ஜனவரி 05 ராசி பலன்

🕉️மேஷம்
ஜனவரி 05, 2021
மார்கழி 21 – செவ்வாய்

உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்வாதங்களை தவிர்ப்பதால் நற்பெயர் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.
பரணி : வெற்றி பெறுவீர்கள்.
கிருத்திகை : சாதகமான நாள்.


🕉️ரிஷபம்
ஜனவரி 05, 2021
மார்கழி 21 – செவ்வாய்

வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வாரிசுகளின் எதிர்காலம் சார்ந்த சுபச்செய்திகள் கிடைக்கும். வித்தியாசமான செயல்முறைகளால் வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : நுணுக்கங்களை அறிவீர்கள்.
ரோகிணி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.


🕉️மிதுனம்
ஜனவரி 05, 2021
மார்கழி 21 – செவ்வாய்

உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகள் மற்றும் பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு மேம்படும்.
திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : இலாபம் கிடைக்கும்.


🕉️கடகம்
ஜனவரி 05, 2021
மார்கழி 21 – செவ்வாய்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பாராட்டுகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும். தொழில் வகை போட்டிகளை சமாளிப்பீர்கள். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். சுயதொழில் செய்வதற்கான திட்டங்களை வகுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : தனவரவுகள் உண்டாகும்.


🕉️சிம்மம்
ஜனவரி 05, 2021
மார்கழி 21 – செவ்வாய்

பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை களைவீர்கள். பொருள் சேர்ப்பதற்கான கலையறிவு அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எண்ணங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : தடைகளை களைவீர்கள்.
உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.


🕉️கன்னி
ஜனவரி 05, 2021
மார்கழி 21 – செவ்வாய்

ஞாபகமறதியால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்பட்டு விலகும். தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். வியாபாரம் தொடர்பான முதலீடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். முன்கோபத்தை விடுத்து பொறுமையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திரம் : விவாதங்கள் விலகும்.
அஸ்தம் : சிந்தனைகள் மேலோங்கும்.
சித்திரை : பொறுமையுடன் செயல்படவும்.


🕉️துலாம்
ஜனவரி 05, 2021
மார்கழி 21 – செவ்வாய்

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் அமைதியான சூழ்நிலைகள் நிலவும். அரசாங்கத்தின் மூலம் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : காரியசித்தி உண்டாகும்.
சுவாதி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

விசாகம் : ஆதாயம் உண்டாகும்.

🕉️விருச்சிகம்
ஜனவரி 05, 2021
மார்கழி 21 – செவ்வாய்
திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தொழிலில் மேன்மையான புதிய சூழல் மற்றும் வாய்ப்புகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
விசாகம் : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அனுஷம் : மேன்மையான நாள்.
கேட்டை : தெளிவு பிறக்கும்.


🕉️தனுசு
ஜனவரி 05, 2021
மார்கழி 21 – செவ்வாய்
தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் எண்ணிய அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் ஏற்படும். செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். வாக்குவன்மையால் தொழிலில் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மூலம் : முயற்சிகள் ஈடேறும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : இலாபம் உண்டாகும்.


🕉️மகரம்
ஜனவரி 05, 2021
மார்கழி 21 – செவ்வாய்

மனைவியின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். பங்குச்சந்தை துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். நண்பர்களினால் ஆதாயம் ஏற்படும். மற்றவர்களுக்கு செய்த உதவிகளால் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
திருவோணம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
அவிட்டம் : மேன்மை உண்டாகும்.


🕉️கும்பம்
ஜனவரி 05, 2021
மார்கழி 21 – செவ்வாய்

விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். குடும்பத்தில் கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அவிட்டம் : காலதாமதம் உண்டாகும்.
சதயம் : சிந்தித்து செயல்படவும்.
பூரட்டாதி : சேமிப்புகள் குறையும்.


🕉️மீனம்
ஜனவரி 05, 2021
மார்கழி 21 – செவ்வாய்

புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் தொழில் வகை வாய்ப்புகள் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். புதுவிதமான உணர்வுகளுடன் கூடிய எண்ணங்கள் தோன்றும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திரட்டாதி : நட்பு கிடைக்கும்.
ரேவதி : ஆதரவான நாள்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.