குரு பெயர்ச்சி 2020 – மிதுன ராசி பலன்கள்

ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

(மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் முடிய)

குருபகவான் வருகிற 20.11.2020 பகல் 12.36.27 மணிக்கு தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இது லஹரி அயனாம்ஸப்படி 05.04.2021 இரவு 11.37.26 மணி வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

வாக்கிய பஞ்சாங்கப்படி 15.11.2020 இரவு 09.48 மணிக்கு சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 6, 2021 வரை மகரத்தில் சஞ்சரிக்கிறார்.

திருக்கணிதப்பஞ்சாங்கப்படி 19.11.2020 இரவு 09.15 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார். 05.04.2021 காலை 09.11 வரை மகரத்தில் இருக்கிறார்.

அடியேன் ஜகந்நாத் ஹோரா லஹரி அயனாம்ஸத்தை பின்பற்றி பலனை சொல்லி இருக்கிறேன்.

குறிப்பு : ராசி பலன்களை படிப்பதற்கு முன் கீழ்வருவனவற்றை படித்து விட்டு தொடரவும்.

குரு பகவான் மகரத்தில் நாலரை மாதம் தான் சஞ்சரிக்கிறார் காரணம் முன்பே வக்ரகதியில் மகரத்தில் 4 மாதம் சஞ்சரித்துவிட்டார் பின் கும்பத்திலிருந்து மகரத்துக்கு வக்ர கதியாக செப்டம்பர் 13,2021 முதல், நவம்பர் 19, 2021 வரை சஞ்சரிக்கிறார்.

குரு பகவான் சஞ்சரிக்கும் நிலையும் வக்ர கதியும் அந்த சமயங்களில் மற்ற கிரஹ சஞ்சார நிலைகளும்.

குரு – 20.11.2020 முதல் 05.04.2021 வரையிலும் பின் 13.09.2021 – 19.11.2021 வரையிலும்.

சனி –  மகரத்தில்

ராகு – ரிஷபம் ,    கேது – விருச்சிகம்

மற்ற கிரஹங்கள் : கொடுத்த தேதிகள் ராசிக்குள் நுழையும் தேதி

கிரஹம் —–>சூரியன்செவ்வாய்பதன்சுக்ரன்
மேஷம் 24.12.2020  
ரிஷபம் 22.02.2021  
விருச்சிகம்  27.11.202011.12.2020
தனூர்16.12.2020 17.12.202004.01.2021
மகரம்14.01.2021 05.01.202128.01.2021
கும்பம்13.02.2021 26.01.202121.02.2021
மீனம்15.03.2021 01.04.202117.03.2021

பொது : ராசிநாதன் புதன் சுமார், குரு மேலோட்டமாக பார்த்தால் 8ல் மறைவு நல்லபலனை தராது. ஆனால் குரு பார்வையாலும், மற்றும் சூரியன், சந்திரன் செவ்வாய் நக்ஷத்திர கால்களில் பயணிப்பதால் லாபம், குடும்பம், தைரியம், போன்ற விஷயங்களையும், எதிரிகளை வீழ்த்தும் நிலையும் இருக்கும். மேலும் சூரியன் செவ்வாய், சுக்ரன், சனி இவர்களும் சாதகமாக இருப்பதாலும் புதன் புத்தாண்டு முதல் மகரத்தில் சஞ்சரிக்கும் போது அதிக நன்மைகளை செய்கிறது. மேலும் குருவின் 9ம் பார்வையும் செவ்வாயின் 7ம் பார்வையும் சிலருக்கு புதுவீடுவாங்கும் யோகத்தை தரும், இயல்பாக குரு களத்திரம் & ஜீவனத்துக்கு உடையவர் என்பதால் பொருளாதாரம் பாதிக்காது. வாழ்க்கை துணைவர் வழியிலும் வருமானம் அதிகரிக்கும். 12ல் ராகுவும், 6ல் கேதுவும் எதிர்பாரா இனங்கள் மூலம் வருவாயையும், நோய் நீங்குதலும் மகிழ்ச்சி அதிகரித்தலும் இருக்கும். பொதுவாக நன்மை தீமை கலந்து இருக்கும் கவனம் தேவை.

குடும்பம்: குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதாலும், கூடவே சனியின் பார்வை இருப்பதாலும் ஒருசமயம் மகிழ்ச்சியும் ஒருசமயம் துக்கமும் இருந்து கொண்டே இருக்கும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து அனுசரித்து போவது நலம். அதே நேரம் பிள்ளைகளால் பெருமையும், தாயால் நன்மையும், வாகன சுகம், வீட்டுத்தேவைகள் பூர்த்தியாதல், பொருளாதாரம் நன்றாக இருப்பதால் வீட்டுப்பணிகள் நன்றாக நடக்கும். கொஞ்சம் நிதானித்து வார்த்தைகளை விடுவதில் கவனம் கொண்டால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ஆரோக்கியம் : 6ல் சூரியன் கேது கொஞ்சம் உஷ்ணம், வயறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை தருவார், பின் வாழ்க்கைத்துணைவர் உடல் நலம் பாதிக்கபடும் மருத்துவ செலவுகள் ஒருபக்கம் குரு சஞ்சாரம் முடிய இருந்து கொண்டே இருக்கும். வைத்திய செலவுகள் பெரிய அளவில் இல்லை என்றாலும் மாதாமாதம் மருத்து செல்வுகள் இருக்கும். தக்க மருத்துவ ஆலோசனை பெற்று அதன் படி நடப்பது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.

உத்தியோகம் : பத்துக்குடையவருடன் குரு சேர்க்கை ஓரளவு பதவி சம்பள உயர்வு தந்தாலும், வேலை தேடுவோருக்கு வேலை கிடைத்தாலும், கேது பார்வையால் கடினமாக உழைக்க நேரிடும். அப்படி உழைத்தாலும் பெயர் இருக்காது. ஆனாலும் பெரிய கஷ்டம் வராது. முன்னேற்றம் மெதுவாக இருக்கும். இரண்டாம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் பொருளாதார நிலை பாதிக்காது. சிலருக்கு டிசம்பருக்கு பின் இட மாற்றம் நிச்சயம் இருக்கும். வேலை காரணமாக குடும்பத்தை பிரிய நேரிடும். பொதுவாக நிதானம் தேவை

சொந்த தொழில் / வியாபாரம் : ஓரளவு வருமானம் வந்து கொண்டிருக்கும். புதிய தொழில் தொடங்குதல் அல்லது தொழில் விஸ்தரிப்பு தடைகளுடன் உண்டாகும். கடும் முயற்சியால் வெற்றி கிடைக்கும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்வது வங்கி கடனுக்கான வட்டியை அசலை முறையாக செலுத்துதல், நம்பிக்கைக்குறியவர்களின் ஆலோசனையை கேட்டல், நேர்மை போன்றவை நல்ல நிலையை உண்டாக்கும்.

விவசாயி : மகசூல் அதிகரிக்கும், கால்நடைகள் மூலமும் வருமானம் பெருகும். இருந்தாலும் வழக்குகளில் மந்த நிலை அல்லது அக்கம்பக்கத்தாருடன் உண்டான மோதலால் புதிய வழக்குகளில் சிக்குதல் போன்றவை இருக்கும். பொறுமை நிதானம், பெரியோர்களிடம் ஆலோசனை பெறுதல் என்று இருந்தால் பொருளாதார நிலை சரியாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம், புதியவரவு, நிலம் வாங்குதல், சுப செலவுகள் என்று இருக்கும். சேமிப்பும் இருக்கும்.

அரசியல்வாதி : திடீர் புகழ், பதவி, ஆளும் கட்சியில் சேருதல், தொண்டர்களின் உற்சாகம், கட்சி மேலிட மதிப்பு, வருவாய் பெருகுதல், பணப்புழக்கம் தாராளம் என்று இருக்கும். அதேநேரம் வார்த்தைகளை கவனமாக விடுதல், எவரை நம்பியும் திட்டத்தை வெளியிடாதிருத்தல், பிள்ளை குடும்ப உறுப்பினர்களின் தலையீட்டை தவிர்த்தல் நன்மை தரும்.

மாணவர்கள் : படிப்பில் அதிக கவனம் தேவை 17.02.2021க்கு பின் தான் நல்ல நிலை, பெற்றோர் ஆசிரியர்கள் ஆலோசனைப்படி நடப்பது நலம் தரும். போட்டி பந்தயங்கள் கொஞ்சம் இழுபறியாக இருக்கும். நண்பர்கள் சேர்க்கையில் கவனம் தேவை வெளிநாட்டுக்கல்வி சிலருக்கு அமையும்.

திருமணம் : மேலோட்டமாக 7க்குடைய குரு 8ல் மறைந்தாலும் சுக்ரன் பலமாக இருப்பதாலும் மேலும் சுப கிரஹ பார்வை ராசிக்கும் 7க்கும் இருப்பதாலும் வரன் அமையும் திருமணம் தடையின்றி நடக்கும். திருமணம் பொருளாதார நிலையை மேம்படுத்துவதாக அமையும்.

குழந்தை : 5ம் இட சுக்ரன் பலமாக இருப்பதாலும் குரு சம்பந்தம் பெறுவதாலும் சிலருக்கு குழந்தை பாக்கியம் நன்றாக இருக்கும். ஜனன ஜாதகத்தில் சுக்ரன், குரு புதன் பலமாக கெடுதல் பார்வை இல்லாமல் இருந்தால் இந்த குருப்பெயர்ச்சியில் குழந்தை நிச்சயம் உண்டு.

பெண்கள் : வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலை நன்று ஆடை ஆபரண சேர்க்கை கேளிக்கை விருந்து, புதியவரவால் இல்லத்தில் மகிழ்ச்சி என்று இருக்கும். உத்தியோகஸ்தர்க்கு வேலை பளு அதிகரிக்கும். சிலருக்கு புதிய உத்தியோகம் கிடைக்கும். வேறிடம் செல்ல நேரும். சொந்த தொழில் செய்வோர் தொழிலாளிகளிடமும் அரசாங்கத்துடனும் அனுசரித்து போவது நல்லது. வருமானத்துக்கு குறைவு இருக்காது.

ப்ரார்த்தனைகளும் & நற்செயல்களும் : உங்கள் இஷ்ட தெய்வம் குல தெய்வம் வழிபாடு தெரிந்த ஸ்லோகங்களை மனனம் செய்தல், ஏழை எளியோருக்கு உதவுதல், அன்னதானம், வஸ்திரதானம், ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி போன்றவை நன்மை தரும் கெடுபலன்களை குறைக்கும்.

அன்பன்

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் (ரவி சாரங்கன்)

ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்

D1, Block1, Alsa Green Park Appartment

Hasthinapuram Main Road, Nehru Nagar, Near MIT Campus

Chrompet, Chennai – 600 044

Phone : 044-22230808 / 8056207965 (Whatsapp)

Email : mannargudirs1960@gmail.com

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.