ஏப்ரல் 7 2022 தின ராசி பலன்கள்

டிசம்பர் 03 கார்த்திகை 17 ராசி பலன்

டிசம்பர் 03 கார்த்திகை 17 ராசி பலன்

பதிவுகளை உடனுக்குடன் பெற

🗓️03-12-2021⏳
🌼வெள்ளிக்கிழமை🌼

🕉️மேஷம்
டிசம்பர் 03, 2021

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பமும், கோபமும் உண்டாகும். வியாபார பணிகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உணவு சார்ந்த செயல்பாடுகளில் கட்டுப்பாடு வேண்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சிக்கல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

அஸ்வினி : புரிதல் உண்டாகும்.
பரணி : நிதானம் வேண்டும்.
கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 03, 2021

ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். அரசு தொடர்பான பணிகளில் புதுவிதமான முயற்சிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

கிருத்திகை : தாமதங்கள் குறையும்.
ரோகிணி : முன்னேற்றமான நாள்.
மிருகசீரிஷம் : மகிழ்ச்சி பிறக்கும்.


🕉️மிதுனம்
டிசம்பர் 03, 2021

உத்தியோகத்தில் தள்ளிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு சாதகமாகும். மாமன் வழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். சமூகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : உதவிகள் சாதகமாகும்.
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


🕉️கடகம்
டிசம்பர் 03, 2021

குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். எந்த காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
பூசம் : சிந்தனைகள் மேலோங்கும்.
ஆயில்யம் : மகிழ்ச்சியான நாள்.


🕉️சிம்மம்
டிசம்பர் 03, 2021

ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். கால்நடைகளின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். ரகசியமான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : விழிப்புணர்வு வேண்டும்.
பூரம் : அனுகூலம் உண்டாகும்.
உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.


🕉️கன்னி
டிசம்பர் 03, 2021

உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வேலையாட்கள் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். வெளியூர் தொடர்பான புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : திருப்தியான நாள்.
அஸ்தம் : வாய்ப்பு உண்டாகும்.
சித்திரை : பிரச்சனைகள் குறையும்.


🕉️துலாம்
டிசம்பர் 03, 2021

புதிய தொழில் நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு ஏற்படும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். பெரியவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்தத்தன்மையை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : ஈடுபாடு உண்டாகும்.
சுவாதி : வரவுகள் மேம்படும்.
விசாகம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.


🕉️விருச்சிகம்
டிசம்பர் 03, 2021

செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பாசனம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். மனதில் இருக்கக்கூடிய பல விஷயங்களுக்கு தெளிவும், புரிதலும் ஏற்படும். தனவரவுகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் மேம்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் கையாளவும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : ஆர்வம் உண்டாகும்.
அனுஷம் : தடைகள் நீங்கும்.
கேட்டை : பொறுமை வேண்டும்.


🕉️தனுசு
டிசம்பர் 03, 2021

பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படலாம். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூராடம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.
உத்திராடம் : அனுபவம் உண்டாகும்.


🕉️மகரம்
டிசம்பர் 03, 2021

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர் வகையில் ஒற்றுமை உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். வியாபாரத்தில் உள்ள மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்

உத்திராடம் : ஒற்றுமை உண்டாகும்.
திருவோணம் : எண்ணங்கள் மேம்படும்.
அவிட்டம் : போட்டிகளை சமாளிப்பீர்கள்.


🕉️கும்பம்
டிசம்பர் 03, 2021

புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். இலக்குகள் பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

அவிட்டம் : கலகலப்பான நாள்.
சதயம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.


🕉️மீனம்
டிசம்பர் 03, 2021

வியாபார பணிகளில் சில மாற்றங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். அன்பு அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.
உத்திரட்டாதி : லாபம் கிடைக்கும்.
ரேவதி : நன்மை உண்டாகும்.

About Author

2 Replies to “டிசம்பர் 03 கார்த்திகை 17 ராசி பலன்”

  1. புத்தாண்டு பலன்களை வெளியிடுங்கள் அண்ணா

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.