ஜூலை 23 ஆடி 07 ராசி பலன்

ஜூலை 23 ஆடி 07 ராசி பலன்

வெள்ளிக்கிழமை.
(23/07 /2021)
🌹🌹🌹🌹🔱🔱🔱🌹🌹🌹🌹

பிலவ வருடம் ஆடி மாதம் 7ஆம் நாள் வெள்ளிக்கிழமை சுக்லபட்ச சதுர்த்தசி திதியும் பின்பு பௌர்ணமி திதியும் பூராடம் நட்சத்திரம் உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய நாளில்.

✳️✳️✳️✳️🔯🔯🔯✳️✳️✳️✳️
இன்றைய சந்திராஷ்டமம் நட்சத்திரம் மிருகசீரிடம் திருவாதிரை.

🌈மேஷம்
பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு.

⭐அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐பரணி : அறிமுகம் உண்டாகும்.
⭐கிருத்திகை : நுணுக்கங்களை அறிவீர்கள்.

https://dailypanchangam.in/%e0%ae%9c%e0%af%82%e0%ae%b2%e0%af%88-23-%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-07-%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
இன்றைய பஞ்சாங்கம்

🌈ரிஷபம்

உத்தியோகம் தொடர்பான பணிகளில் விழிப்புணர்வு வேண்டும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. தாய்வழி உறவினர்களிடம் மனவருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்.

⭐கிருத்திகை : விழிப்புணர்வு வேண்டும்.
⭐ரோகிணி : கவனம் தேவை.
⭐மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

🌈மிதுனம்
வாகனத்தை சீர் செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் நிர்வாக திறமைகள் வெளிப்படும்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

⭐மிருகசீரிஷம் : நெருக்கம் உண்டாகும்.
⭐திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
⭐புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.

🌈கடகம்
புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வாகன வசதிகள் மேம்படும். வியாபாரத்தில் தனவரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தடைபட்ட சில பொறுப்புகள் மற்றும் உரிமைகள் கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.

⭐புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
⭐பூசம் : தனவரவுகள் அதிகரிக்கும்.
⭐ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

https://tech4india.in/tamil/check-site-permissions-dark-mode-chrome-for-android-ver-92/

🌈சிம்மம்

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். சுபமுயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் ஈடேறும்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐மகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
⭐பூரம் : மனம் மகிழ்வீர்கள்.
⭐உத்திரம் : சாதகமான நாள்.

🌈கன்னி

உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். தொழிலில் சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் உண்டாகும்.
குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்.

⭐உத்திரம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
⭐அஸ்தம் : முயற்சிகள் ஈடேறும்.
⭐சித்திரை : செலவுகள் ஏற்படும்.

🌈துலாம்

எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். வங்கி சேமிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சிறிய தடைகளுக்கு பின் முன்னேற்றம் உண்டாகும். புதிய முடிவுகள் எடுப்பதில் கவனம் வேண்டும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐சித்திரை : சேமிப்புகள் அதிகரிக்கும்.
⭐சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.
⭐விசாகம் : தனவரவுகள் கிடைக்கும்.

🌈விருச்சிகம்

செயல்பாடுகளில் வேகம் அதிகரிக்கும். வேற்றுமதத்தவரின் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களின் வகையில் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

⭐விசாகம் : துரிதம் உண்டாகும்.
⭐அனுஷம் : லாபம் அதிகரிக்கும்.
⭐கேட்டை : இழுபறிகள் குறையும்.

🌈தனுசு

உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். இணையம் சார்ந்த செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். கடன் சார்ந்த சில உதவிகள் சாதகமாகும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் மனவருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐மூலம் : மேன்மை உண்டாகும்.
⭐பூராடம் : அனுபவம் கிடைக்கும்.
⭐உத்திராடம் : போட்டிகள் குறையும்.

🌈மகரம்

பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பிள்ளைகளால் மனமகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்.

⭐உத்திராடம் : தீர்வு கிடைக்கும்.
⭐திருவோணம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
⭐அவிட்டம் : தைரியமான நாள்.

🌈கும்பம்

குடும்பத்தாரின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு.
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை.

⭐அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐சதயம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
⭐பூரட்டாதி : லாபம் மேம்படும்.

🌈மீனம்

எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். அரசாங்கத்தின் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். பழைய சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கேற்ப பாராட்டு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐பூரட்டாதி : தனவரவுகள் உண்டாகும்.
⭐உத்திரட்டாதி : சிக்கல்கள் குறையும்.
⭐ரேவதி : புகழ் பெறுவீர்கள்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.