சிம்ம ராசி

சிம்ம ராசி ( மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் முடிய) :

ராசிநாதன் 6ல் மறைகிறார் என்று கவலை வேண்டாம், 5ல் இருக்கும் குருவும், 7ல் இருக்கும் சுக்ரனும் மாதம் முழுவதும் பலனை தருகின்றனர். மேலும் 6க்கு போகும் சனிபகவான் மாத ஆரம்பத்திலேயே மறைமுக வருமானத்தை தருகிறார், சூரியனின் நக்ஷத்திரக்கால்களில் இருந்து கொண்டு எதிரிகளை அழித்து உங்கள் செயல்களை முழுமையடையச்செய்கிறார். மனதில் ஒரு தைரியம் வந்துவிடும். மேலும் செவ்வாய் மாத கடைசியில் 5ம் இடத்துக்கு பெயர்ந்து பூமி லாபத்தையும் பிள்ளைகளால் சந்தோஷத்தையும் கொடுப்பார், பிள்ளை/பெண் திருமண ஏற்பாடுகள் நடக்கும், மேலும் புதன் மாத கடைசியில் உத்தியோகம்/தொழிலில் ஒரு மேன்மையையும் பண வரவையும் கொடுப்பார். ருணரோகசத்ரு ஸ்தானத்தில் பகைவீட்டில் சூரியன் இருந்தாலும் எதிரிகளை அழித்து கடன் தொல்லைகளிலிருந்து விடுவித்து நோயற்ற நிலையை கொடுப்பதால் இதுவரை இருந்துவந்த வியாதிகள் குணமடையும் எதிரி, கடன் தொல்லைகள் விடுபடும், பொதுவாக இந்த மாதம் உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றியை அடையும், குடும்பத்தில் குதூகலம் இருக்கும், திருமணம் போன்ற சுப நிகழ்வுகளும் புதிய வீடு குடிபோகுதலும் சிலருக்கு அமையும். சனி பெயர்ச்சியும் சாதகமாய் இருப்பதால் நாள்பட்ட வியாதிகள் குணமடையும், எதிரி தொல்லை பண பிரச்சனை வழக்குகளின் பிரச்சனை இவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். சனிபகவான் 8ம் இடத்தை பார்ப்பதால் நாள்பட்ட வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். நல்ல மாதம் இது.

சந்திராஷ்டமம் : ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.