ஜூலை 25 ராசி பலன்

ஜூலை 25 ராசி பலன் மேஷம்

ஆடி 10 – சனி

கால்நடைகளின் மூலம் எண்ணிய கடனுதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். உறவினர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பெரியோர்களால் எதிர்பார்த்திருந்த தனவரவுகள் சற்று காலதாமதமாக கிடைக்கும். வீட்டுக்கு பயன்படக்கூடிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ரகசியமான சில செயல்பாடுகள் வெளிப்படுவதற்கான சூழ்நிலைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : உதவிகள் கிடைக்கும்.

பரணி : தனவரவுகள் காலதாமதமாகும்.

கிருத்திகை : பொருட்சேர்க்கை உண்டாகும்.
—————————————
*🕉️ஜூலை 25 ராசி பலன் ரிஷபம்*

ஆடி 10 – சனி

கலைத்துறை சார்ந்த செயல்பாடுகளின் மீது ஆர்வம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பும், புரிதலும் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் தொடர்பான சிந்தனைகள் மனதில் தோன்றும். புதுவிதமான உணர்வுகளால் மனதில் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத சில பொருள் வரவின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

கிருத்திகை : ஆர்வம் ஏற்படும்.

ரோகிணி : அன்பு அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : குழப்பமான நாள்.
—————————————
*🕉️ஜூலை 25 ராசி பலன் மிதுனம்*

ஆடி 10 – சனி

பார்வை தொடர்பான உபாதைகள் குறையும். பொருளாதார உயர்வுக்கான ஆலோசனைகள் கிடைக்கப்பெறுவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்குவன்மையால் அனைவரிடத்திலும் பாராட்டு பெறுவீர்கள். நடை மற்றும் உடை தொடர்பான செயல்பாடுகளில் சிறு மாறுதல்கள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். மனதிற்கு பிடித்த சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிஷம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

திருவாதிரை : மாற்றங்கள் உண்டாகும்.

புனர்பூசம் : நம்பிக்கை மேம்படும்.
—————————————
*🕉️ ஜூலை 25 ராசி பலன் கடகம்*

ஆடி 10 – சனி

அறிவு தொடர்பான செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். உடல் தோற்ற பொழிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். இயற்கை தொடர்பான செயல்பாடுகளின் மீது விருப்பம் ஏற்படும். வாழ்க்கையின் போக்கில் சில மாற்றங்கங்களை செய்வீர்கள். மற்றவர்களின் கருத்துக்களை விட தன்னுடைய எண்ணங்கள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையில் செயல்படுவீர்கள். இளைய உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயமான பலன்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.

பூசம் : விருப்பம் ஏற்படும்.

ஆயில்யம் : ஆதாயமான நாள்.
—————————————
*🕉️ ஜூலை 25 ராசி பலன் சிம்மம்*

ஆடி 10 – சனி

எதிர்பாராத சில செலவுகளால் கையிருப்பு குறையும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். முன்கோபத்தை விடுத்து நிதானத்துடன் செயல்படவும். குழந்தைகளின் கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிலருக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்பட்டு மறையும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளால் மனதில் மாற்றம் உண்டாகும். கடனை அடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : மாற்றங்கள் உண்டாகும்.

பூரம் : சிந்தனைகள் மேம்படும்.

உத்திரம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
—————————————
*🕉️ ஜூலை 25 ராசி பலன் கன்னி*

ஆடி 10 – சனி

மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதரவான சூழ்நிலை அமையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியான மனநிலை உண்டாகும். பொன், பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். மனதில் நினைத்த ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வீர்கள். விவேகமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டு பெறுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : ஆதரவான நாள்.

அஸ்தம் : ஆசைகள் நிறைவேறும்.

சித்திரை : பிரச்சனைகள் குறையும்.
—————————————
*🕉️ஜூலை 25 ராசி பலன் துலாம்*

ஆடி 10 – சனி

வியாபாரம் தொடர்பான வெளியூர் அறிமுகங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். ஆன்மிக வழிபாடு மற்றும் அது தொடர்பான சிந்தனைகள் மனதில் உண்டாகும். மனைவிவழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். மருத்துவப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களுக்கு ஆலோசனைகள் கூறும் பொழுது சற்று சிந்தித்து செயல்பட வேண்டும். தொழில் அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : புதிய அறிமுகம் கிடைக்கும்.

சுவாதி : அனுசரித்து செல்லவும்.

விசாகம் : சிந்தனைகள் மேம்படும்.
—————————————
*🕉️விருச்சகம்*

ஜூலை 25, 2020

ஆடி 10 – சனி

சங்கீதம் பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியரின் வழிகாட்டுதலும், ஆலோசனைகளும் மனத்தெளிவை ஏற்படுத்தும். பெண்கள் தங்களுக்கு பிடித்த உடைகளை வாங்கி மகிழ்வதற்காக வாய்ப்புகள் உண்டாகும். வாகனம் தொடர்பான சில பிரச்சனைகள் அகலும். எதிர்பாராத நண்பர்களின் வருகையினால் மனதில் புத்துணர்ச்சியான சூழ்நிலை ஏற்படும். நீர்ப்பாசனம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான நல்லதொரு வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : மனத்தெளிவு உண்டாகும்.

அனுஷம் : பிரச்சனைகள் அகலும்.

கேட்டை : புத்துணர்ச்சியான நாள்.
—————————————
*🕉️தனுசு*

ஜூலை 25, 2020

ஆடி 10 – சனி

நிலுவையில் இருந்துவந்த சில பொருட்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். பலதரப்பட்ட எண்ணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் அதிக நேரங்களை செலவிடுவீர்கள். மனைவியிடத்தில் சில காரணங்களுக்காக மனவருத்தங்கள் தோன்றலாம். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : ஆதாயம் ஏற்படும்.

பூராடம் : சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள்.

உத்திராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
—————————————
*🕉️மகரம்*

ஜூலை 25, 2020

ஆடி 10 – சனி

சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் கிடைக்கப்பெறுவீர்கள். எதிர்பாலின மக்களிடம் விரோதங்களை விடுத்து நிதானத்துடன் செயல்பட வேண்டும். பூக்கள் தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஆதாயமான பலன்கள் உண்டாகும். மனதிற்கு பிடித்த வகையில் வீட்டினை மாற்றி அமைத்து கொள்வீர்கள். பொதுமக்கள் தொடர்பான பணியில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

திருவோணம் : நிதானத்துடன் செயல்படவும்.

அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
—————————————
*🕉️கும்பம்*

ஜூலை 25, 2020

ஆடி 10 – சனி

உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகளால் மனவருத்தங்கள் ஏற்படும். தாய்மாமன்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். திட்டமிட்ட சில காரியங்களில் எதிர்பாராத தடைகளால் காலதாமதம் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பதன் மூலம் பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். இயந்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

அவிட்டம் : கவனம் வேண்டும்.

சதயம் : அனுசரித்து செல்லவும்.

பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
—————————————
*🕉️மீனம்*

ஜூலை 25, 2020

ஆடி 10 – சனி

கேளிக்கை தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். குடும்ப நபர்களின் மூலம் கலகலப்பான சூழல் உண்டாகும். கவிதை, இலக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமும், புதுவிதமான ஈடுபாடும் உண்டாகும். மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : கலகலப்பான நாள்.

உத்திரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.

ரேவதி : சிந்தனைகள் மேலோங்கும்.

சம்பத் குமார்

இன்றைய பஞ்சாங்கம்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.