டிசம்பர் 05 ராசி பலன்

🕉️மேஷம்*
டிசம்பர் 05, 2020
கார்த்திகை 20 – சனி

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தொழில் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இளைய சகோதரர்களால் சுபவிரயங்கள் ஏற்படும். வியாபாரம் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அஸ்வினி : அனுகூலமான நாள்.
பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 05, 2020
கார்த்திகை 20 – சனி

இறைவழிபாட்டை மேற்கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதி காக்கவும். பூர்வீக சொத்துக்களால் சுபவிரயங்கள் உண்டாகும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : அமைதி வேண்டும்.
ரோகிணி : சுபவிரயங்கள் உண்டாகும்.
மிருகசீரிஷம் : எண்ணங்கள் தோன்றும்.


🕉️மிதுனம்
டிசம்பர் 05, 2020
கார்த்திகை 20 – சனி

கால்நடைகள் சம்பந்தமான கடன் உதவிக்கான முயற்சிகள் ஈடேறும். புதிய வேலைக்கான முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் மேன்மை உண்டாகும். வாதத்திறமையால் இலாபம் கிடைக்கும். அந்நியர்களால் தனவிருத்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும்.
திருவாதிரை : மேன்மையான நாள்.
புனர்பூசம் : இலாபம் கிடைக்கும்.


🕉️கடகம்
டிசம்பர் 05, 2020
கார்த்திகை 20 – சனி

இளைய சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சங்கீத கலைஞர்கள் தங்கள் திறமைகளால் இலாபம் அடைவீர்கள். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கண்ணில் சில உபாதைகள் ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : திறமைகள் வெளிப்படும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் உண்டாகும்.


🕉️சிம்மம்
டிசம்பர் 05, 2020
கார்த்திகை 20 – சனி

மற்றவர்களிடம் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் சாதகமான முடிவுகளை தரும். வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு புத்திக்கூர்மை வெளிப்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : உதவிகள் கிடைக்கும்.
பூரம் : முயற்சிகள் கைகூடும்.
உத்திரம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.


🕉️கன்னி
டிசம்பர் 05, 2020
கார்த்திகை 20 – சனி

புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் முயற்சிகளுக்கு ஏற்ப சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். சபை தொடர்பான பணிகளில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய நவீன கருவிகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : எண்ணங்கள் மேம்படும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


🕉️துலாம்
டிசம்பர் 05, 2020
கார்த்திகை 20 – சனி

அரசு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு மறையும். பாகப்பிரிவினைகள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாகன வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். கால்நடைகள் வியாபாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சுவாதி : தடைகள் குறையும்.
விசாகம் : அனுபவம் கிடைக்கும்.


🕉️விருச்சகம்
டிசம்பர் 05, 2020
கார்த்திகை 20 – சனி

கனிவான பேச்சுக்களின் மூலம் காரியங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். சமுதாய பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சிந்தித்து செயல்பட வேண்டும். பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு இலாபம் உண்டாகும். பொருளாதார உயர்வு பற்றிய சிந்தனைகளும், முயற்சிகளும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : காரியசித்தி உண்டாகும்.
அனுஷம் : இலாபகரமான நாள்.
கேட்டை : சிந்தனைகள் அதிகரிக்கும்.


🕉️தனுசு
டிசம்பர் 05, 2020
கார்த்திகை 20 – சனி

ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு காரிய தடங்களால் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாகும். அந்நியர்களால் ஏற்படும் பிரச்சனைகளை பொறுமையுடன் எதிர்கொள்ளவும். மனதில் தேவையற்ற சஞ்சல எண்ணங்கள் தோன்றும். தம்பதியர்களுக்கிடையே வாக்குவாதங்கள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மூலம் : காலதாமதம் உண்டாகும்.
பூராடம் : பொறுமை வேண்டும்.
உத்திராடம் : வாக்குவாதங்கள் தோன்றும்.


🕉️மகரம்
டிசம்பர் 05, 2020
கார்த்திகை 20 – சனி

உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மற்றவர்களிடம் கொடுத்த தனவரவுகள் மீண்டும் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய வித்தியாசமான சிந்தனைகள் மனதில் தோன்றும். சிறு தொழில் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் மேம்படும். வாகனப் பயணங்களின்போது கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : சிந்தனைகள் தோன்றும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.


🕉️கும்பம்
டிசம்பர் 05, 2020
கார்த்திகை 20 – சனி

கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் மேம்படும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் தனவரவுகள் உண்டாகும். நெருக்கமானவர்கள் பற்றிய பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.
சதயம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : சோர்வு ஏற்படும்.


🕉️மீனம்
டிசம்பர் 05, 2020
கார்த்திகை 20 – சனி

மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த விஷயங்கள் மேம்படும். உறவினர்களிடம் சாதகமான பலன்கள் உண்டாகும். மனதில் இருக்கும் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் தெளிவு கிடைக்கும். தவறிய சில பொருட்களை பற்றிய விபரங்களை அறிவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
பூரட்டாதி : சாதகமான நாள்.
உத்திரட்டாதி : தெளிவு கிடைக்கும்.
ரேவதி : விபரங்களை அறிவீர்கள்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.