ஜூன் 27 ஆனி 13 ராசி பலன்

ஜூன் 27 ஆனி 13 ராசி பலன்

இன்றைய பஞ்சாங்கம்

வாட்ஸ் அப் குழுவில் இணைய

🕉️மேஷம்
ஜூன் 27, 2021

குடும்பத்தில் உங்களின் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : ஈடுபாடு உண்டாகும்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.


🕉️ரிஷபம்
ஜூன் 27, 2021

சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். புதிய முயற்சிகளில் பெரியவர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். வித்தைகளின் மூலம் லாபம் மேம்படும். வேலையாட்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மற்றும் அது சார்ந்த பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.


🕉️மிதுனம்
ஜூன் 27, 2021

தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனதில் அஞ்ஞான சிந்தனைகள் மேம்படும். இயந்திரம் தொடர்பான பணியில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மிருகசீரிஷம் : ஏற்ற, இறக்கமான நாள்.
திருவாதிரை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.


🕉️கடகம்
ஜூன் 27, 2021

உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகம் மற்றும் நட்பு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் ஊதிய உயர்விற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : நட்பு கிடைக்கும்.
பூசம் : உயர்வான நாள்.
ஆயில்யம் : வாய்ப்புகள் உண்டாகும்.


🕉️சிம்மம்
ஜூன் 27, 2021

தாய்மாமன் வகையில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். உத்தியோக மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். தொழில் சார்ந்த லாபம் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : ஆதரவான நாள்.
பூரம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திரம் : இழுபறிகள் குறையும்.


🕉️கன்னி
ஜூன் 27, 2021

குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான பணிகளில் எண்ணிய உதவிகள் சாதகமாக அமையும். கலை சார்ந்த அறிவு மேம்படும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்தி அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : பாராட்டுகள் கிடைக்கும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : புத்திக்கூர்மை வெளிப்படும்.


🕉️துலாம்
ஜூன் 27, 2021

வாகனப் பயணங்களின் மூலம் லாபம் உண்டாகும். உறவினர்களிடம் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். கால்நடைகளின் மூலம் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். நீர்நிலைகள் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : லாபம் மேம்படும்.
சுவாதி : மேன்மை உண்டாகும்.
விசாகம் : முன்னேற்றமான நாள்.


🕉️விருச்சிகம்

ஜூன் 27, 2021
பெரியோர்களின் ஆதரவின் மூலம் இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். காது தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மைக்கான சூழ்நிலைகள் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

விசாகம் : இழுபறிகள் குறையும்.
அனுஷம் : அனுகூலமான நாள்.
கேட்டை : மாற்றங்கள் ஏற்படும்.


“🕉️தனுசு*
ஜூன் 27, 2021

கோபமான பேச்சுக்களை குறைத்துக்கொள்வது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எந்தவொரு செயலிலும் வேகம் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பொருளாதார நிலை மேம்படும். எதிர்பாலின மக்களின் மூலம் பொருள் ஆதாயம் ஏற்படும். வாதத்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : வேகம் அதிகரிக்கும்.
பூராடம் : பொருளாதாரம் மேம்படும்.
உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.


🕉️மகரம்
ஜூன் 27, 2021

உடல் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். சிந்தனையின் போக்கில் முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் பற்றிய மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்பட்டு மறையும். புதுவிதமான கனவுகளை உருவாக்குவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவை பெறுவீர்கள். நினைவாற்றில் ஏற்பட்ட மந்தத்தன்மை குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திராடம் : மாற்றங்கள் ஏற்படும்.
திருவோணம் : முன்னேற்றமான நாள்.
அவிட்டம் : மந்தத்தன்மை குறையும்.


🕉️கும்பம்
ஜூன் 27, 2021

பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விவாதம் புரிவதில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மற்றவர்களுக்கான பணிகளை செய்து அதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான எண்ணங்கள் மனதில் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் கருத்துக்கள் கூறுவதை குறைத்துக்கொள்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.
சதயம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
பூரட்டாதி : எண்ணங்கள் உண்டாகும்.


🕉️மீனம்
ஜூன் 27, 2021

சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும். இணையதளம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வேளாண்மை தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். மனதில் இருக்கும் கவலைகளை மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் தெளிவும், புத்துணர்ச்சியும் பெறுவீர்கள். செய்தொழிலில் மேன்மையும், முன்னேற்றமும் உண்டாகும். சங்கீதம் தொடர்பான பணிகளில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : அங்கீகாரம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : தெளிவு பிறக்கும்.
ரேவதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.