ஜூன் 17 ஆனி 3 ராசி பலன்

ஜூன் 17 ஆனி 3 ராசி பலன்

ஜூன் 17 ஆனி 3 பஞ்சாங்கம்

வாட்ஸ் அப் குழுவில் இணைய

🕉️மேஷம்
ஜூன் 17, 2021

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதிய முயற்சிகள் தொடர்பான உதவிகள் சாதகமாக அமையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடித்து மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : நெருக்கடிகள் குறையும்.
பரணி : உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை : ஆதரவான நாள்.


🕉️ரிஷபம்
ஜூன் 17, 2021

குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான யுக்திகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.


🕉️மிதுனம்
ஜூன் 17, 2021

உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நினைத்த காரியங்களை திட்டமிட்டு செயல்படுத்தி எண்ணிய வெற்றியை அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : விருப்பங்கள் நிறைவேறும்.
திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
புனர்பூசம் : வெற்றிகரமான நாள்.


🕉️கடகம்
ஜூன் 17, 2021

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.
பூசம் : நெருக்கடிகள் குறையும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️சிம்மம்
ஜூன் 17, 2021

எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்களும், பதற்றங்களும் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமற்ற சூழ்நிலைகள் ஏற்படும். ஆகவே சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த சில இடமாற்றங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து செல்வதன் மூலம் ஒத்துழைப்பு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூரம் : அனுசரித்து செல்லவும்.
உத்திரம் : இடமாற்றங்கள் சாதகமாகும்.


🕉️கன்னி
ஜூன் 17, 2021

அரசு தொடர்பான பணிகளில் சக ஊழியர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். நண்பர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் தொடர்பான போட்டிகளை சமாளிப்பீர்கள். தொழில் தொடர்பான புதிய முதலீடுகள் சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்

உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.
அஸ்தம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
சித்திரை : அதிர்ஷ்டகரமான நாள்.


🕉️துலாம்
ஜூன் 17, 2021

சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எதிர்கால இலக்கை நோக்கி உங்களது எண்ணங்கள் மேம்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் புதுவிதமான நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். கூட்டாளிகளின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

சித்திரை : மதிப்புகள் அதிகரிக்கும்.
சுவாதி : மகிழ்ச்சிகரமான நாள்.
விசாகம் : அனுகூலம் உண்டாகும்.


🕉️விருச்சிகம்
ஜூன் 17, 2021

வியாபாரம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சாதகமாக முடியும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்புகளை அதிகரிப்பது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

விசாகம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
அனுஷம் : சிந்தனைகள் மேம்படும்.
கேட்டை : ஆதரவு கிடைக்கும்.


🕉️தனுசு
ஜூன் 17, 2021

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தனவரவுகள் திருப்தியை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

மூலம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூராடம் : லாபம் மேம்படும்.
உத்திராடம் : மேன்மையான நாள்.


🕉️மகரம்
ஜூன் 17, 2021

எந்தவொரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சக ஊழியர்களிடம் மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் வழியில் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில காரியங்களில் மறைமுக எதிர்ப்புகளின் மூலம் காலதாமதங்கள் நேரிடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : பொறுமை வேண்டும்.
திருவோணம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அவிட்டம் : காலதாமதங்கள் நேரிடும்.


🕉️கும்பம்
ஜூன் 17, 2021

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவேறும். பெற்றோர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : காரியசித்தி உண்டாகும்.
சதயம் : திருப்தியான நாள்.
பூரட்டாதி : ஆசைகள் உண்டாகும்.


🕉️மீனம்
ஜூன் 17, 2021

கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அனுபவமிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் மனதில் தெளிவை ஏற்படுத்தும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
ரேவதி : தெளிவு பிறக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.