ஜூன் 23 ஆனி 09 ராசி பலன்

இன்றைய பஞ்சாங்கம்

🕉️மேஷம்
ஜூன் 23, 2021

உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கேற்றவாறு அனுசரித்து செல்ல வேண்டும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவரிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும்.


🕉️ரிஷபம்
ஜூன் 23, 2021

மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதுவிதமான ஆசைகளும், நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான தருணங்களும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : நெருக்கடிகள் குறையும்.
மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.


🕉️மிதுனம்
ஜூன் 23, 2021

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.
திருவாதிரை : துரிதம் உண்டாகும்.
புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


🕉️கடகம்
ஜூன் 23, 2021

திடீர் தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்களின் மீதான ஆர்வம் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : ஆர்வம் மேம்படும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.


🕉️சிம்மம்
ஜூன் 23, 2021

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களை அறிந்து அதற்கு தகுந்தாற்போல வியாபாரத்தின் போக்கினை மாற்றி அமைப்பீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : சுபிட்சமான நாள்.
பூரம் : மாற்றங்கள் பிறக்கும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.


🕉️கன்னி
ஜூன் 23, 2021

திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்விகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திரம் : வெற்றி கிடைக்கும்.
அஸ்தம் : தாமதங்கள் குறையும்.
சித்திரை : அங்கீகாரம் கிடைக்கும்.


🕉️துலாம்
ஜூன் 23, 2021

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் சூழ்நிலையை கையாளுவது நல்லது. உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் அதிகரிக்கும். அலைச்சல்களின் மூலம் உடல் சோர்வு அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : வாதங்களை தவிர்க்கவும்.
சுவாதி : அறிமுகம் கிடைக்கும்.
விசாகம் : சோர்வு உண்டாகும்.


🕉️விருச்சிகம்
ஜூன் 23, 2021

மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் நற்செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். நீண்ட நாட்களாக தடையாக இருந்துவந்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள். பொருளாதார நெருக்கடிகள் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு

விசாகம் : குழப்பங்கள் நீங்கும்.
அனுஷம் : நற்செய்திகள் கிடைக்கும்.
கேட்டை : பிரச்சனைகள் விலகும்.


🕉️தனுசு
ஜூன் 23, 2021

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். வர்த்தக வியாபாரத்தில் பொருள் வரவுகள் மேம்படும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆடம்பர எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் புதுவிதமான முயற்சிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மூலம் : அனுபவம் கிடைக்கும்.
பூராடம் : பொருள் வரவுகள் மேம்படும்.
உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.


🕉️மகரம்
ஜூன் 23, 2021

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பூர்வீகத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சாதகமான முடிவுகள் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதன் மூலம் லாபம் மேம்படும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

உத்திராடம் : ஆதரவான நாள்.
திருவோணம் : முடிவுகள் சாதகமாகும்.
அவிட்டம் : லாபம் அதிகரிக்கும்.


🕉️கும்பம்
ஜூன் 23, 2021

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உறவினர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறைந்து திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். கலை சார்ந்த எண்ணங்கள் மனதில் மேம்படும். கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : தெளிவு பிறக்கும்.
சதயம் : பொறுப்புகள் குறையும்.
பூரட்டாதி : பொறுமை வேண்டும்.


🕉️மீனம்
ஜூன் 23, 2021

புதிய முயற்சிகள் தொடர்பான கருத்துக்களை எடுத்துரைக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டும். இளைய சகோதரர்களின் மூலம் சிறு சிறு வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத்துனைவருடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். இணையம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பணிகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று புதிய முதலீடுகளை மேற்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

பூரட்டாதி : நிதானம் தேவை.
உத்திரட்டாதி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
ரேவதி : சிந்தித்து செயல்படவும்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.