செப்டம்பர் 06 ஆவணி 21 ராசி பலன்

செப்டம்பர் 06 ஆவணி 21 ராசி பலன்

அமாவாசை தர்ப்பணம்

🕉️மேஷம்
செப்டம்பர் 06, 2021

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறையும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து புதிய வழிமுறைக்கு கொண்டு வருவீர்கள். மனதில் அஞ்ஞான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அஸ்வினி : வாக்குவாதங்கள் குறையும்.
பரணி : லாபம் உண்டாகும்.
கிருத்திகை : எண்ணங்களை அறிவீர்கள்.


🕉️ரிஷபம்
செப்டம்பர் 06, 2021

உத்தியோக பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் மற்றும் உத்தியோகம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனை சார்ந்த விஷயங்களில் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக முடிவெடுப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

கிருத்திகை : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
ரோகிணி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.

செப்டம்பர் 06 ஆவணி 21 ராசி பலன்

🕉️மிதுனம்
செப்டம்பர் 06, 2021

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலைகள் அமையும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் புதிய முயற்சிகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கடன் சார்ந்த நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மிருகசீரிஷம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
புனர்பூசம் : அனுபவம் மேம்படும்.


🕉️கடகம்
செப்டம்பர் 06, 2021

எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் ஆதாயமடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : தனவரவுகள் உண்டாகும்.
பூசம் : நெருக்கடிகள் குறையும்.
ஆயில்யம் : ஆதாயம் உண்டாகும்.


செப்டம்பர் 06 ஆவணி 21 ராசி பலன்

🕉️சிம்மம்
செப்டம்பர் 06, 2021

விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவுகளிடம் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்படவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எண்ணிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : மேன்மை ஏற்படும்.
பூரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும்.


🕉️கன்னி
செப்டம்பர் 06, 2021

வீட்டை விரிவுப்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். வியாபார பணிகளில் இழுபறிகள் குறைந்து லாபங்கள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவர்களின் சந்திப்புகள் மனதிற்கு ஒருவித மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : இழுபறிகள் குறையும்.
அஸ்தம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.
சித்திரை : மாற்றமான நாள்.


🕉️துலாம்
செப்டம்பர் 06, 2021

மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் நன்மைகள் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கலகலப்பான சூழ்நிலைகளின் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : ஈடுபாடு அதிகரிக்கும்.
சுவாதி : முயற்சிகள் ஈடேறும்.
விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


🕉️விருச்சிகம்
செப்டம்பர் 06, 2021

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அனுஷம் : மாற்றங்கள் ஏற்படும்.
கேட்டை : கருத்து வேறுபாடுகள் குறையும்.


🕉️தனுசு
செப்டம்பர் 06, 2021

பேச்சுவன்மையின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உறவினர்களுக்கிடையே செல்வாக்கு அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாக நிறைவுபெறும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வும், அதற்கான உதவிகளும் ஏற்படும். வியாபார பணிகளில் நிலுவையில் இருந்துவந்த பொருட்களின் மூலம் லாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

மூலம் : காரியசித்தி உண்டாகும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : லாபம் உண்டாகும்.


🕉️மகரம்
செப்டம்பர் 06, 2021

உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். உங்களை பற்றிய புதுவிதமான புரிதல் ஏற்படும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பொறுமையை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்

உத்திராடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
திருவோணம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அவிட்டம் : புரிதல் ஏற்படும்.


🕉️கும்பம்
செப்டம்பர் 06, 2021

வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். வாழ்க்கைத்துணையின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். காணாமல் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் சந்திப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : மகிழ்ச்சியான நாள்.
பூரட்டாதி : சந்திப்புகள் உண்டாகும்.


🕉️மீனம்
செப்டம்பர் 06, 2021

வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் உங்கள் முயற்சிக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்

ரேவதி : அங்கீகாரம் கிடைக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.