ஜாதக பொருத்தம்

ஜாதக பொருத்தம் பார்ப்பது எப்படி? – 1

ஜாதக பொருத்தம் பார்ப்பது எப்படி?

பொதுவா பொருத்தங்கள் பார்ப்பது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த 10 வித பொருத்தங்கள் மட்டுமே என பலர் நினைக்கின்றனர்.

இந்த பத்து பொருத்தங்களை மட்டும் கொண்டு முடிவு செய்ய கூடாது என்பது அடியேன் அபிப்ராயம். இன்றைய காலகட்டத்துக்கு இது சரியாக வருவதில்லை என்பது அடியேன் அபிப்ராயம்

மேலும் வெறும் நக்ஷத்திரம் ராசி கட்டம் இவற்றை கொண்டு சொல்லும் போது தவறாக போய்விட வாய்ப்பு அதிகம்.

பெண் நக்ஷத்திரத்துக்கு 2,4,6,8,9வதாக பிள்ளை நக்ஷத்திரம் இருந்தால் பொருத்தம் உண்டு அதை கொண்டு மற்ற பொருத்தங்கள் சொல்லும் போது 10க்கு 7/8 பொருத்தங்கள் இருக்கு பண்ணலாம் என்பது சிலர் சொல்வது. மேலும் இவர்களுக்கு 5 பொருத்தம் போதும் இவர்களுக்கு 7 பொருத்தம் போதும் என்று சிலர் சொல்லுகின்றனர்.

உதாரணமாக பெண் ரோஹிணி, பிள்ளை மிருகசீரிடம் (ரிஷபம்) இவர்களுக்கு மகேந்திரம், ஸ்த்ரீ தீர்க்கம் (மிதுனமாக இருந்தால் ராசி பொருத்தம்), விருட்ச்ச பொருத்தம் இவை இருக்காது பாக்கி மிக நன்றாக இருக்கும். பண்ணலாம் என ஜோதிடர் சொல்லி பண்ணிய பிறகு பிரிவு அல்லது வேறு குறைகள் மண வாழ்க்கை சுமார் அல்லது குழந்தை பாக்கியத்தில் குறை என வரும்  பத்து பொருத்தமும் பார்த்து தானே பண்ணோம் பிறகு ஏன்?

ராசி கட்டத்தை பிரித்து பார்த்து, கிரஹ பலம், ஷட்பலம், நவாம்ஸம் வர்க்கம் என அலசி முடிவுக்கு வரவேண்டும்.

இருவருக்கும் லக்னம் வலுவாகவும் நட்பாகவும் இருக்க வேண்டும். லக்னாதிபதி மற்றும் ஆயுள் விருத்தி செய்யும் கிரஹம் (பொதுவாக சனி ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒருகிரகம் மாரகத்தை தடுக்கும்) வலுவாக இருக்க வேண்டும். 2ம் இடம் 7ம் இடம் மாரகஸ்தானம் ஆகும். இது நவாம்ஸத்திலும் வலுவற்று இருக்க வேண்டும். இப்படி முதலில் இருவருடைய ஆயுளை கணித்து கொண்டு தொடரவேண்டும். அடுத்து ஆரோக்கியம். ரோகத்தை செய்யும் கிரஹங்கள் வலிமையை கொண்டு (நாடி பொருத்தம்) திருமணத்துக்கு பின் ஆரோக்கியம் நன்றாக இருக்குமா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டும்.

 மேலும் இந்த காலத்துக்கு 12ம் இடம் மிக முக்கியம், பொதுவாக விரயம் என சொல்லப்பட்டாலும் அது சயன ஸ்தானம் கணவன் மனைவி சேர்க்கை இவற்றை குறிப்பது தாம்பத்யம் அந்யோந்யம் என்று. இந்த 12ம் இடமும் அதற்குறிய அதிபதியும் இருவருக்கும் நட்பாகவும் விரோதம் இல்லாமலும் இருக்க வேண்டும். மேலும் இருவரது லக்னத்துக்கு 12ம் இடம் அல்லது அதற்கு உடைய கிரஹத்துக்கு குரு போன்ற சுப கிரஹங்கள் பார்வை சேர்க்கை இருக்க வேண்டும்

மேற்சொன்ன 12ம் இடம் முக்கியம் அடுத்தது 5,9 இடங்கள் புத்திரம், கல்வி, அந்தஸ்து, இவற்றை கொண்டு முடிவு செய்யவேண்டும். 4, செவ்வாய், கேது இவர்களால் வீடு வாகன யோகங்கள் தாயார் நிலை இவற்றை ஆராய வேண்டும்.

பெண்ணுக்கு 10ம் இடம் மாமியார், பிள்ளைக்கு 4ம் இடம் தாயார்  இந்த இரண்டு கிரஹங்கள் வீடுகள் நட்பாக பாப கிரஹ சேர்க்கை இல்லாமல் இருந்தால் மாமியார் மருமகள் ஒற்றுமை நன்றாக இருக்கும். இதே போல் மற்ற உறவுகளையும் கணக்கிட வேண்டும்.

இதெல்லாம் முடிக்கும் போது பலருடைய சிந்தனை தோஷங்கள் பற்றி இருக்கும். செவ்வாய் தோஷம், பித்ரு தோஷம், களத்திர தோஷம் காலசர்ப தோஷம் இவையெல்லாம் இருக்கா இல்லையா என பார்ப்பது.

அடுத்த பகுதியில் அது பற்றி

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி

ஜோதிடர்

D1-304, D1 Block, Siddharth Foundation

Ayyancherri Main Road

Urappakkam – 603210

Phone : 044-35584922 / 8056207965(W)

Email: mannargudirs1960@hotmail.com

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.