ஜனவரி 29 ராசி பலன்

🕉️மேஷம்
ஜனவரி 29, 2021
தை 16 – வெள்ளி

போட்டி தேர்வுகளில் சாதகமான சூழல் உண்டாகும். உயர்கல்வி பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். கருத்துக்களை பகிரும்போது நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அஸ்வினி : சிந்தனைகள் மேலோங்கும்.
பரணி : தடைகள் அகலும்.
கிருத்திகை : நிதானம் வேண்டும்.


🕉️ரிஷபம்
ஜனவரி 29, 2021
தை 16 – வெள்ளி

புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். எடுத்த செயலை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். இளைய சகோதரர்களால் சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : சுபச்செய்திகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.


🕉️மிதுனம்

ஜனவரி 29, 2021
தை 16 – வெள்ளி

பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பணியில் புதிய பொறுப்புகளால் மதிப்புகள் உயரும். கலைத்துறையினர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வாகனங்கள் வாங்குவதில் இருந்துவந்த தடைகள் நீங்கும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : ஆசிகள் கிடைக்கும்.
திருவாதிரை : வாய்ப்புகள் உண்டாகும்.
புனர்பூசம் : தடைகள் நீங்கும்.


🕉️கடகம்
ஜனவரி 29, 2021
தை 16 – வெள்ளி

எதிர்காலம் சம்பந்தமான பணிகளை மேற்கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சிறு வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். முக்கிய முடிவுகளை பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து எடுக்கவும். கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
ஆயில்யம் : புரிதல் உண்டாகும்.


🕉️சிம்மம்
ஜனவரி 29, 2021
தை 16 – வெள்ளி

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். இணையதள பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்கள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : ஒற்றுமை ஏற்படும்.
பூரம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
உத்திரம் : பயணங்கள் சாதகமாகும்.


🕉️கன்னி
ஜனவரி 29, 2021
தை 16 – வெள்ளி

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்துவந்த தடைகள் நீங்கும். மாணவர்களுக்கு உடைமைகளில் கவனம் வேண்டும். நிதானமான செயல்பாடுகளால் நன்மை ஏற்படும். தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். உயர்கல்வி சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

உத்திரம் : தடைகள் நீங்கும்.
அஸ்தம் : நன்மை ஏற்படும்.
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.


🕉️துலாம்
ஜனவரி 29, 2021
தை 16 – வெள்ளி

தொழில் சம்பந்தமான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உணர்வு மேம்படும். விவாதங்களால் இலாபம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மற்றவர்களுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : புரிதல் உண்டாகும்.
விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.


🕉️விருச்சிகம்
ஜனவரி 29, 2021
தை 16 – வெள்ளி

பணவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். சேமிப்புகள் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். தந்தை பற்றிய கவலைகள் நீங்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வழக்கு விவகாரங்களில் சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அனுஷம் : எண்ணங்கள் மேலோங்கும்.
கேட்டை : பிரச்சனைகள் குறையும்.


🕉️தனுசு
ஜனவரி 29, 2021
தை 16 – வெள்ளி

சம வயதினரிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களின்போது தேவையான ஆவணங்களை எடுத்து செல்லவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதம் ஏற்படும். ஞாபகமறதியால் சில அவச்சொற்கள் உண்டாகும். வேலையாட்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பகைமை குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மூலம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
பூராடம் : காலதாமதம் ஏற்படும்.
உத்திராடம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


🕉️மகரம்
ஜனவரி 29, 2021
தை 16 – வெள்ளி

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் அதிகாரிகளிடம் மதிப்புகள் உயரும். எதிர்பாராத பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ஆராய்ச்சி சம்பந்தமான படிப்புகளில் ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் சார்ந்த இன்னல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : இன்னல்கள் குறையும்.


🕉️கும்பம்
ஜனவரி 29, 2021
தை 16 – வெள்ளி

பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சி பிறக்கும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாரிசுகளிடம் அனுசரித்து செல்லவும். புதிய யுக்திகளை கையாளுவதன் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

அவிட்டம் : விரயங்கள் உண்டாகும்.
சதயம் : தனவரவுகள் கிடைக்கும்.
பூரட்டாதி : இழுபறிகள் நீங்கும்.


🕉️மீனம்
ஜனவரி 29, 2021
தை 16 – வெள்ளி

உறவினர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வசதி வாய்ப்புகள் மேம்படும். புதிய ஆடைகளை வாங்கி மனம் மகிழ்வீர்கள். கால்நடைகளின் மூலம் இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : சுபிட்சம் உண்டாகும்.
ரேவதி : இலாபம் கிடைக்கும்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.