ஜூன் 19 ஆனி 05 ராசி பலன்

ஜூன் 19 ஆனி 05 ராசி பலன்

இன்றைய பஞ்சாங்கம்

🗓️19-06-2021⏳
🔵சனிக்கிழமை❄️

🕉️மேஷம்
ஜூன் 19, 2021

குடும்ப உறுப்பினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அஸ்வினி : சாதகமான நாள்.
பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கிருத்திகை : நிதானம் வேண்டும்.


🕉️ரிஷபம்
ஜூன் 19, 2021

செய்கின்ற முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.


🕉️மிதுனம்
ஜூன் 19, 2021

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் உள்ள நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : எதிர்ப்புகள் குறையும்.
புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.


🕉️கடகம்
ஜூன் 19, 2021

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களுடன் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

புனர்பூசம் : தேவைகள் நிறைவேற்றுவீர்கள்.
பூசம் : போட்டிகள் குறையும்.
ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.


🕉️சிம்மம்
ஜூன் 19, 2021

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உயர்வுக்கான சூழ்நிலைகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : அனுகூலம் உண்டாகும்.
உத்திரம் : உயர்வான நாள்.


🕉️கன்னி
ஜூன் 19, 2021

வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். எண்ணிய காரியங்களை செய்து முடிப்பதில் சிறிது காலதாமதம் உண்டாகும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : தீர்வு கிடைக்கும்.
அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும்.
சித்திரை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


🕉️துலாம்
ஜூன் 19, 2021

பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது தொடர்பான ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்

சித்திரை : புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
சுவாதி : இழுபறிகள் குறையும்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

ஜாதகம் பார்க்க :9842177500

🕉️விருச்சிகம்
ஜூன் 19, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் நிலையில் சோர்வும், ஒருவிதமான மந்தநிலையும் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் புதிய முயற்சிகளுக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விசாகம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அனுஷம் : உதவிகள் சாதகமாகும்
கேட்டை : முன்னேற்றம் உண்டாகும்.


🕉️தனுசு
ஜூன் 19, 2021

நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தேக்க நிலைகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், அதற்குண்டான அங்கீகாரமும் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களின் நட்பும் சாதகமான பலன்களை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மூலம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூராடம் : அங்கீகாரம் கிடைக்கும்.
உத்திராடம் : நட்பு ஏற்படும்.


🕉️மகரம்
ஜூன் 19, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஆதரவுகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவோணம் : மாற்றங்கள் உண்டாகும்.
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.


🕉️கும்பம்
ஜூன் 19, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். பயணங்களின்போது தேவையான ஆவணங்களை எடுத்து செல்வது தேவையற்ற விவாதங்களை தவிர்க்க இயலும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் அதை சார்ந்த முயற்சிகளை வெளிப்படுத்தும் பொழுது பேச்சுக்களில் நிதானம் வேண்டும். எதிர்பாலின மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.
சதயம் : கவனம் தேவை.
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.


🕉️மீனம்
ஜூன் 19, 2021

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களின் வருகை மற்றும் அவர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
ரேவதி : எண்ணங்கள் ஈடேறும்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.