ஜனவரி 06 ராசி பலன்

*🕉️மேஷம்* ஜனவரி 06, 2021 மார்கழி 22 – புதன்

உறவினர்களின் வழியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அஸ்வினி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பரணி : உபாதைகள் மறையும். கிருத்திகை : விட்டுக்கொடுத்து செல்லவும்.
————————————–
*🕉️ரிஷபம்* ஜனவரி 06, 2021 மார்கழி 22 – புதன்

வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த எண்ணங்கள் ஈடேறும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். பெரியவர்களிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு மறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும். ரோகிணி : கருத்து வேறுபாடுகள் குறையும். மிருகசீரிஷம் : வாக்குவாதங்கள் மறையும்.
————————————— *🕉️மிதுனம்* ஜனவரி 06, 2021 மார்கழி 22 – புதன்

வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பார்த்த தனவரவுகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வாகனம் மற்றும் வீடுகளின் மூலம் இலாபம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
திருவாதிரை : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். —————————————
*🕉️கடகம்* ஜனவரி 06, 2021 மார்கழி 22 – புதன்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ற உயர்வு உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த காரியங்கள் சாதகமாக செய்து முடிப்பீர்கள்
.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : உயர்வு உண்டாகும். பூசம் : மாற்றமான நாள். ஆயில்யம் : நெருக்கம் அதிகரிக்கும். —————————————
*🕉️சிம்மம்* ஜனவரி 06, 2021 மார்கழி 22 – புதன்

வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழ்நிலைகள் அமையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும். வெளி மாநில நபர்களின் மூலம் தனவரவுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : முன்னேற்றம் ஏற்படும். பூரம் : கலகலப்பான நாள். உத்திரம் : தனவரவுகள் மேம்படும். —————————————

*🕉️கன்னி* ஜனவரி 06, 2021 மார்கழி 22 – புதன்

உடல் ஆரோக்கியம் மேம்படும். பணி தொடர்பான வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேற அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்

உத்திரம் : ஆரோக்கியம் மேம்படும். அஸ்தம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள். சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும். —————————————
*🕉️துலாம்* ஜனவரி 06, 2021 மார்கழி 22 – புதன்

உறவினர்களின் வழியில் சாதகமற்ற சூழ்நிலைகள் உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற பேச்சுக்களை குறைப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத சுபச்செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : சாதகமற்ற நாள். சுவாதி : உதவிகள் கிடைக்கும். விசாகம் : ஈடுபாடு அதிகரிக்கும். —————————————
*🕉️விருச்சிகம்* ஜனவரி 06, 2021 மார்கழி 22 – புதன்

சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வெளிநாடு தொடர்பான வர்த்தக முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான சிறு சிறு மாற்றங்களின் மூலம் நல்ல இலாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : எண்ணங்கள் ஈடேறும். அனுஷம் : அனுகூலமான நாள். கேட்டை : இலாபம் அதிகரிக்கும் —————————————

*🕉️தனுசு* ஜனவரி 06, 2021 மார்கழி 22 – புதன்

வியாபாரம் தொடர்பான புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் மூலம் தனவரவுகளும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் சிறு மாற்றங்கள் ஏற்படும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும். பூராடம் : காரியசித்தி உண்டாகும். உத்திராடம் : மாற்றமான நாள். —————————————

*🕉️மகரம்* ஜனவரி 06, 2021 மார்கழி 22 – புதன்

உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சக ஊழியர்களின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களின் மூலம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். புதிய பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

திருவோணம் : முன்னேற்றமான நாள்.

அவிட்டம் : உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். —————————————

*🕉️கும்பம்* ஜனவரி 06, 2021 மார்கழி 22 – புதன்

தாய்மாமன் வழியில் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டு மறையும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகம் தொடர்பான பணிகளை செய்யும்போது கோப்புகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாலின மக்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : பதற்றமான நாள். சதயம் : கவனம் தேவை.

பூரட்டாதி : நிதானம் வேண்டும் —————————————

*🕉️மீனம்* ஜனவரி 06, 2021 மார்கழி 22 – புதன்

மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபாரத்தில் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்புகள் கிடைக்கும். முக்கிய பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : ஆசைகள் நிறைவேறும். உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரேவதி : அறிமுகம் உண்டாகும்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.