டிசம்பர் 04 ராசி பலன்

🕉️மேஷம்
டிசம்பர் 04, 2020
கார்த்திகை 19 – வெள்ளி

சகோதரர்களின் மூலம் புதிய பயணங்களும், அனுபவ வாய்ப்புகளும் ஏற்படும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : அனுபவம் கிடைக்கும்.
பரணி : மாற்றங்கள் உண்டாகும்.
கிருத்திகை : மேன்மையான நாள்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 04, 2020
கார்த்திகை 19 – வெள்ளி

புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை செயல்வடிவமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : ஈடுபாடு அதிகரிக்கும்.
ரோகிணி : முயற்சிகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


🕉️மிதுனம்
டிசம்பர் 04, 2020
கார்த்திகை 19 – வெள்ளி

வாக்கு சாதுர்யத்தின் மூலம் பாராட்டப்படுவீர்கள். எதிலும் விரைவாக செயல்படுவதன் மூலம் பொருளாதார மேன்மை உண்டாகும். மனதில் தோன்றும் தேவையற்ற சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். புதிய அதிகாரிகளிடம் மதிப்புகள் உயரும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : பாராட்டப்படுவீர்கள்.
திருவாதிரை : காலதாமதம் உண்டாகும்.
புனர்பூசம் : மதிப்புகள் உயரும்.


🕉️கடகம்
டிசம்பர் 04, 2020
கார்த்திகை 19 – வெள்ளி

வழக்கு தொடர்பான பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். தம்பதியர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமும், அதில் அதிக நேரத்தை செலவும் செய்வீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பணவரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : ஆதாயம் ஏற்படும்.
பூசம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
ஆயில்யம் : பணவரவுகள் கிடைக்கும்.


🕉️சிம்மம்
டிசம்பர் 04, 2020
கார்த்திகை 19 – வெள்ளி

ஆரோக்கியமான விவாதங்கள் நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டு மறையும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். நண்பர்களிடம் உரையாடும்போது பேச்சுக்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : ஆதரவு கிடைக்கும்.
பூரம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.


🕉️கன்னி
டிசம்பர் 04, 2020
கார்த்திகை 19 – வெள்ளி

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய நபர்களின் தொடர்புகள் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமைகள் வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : மனம் மகிழ்வீர்கள்.
அஸ்தம் : எண்ணங்கள் ஈடேறும்.
சித்திரை : திறமைகள் வெளிப்படும்.


🕉️துலாம்
டிசம்பர் 04, 2020
கார்த்திகை 19 – வெள்ளி

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிதானமான வாதங்களின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். மனை விற்பனைகளின் மூலம் இலாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். அரசு வழியில் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : வெற்றிகரமான நாள்.
சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
விசாகம் : இலாபகரமான நாள்.


🕉️விருச்சகம்
டிசம்பர் 04, 2020
கார்த்திகை 19 – வெள்ளி

வாகனப் பழுதுகளை சரி செய்வதற்கான எண்ணங்கள் தோன்றும். வெளியூர் தொடர்பான நபர்களின் தொடர்புகள் அனுகூலமான பலன்களை தரும். உத்தியோகத்தில் மறைமுக இன்னல்கள் வந்து நீங்கும். பணி தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசாகம் : எண்ணங்கள் தோன்றும்.
அனுஷம் : இன்னல்கள் நீங்கும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.


🕉️தனுசு
டிசம்பர் 04, 2020
கார்த்திகை 19 – வெள்ளி

வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படலாம். விளையாட்டுகளில் விழிப்புணர்வு வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். அறிமுகமில்லாத நபரிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : அலைச்சல்கள் ஏற்படலாம்.
பூராடம் : கவலைகள் உண்டாகும்.
உத்திராடம் : விரயங்கள் ஏற்படும்.


🕉️மகரம்
டிசம்பர் 04, 2020
கார்த்திகை 19 – வெள்ளி

திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் புதுமைகளை செய்து பாராட்டுகளை பெறுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்பாடுகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : வாய்ப்புகள் ஏற்படும்.
திருவோணம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.


🕉️கும்பம்
டிசம்பர் 04, 2020
கார்த்திகை 19 – வெள்ளி

நண்பர்களின் உதவிகள் சாதகமாகும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான தீர்வு கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : உதவிகள் சாதகமாகும்.
சதயம் : எதிர்ப்புகள் நீங்கும்.
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.


🕉️மீனம்
டிசம்பர் 04, 2020
கார்த்திகை 19 – வெள்ளி

சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதுவிதமான ஆசைகள் மனதில் தோன்றும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் தொடர்புகள் கிடைக்கும். சகோதர வகையில் ஒற்றுமை மேம்படும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : ஒற்றுமை மேம்படும்.
ரேவதி : காரியங்கள் ஈடேறும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.