ஜனவரி 02 ராசி பலன்

🕉️மேஷம்
ஜனவரி 02, 2021
மார்கழி 18 – சனி

திட்டமிட்ட செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் அவ்வப்போது பதற்றம் ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : அலைச்சல்கள் ஏற்படும்.
பரணி : முயற்சிகள் ஈடேறும்.
கிருத்திகை : அனுபவம் உண்டாகும்.


🕉️ரிஷபம்
ஜனவரி 02, 2021
மார்கழி 18 – சனி

மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : சிந்தனைகள் தோன்றும்.
ரோகிணி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.


🕉️மிதுனம்
ஜனவரி 02, 2021
மார்கழி 18 – சனி

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். திரவம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விவசாயப் பொருட்களின் மூலம் தனவரவுகள் மேம்படும். கால்நடைகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
திருவாதிரை : மேன்மை உண்டாகும்.

புனர்பூசம் : தனவரவுகள் மேம்படும்.

🕉️கடகம்
ஜனவரி 02, 2021
மார்கழி 18 – சனி

முக்கியமான செயல்பாடுகளில் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த ஆதரவுகள் திருப்தியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : திருப்தியான நாள்.


🕉️சிம்மம்
ஜனவரி 02, 2021
மார்கழி 18 – சனி

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பயணங்களின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூரம் : இலாபகரமான நாள்.
உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


🕉️கன்னி
ஜனவரி 02, 2021
மார்கழி 18 – சனி

வெளிநாட்டு பயணங்களால் தனலாபம் உண்டாகும். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : தனலாபம் உண்டாகும்.
அஸ்தம் : அனுகூலமான நாள்.
சித்திரை : தெளிவு பிறக்கும்.


🕉️துலாம்
ஜனவரி 02, 2021
மார்கழி 18 – சனி

பொதுநலத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். ஆதரவாக இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். பயணங்கள் மற்றும் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

சித்திரை : புகழ் உண்டாகும்.
சுவாதி : மனம் மகிழ்வீர்கள்.
விசாகம் : சாதகமான நாள்.


🕉️விருச்சிகம்
ஜனவரி 02, 2021
மார்கழி 18 – சனி

கூட்டாளிகளின் உதவிகளால் நன்மைகள் ஏற்படும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பும், புரிதலும் அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விசாகம் : நன்மையான நாள்.
அனுஷம் : துணிச்சல் பிறக்கும்.
கேட்டை : புரிதல் அதிகரிக்கும்.


🕉️தனுசு
ஜனவரி 02, 2021
மார்கழி 18 – சனி

அறிமுகமில்லாத நபர்களிடம் பேசும்போது கவனத்துடன் பேசவும். வாழ்க்கைத்துணைவரிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எண்ணிய செயல்கள் நிறைவேற்றுவதில் பொறுமையுடன் செயல்படவும். அரசு தொடர்பான பணிகளில் நிதானம் வேண்டும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
பூராடம் : பொறுமை வேண்டும்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.


🕉️மகரம்
ஜனவரி 02, 2021
மார்கழி 18 – சனி

புதிய நபர்களின் வரவால் மகிழ்ச்சி ஏற்படும். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். அறச்செயல்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கல்வி சம்பந்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். எதிலும் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : கீர்த்தி உண்டாகும்.

அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

🕉️கும்பம்
ஜனவரி 02, 2021
மார்கழி 18 – சனி

வியாபாரம் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். ஆலய பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களில் சிறு மாற்றங்களை செய்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : மாற்றமான நாள்.
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.


🕉️மீனம்
ஜனவரி 02, 2021
மார்கழி 18 – சனி

பயணங்களால் இலாபம் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான செயல்திட்டம் அமைப்பீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

பூரட்டாதி : செயல்திட்டம் அமைப்பீர்கள்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : ஒற்றுமை மேலோங்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.