தான தர்மங்களை அதிகமாக செய்யவும் 

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4 பாதங்கள், திருவாதிரை 4 பாதம், புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய):

உங்கள் ராசிக்கு குருபகவான் ஒன்பதில் பெயர்ச்சியாகிறார் இவர் 144 நாட்கள் வரை கும்ப ராசியில் இருக்கிறார் ஒன்பதாம் இடம் என்பது பாக்கியஸ்தானம் அங்கு குரு அமர்ந்து ராசியைப் பார்ப்பது கடந்த கால கஷ்டங்களை தீர்க்கும் விதமாக அமைகிறது தடைபட்டு வந்த முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும் காலம் இது வெற்றியைத் தேடித் தரும் பெயர்ச்சியாக அமைகிறது கூடவே 17 3 2022 அன்று ராகு பகவான் 11-ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகிறார் அதுவும் நன்மையை தருகிறது அதனால் இதுவரை போட்ட திட்டங்கள் இனி நிறைவேறும் பொருளாதார ஏற்றம் பெறும் சிலருக்கு சொந்த தொழில் அமையும் யோகம் உள்ளது வெளிநாடு உத்தியோகம் அவர்களுக்கு கைகூடிவரும் விரும்பிய இடமாற்றம் தொழில் மாற்றம் இவை நன்கு நடக்கும் அதனால் பொருளாதாரம் ஏற்றம் பெறும் பொதுவில் இந்த பெயர்ச்சி உத்தியோகஸ்தர்களுக்கும் சொத்த தொழில் செய்பவர் என அனைவருக்கும் வருமானத்தை பெருக்குவதாக அமைகிறது. இல்லத்தில் சுப நிகழ்வுகள் மூலம் சுப விரயம் உண்டாகும் இறைவன் அருள் நிறைந்து இருக்கும் பழைய விரோதிகள் அவர்கள் உங்களுக்கு நன்மை செய்வதாக செய்கிறவர்களாக மாறுவார்கள் உறவுகள் நட்புகள் தருவார்கள் பொருளாதார முன்னேற்றம் காரணமாக சிலருக்கு வீடு வாகன யோகங்கள் உண்டாகும் தாமதமாக சென்று கொண்டிருந்த திருமண பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வந்தது திருமணம் கைகூடும் ஒன்பதில் குரு உதிரத்தை தருகிறது நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு எதிர்பார்த்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் ஐந்தில் கேது ஒரு அளவுக்கு நன்மை தருவதால் பெரிய துன்பங்கள் இல்லை இந்த பெயர்ச்சி உங்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதாக அமைகிறது

 குடும்பம் : கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் இதுநாள் வரை இருந்து வந்த மனக்கசப்பு விலகும் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும் குழந்தைகளால் நன்மை உண்டாகும் பெற்றோர்கள் உறவுகள் நண்பர்கள் என்று அனைவரும் விரும்பியபடி இருப்பார்கள் அதனால் பெரிய நன்மைகள் உண்டாகலாம் பொதுவாக குடும்பத்தில் பொருளாதாரம் நன்றாக இருப்பதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும் தேவைகள் பூர்த்தியாகும்

 ஆரோக்கியம் :  பொதுவாக கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் பெரிய வியாதிகள் மருத்துவ செலவுகள் இருக்க வாய்ப்பில்லை ஆனால் மார்ச் 2022 முதல் ஐந்தில் வரும் கேது சிறு வியாதிகளை கொடுக்கும் மற்றும் செவ்வாய் சூரியன் சஞ்சாரங்கள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் டிசம்பர் 20 முதல் பிப்ரவரி 18 வரை வாழ்க்கை துணைவர் அல்லது பெற்றோர்கள் வழியில் கொஞ்சம் மருத்துவ செலவுகள் உண்டாகும் ஆரோக்கியம் பாதிப்பது அல்லது விபத்துக்கள் போன்றவற்றால் ஆனால் அது உடனே சரியாகிவிடும் இந்த காலகட்டங்கள் கவனமாக இருக்க வேண்டியது மற்றபடி ஆரோக்கியம் நன்றாக இருக்கும்

வணங்க வேண்டிய தெய்வம் &  நற்செயல்கள்:   முருகனை வழிபடுவது நன்மை தரும் அதேபோல் அனந்த பயணத்தில் இருக்கும் பெருமாளை சனிக்கிழமைகளில் சேவிப்பதும் நன்மை தரும்.  முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள் அது உங்களை நல்வழியில் கொண்டு செல்லும் மேலும் அருகிலுள்ள கோயில்களில் விளக்கேற்றி ஒரு வேளை பூஜைக்கான செலவுகளை ஏற்படும் நன்மை தரும் 

கடகம் : (புனர்பூசம் 4ம் பாதம், பூசம் 4 பாதம், ஆயில்யம் 4 பாதம் முடிய) :

கடக ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு எட்டில் பெயர்ச்சியாகிறார் குரு பகவான் அட்டம குரு கஷ்டத்தை கொடுக்கும் என்பார்கள் ஆனால் கோச்சார நிலைகள் நன்றாக இருக்கிறது அதனால் குரு பகவான்  12ஆம் இடம் 2ம் இடம் மற்றும் 4ம் இடம் இவற்றை பார்ப்பதால் சுப விரயங்கள் சுப செலவுகள் மற்றும் குடும்பத்தில் நல்ல நிலை தாயாரின் நல்ல  நிலை என்று முன்னேற்றமாகவும்,  வீடு, நிலம் போன்றவைகள் நன்றாக இருக்கும் பொதுவில் ஜீவன ஸ்தானம் நிச்சயம் நன்றாக இருக்கும் காரணம் பத்துக்குடைய செவ்வாய் நட்சத்திரத்தில் குரு இருப்பதால் அடுத்த 144 நாட்கள் நன்றாக இருக்கும் பொருளாதாரம் ஏற்றம் பெறும் வேலையில் முன்னேற்றம் இருக்கும் சொந்த தொழிலில் வருமானம் அதிகரிக்கும் சிலருக்கு புதிய வெளிநாட்டு அல்லது வெளியூர் வேலையும் கிடைக்க வாய்ப்புண்டு. இன்னுமொரு காரணம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 10-ஆம் இடத்துக்கு ராகு பெயர்ச்சி ஆவது இரட்டிப்பு வருவாயை தரும் நன்மைகள் அதிகம் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் அதேநேரம் சில சங்கடங்கள் அல்லது ஏமாற்றங்கள் உருவாக வாய்ப்புள்ளது காரணம் சுக்கிரன் மற்றும் செவ்வாய் சஞ்சாரம் இவை உடல்ரீதியான படுத்தல் அல்லது உறவுகளால் வைத்திய செலவு போன்றவையும் வீடு, நிலம் போன்ற விஷயங்களில் மெதுவாக முன்னேற்றமும் வழக்குகள் ஏற்படக்கூடிய நிலையும் இருக்கிறது கவனம் தேவை புதன் 6ல் வரும்போது (ஜனவரி பிப்ரவரி மாதங்களில்)  மனதில் குழப்பம் ஏற்பட செய்யும் அதனால் சிறு சிறு பாதிப்புகளும் ஏற்படும். பொதுவில் கலந்து கட்டி நன்மைகள் இருக்கும். தனிப்பட்ட ஜாதகத்தில் கிரஹநிலைகள் வலுவாக நன்மை தருவதாக  இருந்தால் கவலை வேண்டாம் பெரிய துன்பங்கள் இருக்காது.

குடும்பம் :  குரு பகவான் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் சுக ஸ்தானத்தையும் பார்ப்பது மன அமைதியைத் தரும் கணவன் மனைவி இடையே கடந்தகால கசப்புகள் நீங்கி ஒற்றுமை பெருகும் இல்லத்தில் திருமணம் குழந்தை போன்ற சுப நிகழ்வுகளால் அன்பும் ஒற்றுமையும் பெருகி இருக்கும் பெரிய துன்பங்கள் கிடையாது சிலருக்கு திருமண வாய்ப்புகள் கைகூடிவரும் வேறு வீடு வாங்கி அதில் குடி போகும் பாக்கியம் உண்டாகும் தனிப்பட்ட ஜாதகங்கள் கிரக நிலைகள் சாதகமாக இருந்தால் தற்போது நன்மைகள் அதிகமாக உண்டாகும் மேலும் பிள்ளைகள் மூலம் நன்மை அதிகம் என்பதால் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும்

ஆரோக்கியம்:  6ம் இடத்துக்கு அதிபதியான குரு பகவான் ஒன்பதில் இருப்பதால் ஆரோக்கியம் மேம்படும் தாய் தந்தையரின் நாள்பட்ட வியாதிகள் குறைய ஆரம்பித்து மருத்துவச் செலவுகள் குறையும் வாழ்க்கை துணைவர் உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும் பொதுவில் இல்லத்தில் நல்ல சூழல் இருப்பதால் குடும்ப உறவுகள் அனைவரது ஆரோக்கியமும் நன்றாக இருக்கும் இந்த குருபெயர்ச்சி நன்மை தருவதால் ஆரோக்கியம் மேம்படும்

 வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள்:  உண்ணாமுலை தாயார் உடனுறை அண்ணாமலையாரை வழிபடுவது, தட்சணாமூர்த்தி சுவாமியை வழிபடுவது அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று விளக்கு ஏற்றுவது பழமையான கோயில்களில் உழவாரப்பணி செய்வது இவை நன்மையை தரும் மேலும் பசித்தவருக்கு உணவளிப்பது உடலால் பாதிப்படைந்த துயர் துடைப்பது இவை நன்மையை பெருக்கித் தரும்

சிம்மம் : (மகம் 4 பாதம், பூரம் 4 பாதம், உத்திரம் 1ம் பாதம் முடிய):

சிம்ம ராசி அன்பர்களே குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழில் வருகிறார் மேலும் லாபம் மற்றும் தைரிய   ஸ்தானங்களை  பார்ப்பது நன்மை தருவதாக அமைகிறது தடைபட்டு வந்த திருமணம் ஏற்பாடுகள் கைகூடிவரும் பிள்ளை பெண்ணுக்கு முயற்சித்து வந்த திருமண ஏற்பாடுகள் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டு கைகூடிவரும் வரன் தேடி அமையும் அதேபோல் பொருளாதாரம் நன்றாக இருக்கும் பத்தில் இருக்கும் ராகு  ஒன்பதாம் இடம் நோக்கி நகர்வதால் சில வைத்திய செலவுகள் பெற்றோர்கள் மூலமாக உண்டாகும் மன அழுத்தமும் இருக்கும். இருந்தாலும் 8க்குடைய குரு பார்வையால்  கடந்த காலங்களில் ஏற்பட்ட வழக்குகள் அவதூறுகள் இவைகள் பூரணமாக விலகி சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும் வேலை இழந்தவர்கள் மீண்டும் பழைய பதவியை பெறுவார்கள் உத்யோகத்தில் இடமாற்றம் பதவி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது பணப்புழக்கம் தாராளமாக இருப்பதால் பொருளாதார ரீதியான பிரச்சனைகள் குறைவாக இருக்கும் திட்டமிடல் சரியாக இருப்பதால் பெரும்பாலும் நன்மையாக அமையும். அதேநேரம் தைரிய ஸ்தானத்தில் புதன் அமர்ந்து சில முடிவுகளால் கசப்பு  நிலை ஏற்படும் சில செலவுகள் வீணாக ஏற்படும் அதேபோல் பயணத்தினாலும்,பெண்களாலும் சில பாதிப்புகள் ஏற்படும் 6ல் சுக்ரன் வரும்போது கவனம் தேவை. சொந்தத் தொழில் செய்வோர்கள் சிறப்பாக முன்னேற்றம் இருந்தாலும் கவனம் தேவை கடந்தகால வழக்குகள் சிக்கல்கள் தீர்ந்து விட்டது போல் தெரிந்தாலும் அது நீறு பூத்த நெருப்பாக இருக்கும் அதனால் வார்த்தைகளை விடுவதிலும்  யோசித்து செயல்படுவதிலும் கவனம் செலுத்தினால் நன்மை உண்டாகும் அனைத்து பிரிவினருக்குமே பரவாயில்லை என்று சொல்லும்படியாக இந்த குரு பெயர்ச்சி அமைந்திருக்கிறது துன்பங்களும் ஓரளவு இருக்கும். கவனம் தேவை.  தனிப்பட்ட ஜாதகத்தில் கிரக நிலைகள் சாதகமாக இருந்தால் பெரிய அளவில் பாதிப்பு இப்போது இல்லை

குடும்பம் : கணவன் மனைவி ஒற்றுமை இருந்தாலும் சில சமயங்களில் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது வார்த்தைகள்  தடித்தால் அதனால் சிரமம் உண்டாகும் பொறுமை அவசியம் குடும்ப அங்கத்தினர்கள் இடையே பேதம் இல்லாமல் இருந்தால மகிழ்ச்சி அதிகரிக்கும் பெற்றோர்கள் பெரியோர்கள் ஆலோசனைப்படி நடந்து கொண்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் திருமணம் குழந்தை பாக்கியம் போன்றவை  மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்

ஆரோக்கியம் :  6-க்குடையவர் ஆட்சியாக ஆறாம் இடத்தில் அமர்ந்து நன்மை செய்தாலும் சுக்ரன் 6ல் வரும்போது வயறு, நெஞ்சு சம்பந்தப்பட்ட வியாதிகள் செலவை உண்டாக்கும். வாழ்க்கை துணைவர் மற்றும் பெற்றோர்கள் வழியிலும் சிலருக்கு புத்திரர்கள் வகையில் எதிர்பாரா மருத்துவ செலவுகளை தரும். கவனம் தேவை உணவுப்பழக்கங்கள் சரியாக வைத்திருப்பது நல்லது. ரொம்ப இல்லை என்றாலும் ஓரளவு ஆரோக்கிய பாதிப்புகள் இருப்பதால் கவனமாக இருப்பது அவசியம்.

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : அய்யனார் எல்லை தேவதைகள் மற்றும் குலதெய்வம் வழிபாடுகள் நன்மை செய்வதாக அமையும் கோயிலுக்கு தேவையான பொருட்களை வாங்கித் தருவது மற்றும் பழைய புராதன கோயில்களில் ஒருவேளை பூஜைக்கு உதவி செய்வது விளக்கேற்றி வழிபடுவது நன்மைகளை உண்டாக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்தல் இயலாதவர்களுக்கு அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்தல் போன்றவை சிரமங்களை குறைத்து நன்மையாக மாற்றிவிடும்

கன்னி: (உத்திரம் 2,3,4 பாதங்கள், ஹஸ்தம் 4 பாதம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய)

கன்னி ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 6ல் குருபகவான் சஞ்சாரம் அவர் 4,    7க்கு உடையவர் அவர் 6ல் மறைந்தாலும் பார்வையால் ஓரளவு நன்மை  உண்டாக்குகிறார் இருந்தாலும் மற்ற கிரக சஞ்சாரங்கள்,  ராகு-கேது வரும் மார்ச் 2022 அன்று 2ம் & 8ம் இடங்களில் சஞ்சரிப்பது பொருளாதாரத்தை ஏற்ற இறக்கத்துடன் செய்யும் எதிலும் நிதானம் தேவை ஒரு சில நன்மைகள் உண்டானாலும் அது உங்கள் ராசிநாதன் புதன் மற்றும் செவ்வாய் சூரியன் சஞ்சாரங்கள் தருவதாகும் மற்றபடி எதிலும் பக்குவமாக நடந்து கொண்டால் வார்த்தை விடுவதில் கவனம் இருந்தால் ஜீவன ஸ்தானத்திற்கு கஷ்டம் வராது 10-க்குடைய வரும் புதன் என்பதால் வேலைகளில் மாற்றம் வருவது கொஞ்சம் கடினம் அதேவேளை கடின உழைப்பை நீங்கள் தரலாம் ஆனால் முன்னேற்றம் என்பது மிக மெதுவாக இருக்கும் பொதுவில் திட்டமிடல்களை ஆலோசனை பெற்று செய்வது நல்லது அவசரம் காட்டுவது சரியல்ல ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்தல் நல்ல பலனைத் தரும் வார்த்தைகளை உதிர்ப்பதால் எதிரிகளை சம்பாதித்துக் கொள்வீர்கள் மேலும் உடல் மனம் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் பெரியோர்களை மற்றும்  நலம் விரும்பிகளை கலந்து ஆலோசித்து எதைச் செய்தாலும் அது நன்மையாக அமையும் சொந்தத் தொழில் செய்வோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் தொழில் கூட்டாளிகள் தொழிலாளர்கள் மற்றும் அரசு வங்கி இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்வதும் நல்ல பலனை தரும். புதிய விஸ்தரிப்புகளை ஏப்ரல் 2022க்கு பின் வைத்து கொள்வது நல்லது. அதுவரை பொறுமை தேவை. மற்ற அனைத்து பிரிவினர், மகளிர் விவசாயிகள் அனைவருக்கும் கூட மேற்படி தான் என்பதால் இந்த குருப்பெயர்ச்சியில் நிதானம், மௌனம், விடா முயற்சி இவற்றை கொண்டால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

குடும்பம் : 7-க்கு உடையவர் 6ல் மறைவு நல்லதல்ல என்பர் ஆனால்  கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் இருந்தாலும் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வது நன்மை தரும் மேலும் திருமண முயற்சிகள் தாமதத்துக்கு பின் கைகூடும் குரு பகவான் இரண்டாம் இடத்தை ஒன்பதாம் பார்வையாக பார்ப்பது குடும்பத்தில் மகிழ்ச்சியும் புதிய வரவு களையும் கொண்டுவந்து தரும் மேலும் குடும்ப அங்கத்தினர்கள் உடன் நல்ல இணக்கமான நிலை ஏற்படும் பொதுவில் குரு பகவான் 6ல் இருந்தாலும் நன்மைகளை மட்டுமே செய்வதால் குடும்பத்தில் பெரிய பாதிப்புகள் இருக்காது இல்ல தேவைகள் பூர்த்தியாகும் வாழ்க்கை துணை வழியில் வருமானம் பெருகும் அதனால் சிலருக்கு புதிய பூமி வீடு கிடைக்க வாய்ப்புண்டு பிள்ளைகளால் நன்மை உண்டாகும் என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும்

ஆரோக்கியம் : கண் வயிறு தலை இடுப்பு முதுகு எலும்பு இவற்றில் பாதிப்புகள் உண்டாகலாம் ஆறுக்குடைய சனிபகவானை கேது பார்ப்பது மற்றும் 6ல் குரு இருப்பது இவை சில வியாதிகளை உண்டாக்கி மருத்துவச் செலவுகளை கொடுக்கும் மேலும் ஏழுக்குடைய குரு 6ல் மறைவு வாழ்க்கை துணைவர் வழியில் சில வைத்திய செலவுகளை உண்டாக்கும் மேலும் 9க்கு உடைய சுக்கிரன் 5ல் சனியுண்டன் சஞ்சரிக்கும் போது  நோயின் தீவிரம் அதிகமாகும் பிள்ளைகள் வழியில் மருத்துவச் செலவுகள் உண்டாகும் கவனமாகவும் சரியான சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டால் வைத்திய செலவுகள் கட்டுக்குள் இருக்கும் ஆரோக்கியம் சீர்படும் பொதுவில் இந்த குரு பெயர்ச்சி உடல் ஆரோக்கிய பாதிப்புகள் வைத்திய செலவுகள் இவற்றை தருவதாக அமைகிறது

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : ஸ்ரீ ஹயக்ரீவர் தன்வந்திரி பகவான் மற்றும் வைத்தியநாதர் இவர்களை வணங்குவது அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று விளக்கேற்றுவது நன்மைகளைத் தரும். அதேபோல் மற்ற உயிரினங்களான  வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது தர்ம கைங்கரியங்கள் செய்வது நன்மை தரும்

துலாம்: (சித்திரை 3,4 பாதங்கள், ஸ்வாதி 4 பாதம், விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய):

துலா ராசி அன்பர்களே உங்களுக்கு    அடுத்த 144 நாட்கள்  மிகுந்த நன்மை தருவதாக அமையும் காரணம் குரு பகவான் 5ம் இடத்தில் சஞ்சரிக்கிறார் மேலும் பார்வையால் உங்கள் ராசியை பார்க்கிறார் மற்ற கிரகங்களும் இந்த காலகட்டத்தில் சஞ்சரிக்கும் பொழுது நன்மைகளே அதிகம் நடைபெறுகிறது மார்ச் 2022 முதல் ராகு ஏழிலும் கேது ஜென்மத்திலும் சஞ்சரிக்கும்போது சில செலவுகள் தர்ம சங்கடங்கள் வரும் மற்றபடி பெரிய தொல்லைகள் இருக்காது பொருளாதாரம் மிக நன்றாக இருக்கும் ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருக்கிறார் அதனால் உங்கள் முயற்சிகள் வெற்றியை தரும் வேலைவாய்ப்புகள் மிக நன்றாக இருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடந்தகால முயற்சிகளின் பலனை அனுபவிப்பார்கள் நல்ல உத்தியோகம் பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் என்று இருக்கும் சொந்தத் தொழில் செய்வோர் புதிய தொழில் விஸ்தரிப்பு களை செய்ய ஆரம்பிக்கும் காலம் இது அதில் மிகப்பெரிய நன்மைகளை பெற்று அடுத்து வரும் காலங்களில் மிக உயர்ந்த நிலையை அடைவர் பொருளாதாரம் பணப்புழக்கம் மிகுந்த ஏற்றமாக இருக்கும் மற்ற பிரிவினர் பெண்கள் மாணவர்கள் என்று அனைவருக்கும் இந்த குருபெயர்ச்சி உன்னதமான பலனை தருகிறது கடந்த காலங்களில் ஏற்பட்டு வந்த தடைகள் விலகி சிலருக்கு திருமண வாய்ப்புகள் கைகூடி வரும் குழந்தை எதிர்பார்த்து ஐந்தில் குரு இருப்பதால் புத்திர பாக்கியம் இப்பொழுது ஏற்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் உறவுகளால் நன்மை உண்டாகும் 9-க்குடையவர் ராசியில் இருப்பது நான்கு உடையவர் ஆட்சியாக இருப்பது பெற்றோர் வகையில் நன்மைகளை அதிகரிக்கவும் மேலும் அவர்களுடைய வைத்திய செலவுகள் குறைய ஆரம்பிக்கும் சிலருக்கு புதிய வீடு வாகனம் ஆடை ஆபரணச் சேர்க்கை என்று நன்றாக இருக்கும் கடந்த காலங்களில் செய்த முயற்சிகளின் பலன்கள் வெற்றியாக தற்போது கிடைக்கும் தொல்லைகள் என்று சொன்னால் கடந்தகாலத்தில் சம்பாதித்த எதிரிகளை விட்டுவிட்டதால் அவர்களால் சில மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு எதிலும் கவனமாக செயல்பட்டு கொஞ்சம் கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்பட்டால் நன்மை அதிகமாக உண்டு இந்த குருப்பெயர்ச்சி பெரும்பாலும் நன்மைகளையே செய்வதால் சிறுசிறு சங்கடங்கள் மட்டுமே தருவதால் நன்மை உண்டாகும் பெயர்ச்சியாக இதை கொள்ளலாம்

குடும்பம் :  இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் கணவன் மனைவி கொஞ்சம் விட்டுக்கொடுத்துச் செல்வதால் புரிந்துகொண்டு அனுசரித்துப் போவதால் அதிக நன்மை இருப்போம் மேலும் பெற்றோர் குழந்தைகள் மற்ற உறவுகள் எல்லோரிடமும் அன்பு காட்டுவதால் அவர்களால் நன்மை உண்டாகும் தடைபட்ட அல்லது தாமதமான திருமண முயற்சிகள் இப்பொழுது கைகூடி இல்லத்தில் புதிய வரவுகள் உண்டாகும் குழந்தைப் பேறு வேண்டி தவம் இருந்தவர்கள் இந்த குரு பெயர்ச்சியில் அதை பெற்று மகிழ்வார்கள் பொதுவில் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நன்மை அதிகமாக இருக்கும்

ஆரோக்கியம் :  காற்று ராசியான துலா ராசி அன்பர்கள் 6க்குடைய குரு பகவான் 5ல் சஞ்சரிப்பதும் 6-ஆம் இடத்துக்கு சனி பார்வை இருப்பதும் எலும்பு வாயு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் சிலருக்கு உஷ்ணத்தினால் பாதிப்புகளும் உண்டாகலாம் வாழ்க்கை துணைவருக்கும் இதேபோல் இருந்து வைத்திய செலவுகள் அதிகரிக்கலாம் உணவில் கவனம் தேவை, பெற்றோர் வழியில் சிலவுகள் குறைந்துவிடும். கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும் ஆரோக்கியம் மேம்படும்

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : லட்சுமி நரசிம்மர் மற்றும் சுதர்சன சக்கரத்தாழ்வார் அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபடுவது கூடுமானவரையில் இறைவனின் நாமத்தை உச்சரிப்பது நன்மை தரும் அதேபோல் முடிந்த அளவு வறுமை பாதித்தவர்களுக்கு உணவு உடை கல்வி இவற்றை வழங்குவது மிகுந்த நன்மை தரும்

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம் 4 பாதம், கேட்டை 4 பாதம் முடிய):

விருச்சிக ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு நாளில் குரு பகவான் சஞ்சரிக்கிறார் பார்வையால் 8 10 12ம் இடங்களை பார்க்கிறார் ஓரளவுக்கு நன்மை உண்டாகும் பெரும்பாலும் உங்கள் ராசிக்கு சாதகமான கிரகங்கள் சஞ்சாரங்கள் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் நடக்கிறது அனைத்துமே உங்களுக்கு சாதகமாக இருக்கும் மேலும் இத்தனை நாள் ஜென்மத்தில் இருந்த கேது வரும் மார்ச் 2022 முதல் 12ம் வீட்டை அடைகிறார் குரு பார்வை பெறுகிறார் அதேபோல் 6ல் ராகு வருகிறார் அதனால் பல நாள் இருந்து வந்த வியாதிகள் குணமடையும் மனம் தெளிவடையும் செயல்களில் வெற்றி உண்டாகும் மற்றும் எல்லா கிரகங்களும் சில பல நன்மைகளை செய்கிறது அதனால் பொருளாதார ரீதியாக நன்றாக இருக்கும் குருவின் மேற்பார்வை 10ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோக மாற்றம், பதவி உயர்வு, சொந்த தொழிலில் விஸ்தரிப்பு பணிகள் பூர்த்தியடையும் பணப்புழக்கம் அதிகரிக்கும் காலம் என்பதால் இல்ல தேவைகள் பூர்த்தியாகும் மேலும் 7க்குடைய சுக்கிரன் 2ல் சஞ்சரிப்பது தாமதமாகிக் கொண்டிருந்த திருமணத்தை உடன் முடித்து வைக்கும் அதேபோல் சிலருக்கு குழந்தை பாக்கியம் வீடு வாகன யோகம் உண்டாகும்,  கடந்தகால வழக்குகள் சாதகமாகும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்தல் போன்றவை நடக்கும், அதேநேரம் தனிப்பட்ட ஜாதகங்களில் குருபகவான் வலுவற்று இருந்தால் இந்த நன்மைகள் குறைய வாய்ப்புண்டு . பொதுவில் 70% நன்மை தரும் பெயர்ச்சியாக இருக்கும்.

குடும்பம் : கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் கடந்தகால கசப்புகள் நீங்குவதற்கு வாய்ப்புகள் உண்டாகும் முன்புபோல் அல்லாமல் வாழ்க்கை துணைவர் பெற்றோர் குழந்தைகள் என்று அனைவரிடமும் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வீர்கள் அதனால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும் மேலும் தாமத பட்ட திருமணம் கைகூடும், புத்திர பாக்கியம் எதிர்பார்ப்பு அது உண்டாகும் என்பதாலும் சிலருக்கு வீடு வாகன யோகம் இருப்பதாலும் மகிழ்ச்சி குறைவில்லாமல் இருக்கும் பிள்ளைகளால் பெருமை உண்டாகும்

ஆரோக்கியம்  உடல் ஆரோக்கியத்தை பொருத்தமட்டில் வைத்தியச் செலவுகள் இருந்தாலும் மார்ச் 2022 முதல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் வைத்திய செலவுகள் குறை ஆரம்பிக்கும் மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் பெருகும் வாழ்க்கை துணைவர் மற்றும் பெற்றோர்கள் மூலம் உண்டான வைத்திய செலவுகள் குறைந்துவிடும் அல்லது இல்லாமல் போகும் பொதுவில் குடும்பத்தில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மகிழ்ச்சி அதிகம் இருப்பதால்

வணங்கவேண்டிய தெய்வம் & நற்ச்செயல்கள் : குலதெய்வம் மற்றும் சுவாமிமலை முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றுவது சஷ்டி கவசம் படிப்பது கோளறு பதிகம் சொல்லுவது நன்மையைத் தரும் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்வது நன்மை பயக்கும்: 

தனூர்: (மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம், உத்திராடம் 1ம் பாதம் முடிய):

தனுசு ராசி அன்பர்களே உங்கள் ராசிநாதன் குருபகவான் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் அது நன்மை தருவதாக அல்ல என்றாலும் கெடுதல் இல்லை அதே நேரம் அவர் பார்வையால் 7,9,11ம் இடங்களை பார்ப்பது மிகுந்த நன்மையை தரும் போட்டு வைத்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும் மற்ற கிரகங்களில் சனி புதன் சுக்கிரன் மற்றும் சூரிய இவர்களும் மார்ச் 2022 முதல் 11ள் வரும் கேது சஞ்சாரங்கள் நன்மை தருவதாக அமைகிறது தடைப்பட்டுப் போன திருமணம் கைகூடிவரும்  வீடு நிலம் இவற்றில் போட்ட பணம்  தாமதம் ஆனாலும் வீடு நிலம் கைக்கு கிடைக்கும்படி செய்யும் உத்தியோகத்தில் இருந்து வந்த தடைகள் தேவையற்ற இடமாற்றம் சம்பள உயர்வு இல்லாமை இவை அனைத்தும் நீங்கி விரும்பிய இடமாற்றம் கேட்ட பதவி சம்பள உயர்வு எல்லாம் கிடைத்து பணப்புழக்கம் தாராளமாக இருக்கும் அதேபோல் சொந்தத் தொழில் செய்வோருக்கு  தொழில் விரிவாக்கத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி மீண்டும் தொழில் முன்னேற்றம் அடையும் விரிவாக்கம் நன்றாக இருக்கும் அதனால் பணவரத்து கூடும் பொதுவில் தடைகள் அகன்று முயற்சிகள் வெற்றி பெறும் அனைத்து பிரிவினருக்கும் நன்மைகள் அதிகம் நடக்கும் அதேநேரம் சில செலவுகள் ஏற்படும் உறவுகளால் நண்பர்களால் மன வருத்தம் உண்டாகும் வாய்ப்பு உள்ளது பொறுமை அவசியம் நிதானம் அவசியம் கடந்த காலத்தில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் அவப்பெயர் ஏற்பட்டு அது தற்போது நீங்கிவிடும் இந்த குருபெயர்ச்சி பெரும்பாலும் சாதகமாகவே இருக்கிறது சில ஆரோக்கிய பாதிப்புகளை தவிர அதேபோல் சில மனவருத்தங்கள் தவிர வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துவீர்கள். விருந்து கேளிக்கைகள், புனித யாத்திரைகள் என செல்வீர்கள்.

குடும்பம் : கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும் கடந்தகால மனவருத்தங்கள் நீங்கும் புரிதல் நன்றாக இருக்கும் அதேபோல் பெற்றோர்கள் பிள்ளைகள் சகோதர வகை இப்படி எல்லா உறவுகளும் நெருக்கம் அதிகரிக்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும் விட்டுக் கொடுத்து செல்லும் நிலையும் இருக்கும் அதேபோல் இல்லத்தில் சுப விரயங்கள் அதாவது திருமணம் குழந்தை பாக்கியம் வீடு வாகன யோகம் யாத்திரைகள் தெய்வ தரிசனம் கேளிக்கைகள் என்று சுவரில் இருந்து கொண்டிருக்கும் பொதுவில் சில மன வருத்தங்கள் இருந்தாலும் பெரும்பாலும் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும்

ஆரோக்கியம் : தோல் உன் போன்ற சில வியாதிகளால் அவ்வப்போது அவற்றை பட்டுக்கொண்டு இருப்பீர்கள் அது வரும் மார்ச் மாதம் சரியாகும் மார்ச்சில் ராகு ஐந்தில் வருவது குத்தினால் மருத்துவ செலவை உண்டாக்கக் கூடும் மேலும் வாழ்க்கை துணைவர் மூலமும் சில எதிர்பாராத வைத்தியச் செலவுகள் உண்டாகும் பொதுவில் பெரிய அளவில் இந்த வைத்திய செலவுகள் இல்லை என்றாலும் நண்பர்கள் உறவுகளால் ஏற்படும் மன வருத்தங்கள் உடல் பாதிப்பை தரும் அதனால் நிதானமாகவும் சரியான சிகிச்சை தியானப் பயிற்சி இறைநம்பிக்கை இவற்றை மேற்க்கொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : உறையூர் வெக்காளியம்மன் மற்றும் குலதெய்வம் வழிபாடு நன்மை தரும் அருகிலுள்ள அம்மன் துர்க்கை நரசிம்மர் போன்ற கோயில்களுக்கு சென்று விளக்கேற்றி தெய்வ நாமத்தைச் சொல்லி வழிபடுவது நன்மை தரும் முடிந்த அளவு கல்வி தானம் ஆடை தானம் செய்வதும் பசித்தோர்க்கு பசுபக்ஷிகளுக்கு உணவிடுவது நன்மை பயக்கும் 

மகரம்: (உத்திராடம் 2,3,4 பாதங்கள் , திருவோணம் 4 பாதம், அவிட்டம் 1,2 பாதங்கள் முடிய):

உங்கள் ராசிக்கு  2 இல்  குருபகவானின் சஞ்சாரம் மிக சிறப்பாக உள்ளது மேலும் அவர் 6,8,10ம் இடங்களை பார்ப்பது வலிமை உண்டாக்குவதாக இருக்கிறது இரண்டாம் இடம் குடும்பம் தனபிராப்தி வாக்கு மனம் ஆகிய ஸ்தானங்கள் ஆகும் அங்கு குரு பகவான் வீற்றிருப்பது உங்களது குடும்ப முன்னேற்றம் செல்வ வளத்தை பெருக்கும் உங்களது மனம் தூய்மையாக இருக்கும் கடந்தகால நிகழ்வுகள் உங்களை ஒரு இடத்தில் கட்டிப் போட்டது போல் வைத்திருந்திருக்கும் அது இப்போது நீங்கி நீங்கள் உங்கள் முயற்சிகளை செயலாற்றுவீர்கள் அதற்கு வலிமை சேர்ப்பது போல் மற்ற கிரக சஞ்சாரங்கள் இருக்கிறது மேலும் உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும் நேரம் இது பொதுவாக உங்கள் ராசிக்கு அதிபதியான சனி பகவான் ராசியில் ஆட்சி செய்வது அவர் மூன்றாம் பார்வையாக மூன்றாம் இடத்தை பார்ப்பதும் அதேபோல் ராசிக்கு 7-ஆம் இடத்தை பார்ப்பது பத்தாம் பார்வையாக துலாம் ராசி பார்ப்பது விசேஷமான ஒன்று உங்கள் பொருளாதாரம் மனோதிடம் வாழ்க்கை துணைவர் முன்னேற்றம் தொழில் விருத்தி என்று எல்லாமே நன்றாக இருக்கும் உத்தியோகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் பிடித்த வேலை அந்நிய தேச வாசம் என்று இருக்கும் மேலும் பத்தாம் இடத்திற்கு கேது மார்ச் 2022-ல் நகர்வது இரட்டிப்பு வருவாயை தரும், சொந்தத் தொழிலில் வருமானம் இரட்டிப்பாகும் இதுவரை இருந்துவந்த தடைகள் விலகி வியாபாரம் செழிக்கும் தொழில் விரிவாக்கம் ஏற்படும் அதன்மூலம் பேர் புகழ் கிட்டும் எதிர்பார்த்த அரசு உதவிகள் வங்கி கடன்கள் கிடைக்கும் மற்றும் அனைத்து பிரிவினருக்கும் தேவைகள் பூர்த்தியாகும் பெயர்ச்சி இது நன்மைகள் அதிகம் நடக்கும் கஷ்டங்கள் என்று பார்க்கும்போது நண்பர்களால் உறவுகளால் அவர்கள் செய்யும் தவறுகள் அல்லது வேறு செயல்கள் உங்களை சிரமத்துக்கு உள்ளாகும் இருந்தாலும் உங்கள் ராசி அதிபதி மிக வலுவாக இருப்பதால் அது உடனடியாக விலகி விடும் உங்களுக்கு இந்தப் பெயர்ச்சி அடுத்த 144 நாட்கள் மகிழ்ச்சி முன்னேற்றத்தையும் செல்வத்தையும் கொடுப்பதாக அமைகிறது

 குடும்பம் கணவன் மனைவி இடையே கருத்துப்பரிமாற்றம் நன்றாக இருக்கும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடந்து கொள்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும் மேலும் 5-க்குடையவர் குருவுடைய அனுகூலம் பெறுவதால் புத்திர பாக்கியம் உண்டாகும் இல்லத்தில் எதிர்பார்த்த  திருமணம் நடக்கும்  சிலருக்கு வீடு நிலம் ஆடை ஆபரணம் போன்றவைகள் வாங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும் முயற்சித்தால் அது பலிதமாகும் குழந்தைகளால் நன்மை உண்டாகும் பெற்றோர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும் குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் அக்கம்பக்கத்தாரோடு இணக்கமான போக்கு இருக்கும் உடன் பிறந்தோர் அல்லது வாழ்க்கை துணைவரின் உடன்பிறந்தோர் முலம் நன்மை உண்டாகும்.

ஆரோக்கியம் : பொதுவாக குரு மற்றும் சனி இருவரும் நல்ல நிலையில் இருப்பதாலும் 6-க்குடையவர் 8-க்குடையவர் இவர்கள் குரு சம்பந்தம் அடைவதாலும் உடல்ரீதியான படுத்தல்கள் இருக்காது ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும் பெரும்பாலும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் அதேபோல் வாழ்க்கை துணைவர் ஆரோக்கியமும் மேம்படும் முன்பிருந்த வைத்திய செலவுகள் நீங்கும் அல்லது குறையும் பெற்றோர் வழியிலும் வைத்திய செலவுகள் குறைய ஆரம்பிக்கும் பிள்ளைகள் மூலம் வைத்திய செலவுகள் இருக்காது குடும்பத்தில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் :  திருச்சி அன்பிலில் எழுந்தருளியிருக்கும் அழகிய வல்லித் தாயார் உடனுறை வடிவழகிய நம்பி பெருமாளை (அன்பில் சுந்தரராஜ பெருமாளை)  சேவிக்க வேண்டும் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும் முடிந்தவரையில் அன்னதானம் வஸ்திர தானம் கல்வி தானம் இவற்றைச் செய்வதால் நற்பலன்கள் கூடும்

கும்பம்: (அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம் 4பாதம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் முடிய):

கும்ப ராசி அன்பர்களே உங்கள் ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கிறார் அடுத்த 144 நாட்களுக்கு.  ஜென்ம குரு சிறைவாசம் என்பர் இதன் அர்த்தம் என்னவென்றால் ஒரு கட்டிப்போட்ட நிலை சிறைவாசம் ஒரே இடத்தில் இருக்கிறது அங்கிருந்து வெளியே வர முடியாது அப்படி ஒரு நிலை அதாவது உங்கள் முயற்சிகள் தாமதமாக நடக்கும் மேலும் இந்த குரு பெயர்ச்சி சமயத்தில் மற்ற கிரகங்கள் என்று பார்க்கும்போது ராகு சுக்கிரன் புதன் இவர்களின் சஞ்சாரங்கள் ஓரளவுக்கு நன்மை செய்கிறது பணத்தேவைகள் பூர்த்தியாகும் மேலும் ராகு மார்ச்  2022 முதல் மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பது நல்ல நிலையை உண்டாகும் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாக வாய்ப்புகள் இருக்கு மேலும் மற்ற கிரக நிலைகள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும் 10-ஆம் இடத்துக்கு உடைய செவ்வாயின் சஞ்சாரம் அவ்வளவு சாதகமாக இல்லை வேலை இருக்கும் உழைப்பீர்கள் வருமானம் உயராது புதிய வேலைக்கு முயற்சி செய்தால் தாமதமாக  கிடைக்கும் அதேநேரம் ஜனன ஜாதகத்தில் குரு மற்றும் 10-க்குடையவர் வலுவாக இருந்தால் பெரிய பாதிப்புகள் இல்லை பணத்தேவைகள் பூர்த்தியாகும் ஆனால் அது உடனே அல்ல கொஞ்சம் தாமதத்துக்கு பின் கடும் முயற்சிக்குப் பின் காரணம் கிரக நிலைகள் பெரிய அளவில்  சாதகமாக  இல்லை அதனால் இன்று கிடைக்க வேண்டியது ஒரு வாரம் கழித்து கிடைக்கும் அவ்வளவுதான் சொந்த தொழில் செய்வோர் புதிய முயற்சிகளை நன்கு யோசித்து செய்வது கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருப்பது. அரசோடு இணக்கமாக செல்வது என்று இருந்தால் பிரச்சனைகள் குறைவாக இருக்கும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் கூட இது பொருந்தும்.  சில மனக்கசப்புகள் நண்பர்களால் உடன் வேலை செய்வோரால் உறவுகளால், தொழில் கூட்டாளிகள் வேலைக்காரர்கள் என அனைவராலும் பிரச்சனை உண்டாகலாம்.மேலும் வார்த்தைகள் விடுவதில் கவனம் தேவை எதிலும் நிதானம் விடாமுயற்சி நேர்மை மிக முக்கியம் இவை இருந்தால் ஓரளவுக்கு நன்மைகள் இருக்கும் வாக்கு கொடுப்பதில் கவனம் தேவை குடும்ப ரீதியாக சில பிரச்சனைகளை சந்திக்க நேரும் அதுவும் வீடு நிலம் சம்பந்தமாக சகோதர வகையால் துன்பம் வரலாம் கவனம் தேவை பொதுவில் இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு சாதகமும் இருக்கிறது பாதகமும் இருக்கிறது உங்களுடைய நிதானம் பொறுமை நேர்மை மற்றும் கடின உழைப்பு இவற்றைப் பொறுத்து நன்மை தீமை  அளவு கூட குறைவு என்று இருக்கும்.  மௌனம் காப்பது நல்லது

குடும்பம்: குடும்பத்தில் அமைதி இருக்கும் ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போனால் பிரச்சனைகள் வராது இருந்தாலும் நீங்கள் விட்டுக்கொடுத்துப் போனாள் வாழ்க்கைத் துணையோடு மட்டும் அல்லாது குடும்ப உறவுகள் மற்றும் அக்கம்பக்கத்தார் இவர்களோடு கூட அனுசரித்துப் போவது நன்மை தரும் இரண்டாம் இடத்துக்கு உடையவர் உங்கள் ராசியில் இருப்பதால் உங்கள் கருத்துகள் மெதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் அதனால் பொறுமை நிதானம் தேவை சுமாராக இருப்பதால் வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் குடும்பம் நன்றாக இருக்கும். பெற்றோரை வணங்குவது ஆலோசனை பெறுவது நன்மை தரும்.

ஆரோக்கியம் : பலரால் மனவருத்தங்கள் உண்டாகி ஒரு சோர்வைத் தரும் இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கும் மேலும் ஆறுக்கு உடையவர் வலுவற்ற நிலையில் இருப்பது வாழ்க்கை துணைவர் மற்றும் குடும்ப உறவுகள் மூலமும் வைத்திய செலவுகள் உண்டாகும்  நிதானித்து செயல்பட்டால் ஆரோக்கியம் மற்றும் குடும்ப அங்கத்தினர்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எடுத்தேன் கவிழ்த்தேன் என முடிவு செய்யாமல் எதையும் கலந்து பேசி முடிவெடுப்பதால் மனம் நிம்மதியை அடையும் அதன் மூலம் ஆரோக்கியம் கூடும். தகுந்த மருத்துவ ஆலோசனைகளை பெற்று அதன் படி நடப்பது நல்லது.

வணங்கவேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி, ஐயப்பன், இந்த தெய்வங்களை வழிபட்டு அம்மனுக்கு உரிய ஸ்லோகங்களை சொல்வது கோயிலில் விளக்கேற்றுவது நன்மை தரும் முடிந்தவரையில் தானதர்மங்கள் செய்வது நல்லது இறைவனை கெட்டியாக பிடித்துக் கொள்வது துன்பத்தில் இருந்து காக்கும்

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி 4 பாதம், ரேவதி 4 பாதம் முடிய):

மீன ராசி அன்பர்களே மிகச் சாதகமான குருபெயர்ச்சி உங்களுடையது உங்கள் ராசிநாதன் குரு 12ல் சஞ்சரிக்கிறார் சுப செலவுகள் மற்றும் பலவித நன்மைகளை செய்கிறார் மேலும் சனி புதன் சூரியன் செவ்வாய் சுக்கிரன் என்று அனைத்து கிரகங்களும் சாதகமான நிலையில் சஞ்சாரம் செய்வதால் உங்கள் எண்ணங்கள் உங்கள் செயல்பாடுகள் வெற்றிகரமாகவும் திருப்திகரமாக நிறைவேறும் நீங்கள் இதுவரை முயற்சித்த விஷயங்களில் இனி அதிக நன்மை எதிர்பார்க்கலாம் அதேபோல் பொருளாதார ரீதியாக இரட்டிப்பு வருமானம் வந்து உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் சனிபகவான் லாபத்தில் ஆட்சியிலிருந்து உங்கள் ராசியை பார்த்து உங்களது வருகிறார் அவர் பலமாகவும் இருக்கிறார் அதேபோல இருக்கும் அவரால் நன்மை உண்டாகிறது புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை கலைத்துறையில் உள்ளவர்கள் செய்வார்கள் மற்றும் புதன் நிதானத்தையும் புத்திக்கூர்மையையும் தருவதால் சூரியன் லாபத்தில் வரும்போது நன்மை செய்வதால் ஜீவன வகையில் முன்னேற்றம் ஏற்படும் அதனால் வீடு வாகன யோகங்கள் என்று அனைத்தும் உண்டாகும் மேலும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அனைத்து பிரிவினரும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள் விரும்பிய இட மாற்றம் அல்லது புதிய வேலை சிலருக்கு அரசாங்க வேலை சிலருக்கு வெளிநாட்டு வேலை என்று கிடைத்து மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும் அதேபோல சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய தொழில் விஸ்தரிப்பு வங்கி கடன் வியாபாரப் பெருக்கம் என்று சிறப்பாக இருக்கும் பொதுவில் பொருளாதாரம் நன்றாக இருப்பதால் மற்ற அனைத்து விஷயங்களும் சாதகமாக இருக்கும் சிலருக்கு வீடு வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்  திருமணம் குழந்தை பாக்கியம் என்று இல்லத்தில் வரிசையாக விசேஷங்கள் நடக்கும் உறவுகளின் நெருக்கம் கூடிவரும் அவர்களால் பல நன்மைகள் உண்டாகும் பொதுவில் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான ஒன்றாக அமையும்

குடும்பம் : கணவன் மனைவி ஒற்றுமை நிறைந்து காணப்படும் ஒருவரை ஒருவர் அனுசரித்து புரிந்துகொண்டு நடப்பர் இல்லத்தில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் பெற்றோர்கள் மூலம் சொத்துக்கள் கிடைக்கலாம் அல்லது வருமானம் பெருக வழி உண்டாகலாம் புதிய வீடு சிலருக்கு அமையும் கடந்தகால தாமதமான முயற்சிகள் இப்பொழுது நடப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும் சகோதர வகையில் நன்மைகள் அதிகரிக்கும் பரஸ்பரம் அன்பு காட்டி மகிழ்ச்சியான குடும்பமாக அமையும்

ஆரோக்கியம்: பொதுவில் மகிழ்ச்சி அதிகம் இருப்பதாலும் மார்ச் 2022 முதல் ராகு இரண்டில் வரும்போது வியாதிகள் இல்லாமல் இருக்கும் அல்லது வைத்தியச் செலவுகள் குறையும் மனதில் நிம்மதி இருக்கும் பெரிய வைத்திய செலவுகள் இருக்காது குடும்ப அங்கத்தினர்கள் வகையிலும் வைத்திய செலவுகள் இருக்காது அல்லது மிகக் குறைவாக இருக்கும் எல்லோருக்கும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் கிரகங்கள் சாதகமாக இருப்பதால் ஆரோக்கிய பிரச்சனைகள் வராது

வணங்க வேண்டிய தெய்வம் & நற்செயல்கள் : உங்கள் இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வம் வழிபாடு மிகச் சிறந்த ஒன்று அருகிலுள்ள கோயிலில் விளக்கேற்றி வழிபடுவது நன்மை தரும் மேலும் இந்த குருபெயர்ச்சி மிக அதிக அளவில் உங்களுக்கு நன்மை தருவதால் முடிந்த அளவு தான தருமங்களைச் செய்யுங்கள் அதிகமாக அன்னதானம் செய்யுங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும்

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி, ஜோதிடர்,

D1-304, D1 Block, சித்தார்த் பௌண்டேஷன்

ஐய்யஞ்சேரி மெயின்ரோடு, ஊரப்பாக்கம் – 603210

மொபைல்(வாட்ஸப்) 8056207965, லேண்ட்லைன் : 044-35584922

Email ID : mannargudirs1960@hotmail.com

!! ஸுபம் !!

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.