ஜனவரி 20 ராசி பலன்

🕉️மேஷம்
ஜனவரி 20, 2021
தை 07 – புதன்

தொழிலில் எதிர்பார்த்த வியாபாரம் நடைபெறும். போட்டிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இழுபறியான சூழல் காணப்படும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பதன் மூலம் குழப்பங்கள் அகலும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : வெற்றி கிடைக்கும்.
பரணி : பொறுமை வேண்டும்.
கிருத்திகை : குழப்பங்கள் அகலும்.


🕉️ரிஷபம்
ஜனவரி 20, 2021
தை 07 – புதன்

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர்கல்வி சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வர்த்தகத்தில் எதிர்பார்த்த இலாபம் அதிகரிக்கும். விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.
ரோகிணி : இலாபம் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.


🕉️மிதுனம்
ஜனவரி 20, 2021
தை 07 – புதன்

பொதுக்கூட்ட பேச்சுக்களில் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். மனதில் ஒருவிதமான தடுமாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டாம். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.
திருவாதிரை : தனவரவுகள் கிடைக்கும்.
புனர்பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.


🕉️கடகம்
ஜனவரி 20, 2021
தை 07 – புதன்

நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். பொதுநலப் பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். வேளாண்மை சம்பந்தமான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூசம் : மேன்மையான நாள்.
ஆயில்யம் : பாராட்டப்படுவீர்கள்.


🕉️சிம்மம்
ஜனவரி 20, 2021
தை 07 – புதன்

பணி தொடர்பான செயல்பாடுகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வாகன மாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உறவுகளிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.


🕉️கன்னி
ஜனவரி 20, 2021
தை 07 – புதன்

நண்பர்களிடம் கருத்துக்களை பரிமாறும்போது கவனம் வேண்டும். உறவுகளிடம் நிதானப்போக்கை கையாளவும். முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பமான சூழல் ஏற்படும். பயணங்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : காலதாமதம் ஏற்படும்.
சித்திரை : நிதானம் வேண்டும்.


🕉️துலாம்
ஜனவரி 20, 2021
தை 07 – புதன்

குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் ஏற்படும். வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழல் அமையும். போட்டிகளில் பங்கு பெற்று பரிசும், பாராட்டும் பெறுவீர்கள். உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : கலகலப்பான நாள்.
சுவாதி : பாராட்டுகள் கிடைக்கும்.

விசாகம் : உடல் சோர்வு குறையும்.

🕉️விருச்சிகம்
ஜனவரி 20, 2021
தை 07 – புதன்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் அலைச்சல்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய நுட்பமான செயல்பாடுகளின் மீது ஆர்வம் உண்டாகும். ஒருவிதமான பதற்றமான சூழல் ஏற்படும். நிதானத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : தீர்வு கிடைக்கும்.
அனுஷம் : ஆர்வம் உண்டாகும்.
கேட்டை : அனுசரித்து செல்லவும்.


🕉️தனுசு
ஜனவரி 20, 2021
தை 07 – புதன்

வீட்டில் சுபச்செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். திட்டமிட்டு பணிகளை செய்து முடிப்பீர்கள். கால்நடைகள் வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பணிகளில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சக ஊழியர்களிடம் மதிப்புகள் உயரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : தனவரவுகள் கிடைக்கும்.
உத்திராடம் : மதிப்புகள் உயரும்.


🕉️மகரம்
ஜனவரி 20, 2021
தை 07 – புதன்

சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். அரசு சம்பந்தமான பணிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பதவி மாற்றம் மற்றும் வருமான உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : கவலைகள் நீங்கும்.
திருவோணம் : அனுகூலமான நாள்.
அவிட்டம் : உயர்வு உண்டாகும்.


🕉️கும்பம்
ஜனவரி 20, 2021
தை 07 – புதன்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அவிட்டம் : காரியசித்தி உண்டாகும்.
சதயம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.


🕉️மீனம்
ஜனவரி 20, 2021
தை 07 – புதன்

உடலில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மனதில் தெளிவான சிந்தனைகள் உண்டாகும். அறிவுத்திறன் மேம்படும். தம்பதிகளுக்கிடையே அன்பும், புரிதலும் மேம்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். செய்யும் செயலில் திருப்தியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.
உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும்.
ரேவதி : திருப்தியான நாள்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.