ஜனவரி 07 ராசி பலன்

🕉️மேஷம்
ஜனவரி 07, 2021
மார்கழி 23 – வியாழன்

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை மேம்படும். மனதில் நினைத்த எண்ணங்களை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்பதன் மூலம் குழப்பங்களை தவிர்க்கலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அஸ்வினி : தனவரவுகள் கிடைக்கும்.
பரணி : ஒற்றுமை மேம்படும்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️ரிஷபம்
ஜனவரி 07, 2021
மார்கழி 23 – வியாழன்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகள் ஈடேறும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் இருந்தாலும் இலாபம் மேம்படும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.
ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.


🕉️மிதுனம்
ஜனவரி 07, 2021
மார்கழி 23 – வியாழன்

பூர்வீக சொத்துக்களின் மூலம் இலாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். வாகனப் பயணங்களின்போது உரிய ஆவணங்களை எடுத்து செல்வது நல்லது. வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். நெருக்கமானவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் முதலீடுகளும், கூட்டாளிகளின் ஆலோசனைகளும் புதிய தெளிவினை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : இலாபகரமான நாள்.
திருவாதிரை : வாய்ப்புகள் சாதகமாகும்.
புனர்பூசம் : தெளிவு ஏற்படும்.


🕉️கடகம்
ஜனவரி 07, 2021
மார்கழி 23 – வியாழன்

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கால்நடைகள் தொடர்பான வணிகத்தில் இலாபம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : அனுகூலமான நாள்.
ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.


🕉️சிம்மம்
ஜனவரி 07, 2021
மார்கழி 23 – வியாழன்

உறவினர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழிலில் உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய வாகனம் மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான மதிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


🕉️கன்னி
ஜனவரி 07, 2021
மார்கழி 23 – வியாழன்
திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் எதிர்பார்த்த விதத்தில் நிறைவேறும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அஸ்தம் : தனவரவுகள் உண்டாகும்.

சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

🕉️துலாம்
ஜனவரி 07, 2021
மார்கழி 23 – வியாழன்

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். முக்கியமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வரவுக்கு மீறிய செலவுகளால் அவ்வப்போது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சித்திரை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
சுவாதி : முன்னேற்றம் ஏற்படும்.
விசாகம் : மாற்றமான நாள்.


🕉️விருச்சகம்
ஜனவரி 07, 2021
மார்கழி 23 – வியாழன்

புதிய செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான உதவிகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
அனுஷம் : அபிவிருத்தியான நாள்.
கேட்டை : புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.


🕉️தனுசு
ஜனவரி 07, 2021
மார்கழி 23 – வியாழன்

குடும்பத்தில் பெரியோர்களின் ஆலோசனைகள் மன மாற்றத்தை ஏற்படுத்தும். நுட்பமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : மாற்றமான நாள்.
பூராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
உத்திராடம் : பயணங்கள் சாதகமாகும்.


🕉️மகரம்
ஜனவரி 07, 2021
மார்கழி 23 – வியாழன்

மனதை உறுத்திக் கொண்டு இருந்த சில பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். தொழில் தொடர்பாக இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் படிப்படியாக குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளில் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மனை தொடர்பான பணிகளில் இலாபம் மேம்படும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : தீர்வுகள் கிடைக்கும்.
திருவோணம் : நெருக்கடிகள் குறையும்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.


🕉️கும்பம்
ஜனவரி 07, 2021
மார்கழி 23 – வியாழன்

உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். அரசு தொடர்பான பணிகளில் காலதாமதம் உண்டாகும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளை பயன்படுத்தும்போது கவனம் வேண்டும். மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலையை அறிந்து கருத்துக்களை பகிர்வது நன்மையளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
சதயம் : காலதாமதம் உண்டாகும்.
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.


🕉️மீனம்
ஜனவரி 07, 2021
மார்கழி 23 – வியாழன்

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். தனவரவுகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

பூரட்டாதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : போட்டிகள் குறையும்.
ரேவதி : பாராட்டுகள் கிடைக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.