ஜூன் 25 ஆனி 11 ராசி பலன்

ஜூன் 25 ஆனி 11 ராசி பலன்

இன்றைய பஞ்சாங்கம்

🕉️மேஷம்
🗓️25-06-2021⏳
🌼வெள்ளிகிழமை🌼
ஜூன் 25, 2021

நிதானமான செயல்பாடுகளின் மூலம் எண்ணிய இலக்கை அடைய முடியும். தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். ஒப்பந்தம் சார்ந்த பணிகளில் பொறுமையுடன் முடிவெடுக்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : தனவரவுகள் கிடைக்கும்.
பரணி : லாபம் அதிகரிக்கும்.
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.

https://tech4india.in/ticketed-spaces-earn-through-twitter-spaces/

🕉️ரிஷபம்
ஜூன் 25, 2021

குடும்ப உறுப்பினர்களிடம் கவனத்துடன் இருக்க வேண்டும். புதிய நபர்களிடம் தனிப்பட்ட விவரங்களை பகிர்வதை குறைத்துக்கொள்வது நல்லது. பயணங்களின் தன்மைகளை அறிந்து முடிவுகளை எடுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் போது சிந்தித்து செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : கவனம் வேண்டும்.
ரோகிணி : விவரங்களை பகிர்வதை தவிர்க்கவும்.
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.


🕉️மிதுனம்
ஜூன் 25, 2021

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. இணைய வர்த்தக பணிகளில் முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : தீர்வு கிடைக்கும்.


🕉️கடகம்
ஜூன் 25, 2021

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புத்திரர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : ஆதரவான நாள்.
ஆயில்யம் : மகிழ்ச்சி உண்டாகும்.


🕉️சிம்மம்
ஜூன் 25, 2021

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். கடன் தொடர்பான மனவருத்தங்கள் குறையும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பயணங்களின் மூலம் மனதில் மாற்றமும், புத்துணர்ச்சியும் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்

மகம் : நெருக்கடிகள் குறையும்.
பூரம் : சுபிட்சம் உண்டாகும்.
உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.


🕉️கன்னி
ஜூன் 25, 2021

செய்கின்ற புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். கால்நடைகளின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மனை அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். கல்வியில் மாற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அஸ்தம் : திருப்தியான நாள்.
சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.


தொடர்புக்கு : 9842177500
🕉️துலாம்
ஜூன் 25, 2021

உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். வாரிசுகளுக்கு சுபகாரியங்கள் செய்வதற்கான முயற்சிகள் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார ரீதியான கொடுக்கல், வாங்கல் தொடர்பான முயற்சிகளில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : ஆதரவான நாள்.
சுவாதி : முயற்சிகள் ஈடேறும்.
விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.


🕉️விருச்சிகம்
ஜூன் 25, 2021

குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். கருத்துக்களை வெளியிடும்போது வார்த்தைகளில் கவனம் வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில விஷயங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வதற்கான தருணங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விசாகம் : அனுசரித்து செல்லவும்.
அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.
கேட்டை : புரிதல் உண்டாகும்.


🕉️தனுசு
ஜூன் 25, 2021

மனதில் இருந்துவந்த நீண்ட நாள் குழப்பங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். அவ்வப்போது பழைய நினைவுகள் மனதில் ஏற்பட்டு மறையும். நிதானமான செயல்பாடுகளின் மூலம் பகையை தவிர்க்க முடியும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்

மூலம் : தெளிவு உண்டாகும்.
பூராடம் : இன்னல்கள் குறையும்.
உத்திராடம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


🕉️மகரம்
ஜூன் 25, 2021

எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். புதுவிதமான அனுபவங்களின் மூலம் பொறுப்புகளும், விவேகமும் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

உத்திராடம் : விரயங்கள் உண்டாகும்.
திருவோணம் : லாபம் கிடைக்கும்.
அவிட்டம் : பொறுப்புகள் மேம்படும்.


🕉️கும்பம்

ஜூன் 25, 2021

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள்
ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அவிட்டம்: மகிழ்ச்சியான நாள்.
சதயம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.


🕉️மீனம்
ஜூன் 25, 2021

தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் ஆதரவும், உதவிகளும் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : அதிர்ஷ்டகரமான நாள்.
ரேவதி : ஆதரவு கிடைக்கும்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.