ஜாதக பொருத்தம்

ஜாதக பொருத்தம் பார்ப்பது எப்படி? – 3

ஜாதக பொருத்தம் பார்ப்பது எப்படி – முதல் இரு பகுதிகள்

தசா சந்தி :

ஆண் பெண் ஜாதங்களில் தசைகள் புத்திகளை கணக்கிட வேண்டும். ஒருவருடைய தசை முடிந்து அதற்கு 11மாதங்களுக்குள் இன்னொருவர் தசை ஆரம்பித்தால் அது தசா சந்தி இது பிரிவை தரும் என ஒரு பாடம் உண்டு. இதுவும் கூட சரியாக இருப்பதில்லை. காரணம் இருவரது தசைகளும் + புத்திகளும் நட்பாக இருந்தால் இந்த சந்திகள் கெடுதலை செய்யாது என்பது அடியேன் அனுபவம். புத்திகளையும் கணக்கில் கொள்ளவேண்டும்.

உதாரணமாக ஒருவருக்கு குரு தசை 17.02.2019 முடிந்து சனி தசை ஆரம்பம், இன்னொருவருக்கு கேது தசை 03.04.2019ல் ஆரம்பம் இது தசா சந்தி. இந்த கிரஹங்கள் நன்மை செய்வதாய் கூட அமையும். கிரஹத்தின் தசை அந்த கிரஹத்தின் வலிமையை பொறுத்து நன்மை தீமை அமையும் மேலும் அந்த கிரஹ தசையில் வரும் மற்ற கிரஹங்களின் புக்திகள் தசா நாதனுக்கு புத்தி நாதன் நட்பு, சமம் என்ற நிலையில் இருந்தாலும் கோச்சாரத்தில் தத்காலிக நட்பாக இருந்தாலும் நன்மைதான் செய்யும். ஆண் பெண் இருவரது தசா நாதன் புத்தி நாதன் ஒருவருக்கொருவர் நட்பு நிலையில் இருந்து அந்த நாதர்கள் ஜாதகரின் ராசியில் ஆட்சி நட்பு,மூல திரிகோணம் உச்சம் போன்ற இடங்களில் இருந்து வலுவாகவும் இருந்தால் இருவருக்கும் இப்படி இருந்தால் தசா சந்தி பற்றிய பயம் வேண்டாம்.

பொதுவாக மேலே சொன்ன தசவித பொருத்தம், தோஷம், தசா சந்திகள் தனிப்பட்ட ஜாதகங்களில் ஒற்றுமை இவை பார்த்து கடைசியாக முடிவு செய்ய வேண்டும் பொருத்தம் இருக்கா இல்லையா என.

சரி திருமண பொருத்தம் இப்படி பார்த்து முடிவு செய்தாகிவிட்டது தொடரலாம் என்பது இரண்டு ஜாதகங்களும் வாக்கியமோ அல்லது இரண்டும் திருகணிதம் என்பதாக கொண்டு முடிவு செய்வது.

https://paytm.business/link/49115/LL_423965736
Click here to donate for server to keep the site going

நம் நாட்டில் மொத்தம் 8 பஞ்சாங்கங்கள் (அவற்றுள்ளும் பல பிரிவுகள்) இருக்கின்றன. தமிழகத்தில் முக்கியமாக வாக்கியம் மற்றும் திருக்கணிதம் என்ற இரண்டு பஞ்சாங்கங்கள்.

வாக்கியத்தில் பலவகை, திருக்கணிதத்தில் பலவகை என்றும் இருக்கு அவரவர் எடுத்துக்கொள்ளும் அயனாம்ஸத்தை ஒட்டி இது வரும்.

பொருத்தம் பார்க்கும் போது ஜாதகர் திருக்கணிதத்தில், வரன் ஜாதகம் வாக்கியத்தில் இருக்கும். இங்கு குழப்பம் வரும். வரன் அஸ்வினி 4ம் பாதம் வாக்கியப்படி என கொடுத்து இருப்பார் ஆனால் திருக்கணிதத்தில் போட்டால் பரணி 1ம் பாதம் வரும்.

இங்கு அஸ்வினி என வரும்போது பொருத்தம் இருக்கும் பரணி என்றால் இல்லை (இந்த தசவித பொருத்தங்களில்) எதை வைத்து முடிவு செய்வது. வாக்கிய பஞ்சாங்கத்தினர் தங்களது தான் சரி என்பர், திருக்கணிதம் அவர்கள் தான் சரி என்பர். ஸ்ரீமஹா பெரியவா திருக்கணிதம் சிறந்த ஒன்று கிரஹ நிலைகளை திருத்தி கொண்டே வருகிறது என்று பரிந்துரைக்கிறார்.

பொதுவில் ராமன் அயனாம்ஸம் வாக்கிய பஞ்சாங்கத்தை ஒட்டியும் புஷ்யபக்ஷ அயனாம்ஸம் திருக்கணிதம் ஒட்டியும் வருகிறது திருக்கணிதம் லஹரி, சுத்த சித்ரபக்ஷ அயனாம்ஸம்படி பெரும்பாலும் வருகிறது

இவை 2 முதல் 8 டிகிரிவரையிலான வித்யாசங்களே. புஷ்ய பக்ஷ அயனாம்ஸம் அடியேன் அனுபவத்தில் மிக ஒத்து வருகிறது. அதனால் அடியேன் தனிப்பட்ட ஜாதகங்களை புஷ்யபக்ஷ அயனாம்ஸத்தில் மாற்றி கொண்டு பலன் சொல்கிறேன்.

இப்படி பொருத்தங்களை பார்த்து முடிவு செய்து மேற்கொண்டு தொடரனும். இந்த பொருத்தங்கள் ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் போல் தான் இதையே முடிவாக கொள்ளக்கூடாது. பொருதம் இருந்துவிட்ட பிறகு வரனின் தன்மை குடும்ப நிலை பூர்வீகம் மனிதர்களின் குணாதிசயங்கள் என்று பலவற்றை முடிவு செய்த பிறகே திருமணம் செய்யவேண்டும்.

!!சுபம்!!

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.