டிசம்பர் 06 ராசி பலன்

🕉️மேஷம்
டிசம்பர் 06, 2020
கார்த்திகை 21 – ஞாயிறு

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் குறையும். நெருக்கமானவர்களிடம் பகையை மறந்து ஒற்றுமையுடன் செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் வாழ்க்கையில் புதுவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
அஸ்வினி : பொறுப்புகள் குறையும்.
பரணி : மாற்றமான நாள்.
கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 06, 2020
கார்த்திகை 21 – ஞாயிறு

செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை பற்றி அறிந்து கொள்வீர்கள். உயரமான இடங்களில் பணிபுரியும்போது சற்று கவனம் வேண்டும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். சிறு தொழில் தொடர்பான முயற்சிகளில் எண்ணங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : செம்மஞ்சள்
கிருத்திகை : எதிர்ப்புகளை அறிவீர்கள்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : காரியசித்தி உண்டாகும்.


🕉️மிதுனம்
டிசம்பர் 06, 2020
கார்த்திகை 21 – ஞாயிறு

உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சொந்த ஊர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். நீர்நிலை சார்ந்த பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். விவசாய நிலம் சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். தொழிற்சங்கம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.
திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.


🕉️கடகம்
டிசம்பர் 06, 2020
கார்த்திகை 21 – ஞாயிறு

பத்திரிக்கை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தகவல் தொடர்புத்துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் மேன்மை ஏற்படும். புதிய கலைகளை கற்பதற்கான விருப்பங்கள் உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றமும், புத்துணர்ச்சியும் ஏற்படும். அறிவு சார்ந்த சிந்தனைகளாலும், கேள்விகளாலும் பாராட்டுகளை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூசம் : மேன்மையான நாள்.
ஆயில்யம் : புத்துணர்ச்சி ஏற்படும்.


🕉️சிம்மம்
டிசம்பர் 06, 2020
கார்த்திகை 21 – ஞாயிறு

மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொந்த விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். வீடு மற்றும் வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். விவசாயப் பணிகளில் இருப்பவர்களுக்கு இலாபம் கிடைக்கும். அஞ்ஞானம் தொடர்பான சிந்தனைகள் மனதில் தோன்றும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : விருப்பங்கள் நிறைவேறும்.
பூரம் : சிந்தனைகள் உண்டாகும்.
உத்திரம் : இலாபம் கிடைக்கும்.


🕉️கன்னி
டிசம்பர் 06, 2020
கார்த்திகை 21 – ஞாயிறு

எழுத்துத்துறையில் இருப்பவர்களுக்கு தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். அண்டை, அயலாரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு மூலம் மனதில் திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதமும், தன்னம்பிக்கையும் வெளிப்படும். நண்பர்களின் உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
அஸ்தம் : திருப்திகரமான நாள்.
சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.


🕉️துலாம்
டிசம்பர் 06, 2020
கார்த்திகை 21 – ஞாயிறு

மனதில் புதிய குறிக்கோள்களை உருவாக்குவீர்கள். வாக்குவன்மையின் மூலம் இலாபம் உண்டாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மருமகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல்களின் மூலம் சோர்வு ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
சித்திரை : இலாபம் உண்டாகும்.
சுவாதி : சேமிப்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.


🕉️விருச்சகம்
டிசம்பர் 06, 2020
கார்த்திகை 21 – ஞாயிறு

தொழில் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். சமூக வாழ்க்கை பற்றி மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். கால்நடைகள் வளர்ப்பு தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு இலாபம் மேம்படும். தேவையற்ற சஞ்சலமான எண்ணங்களின் மூலம் மனதில் குழப்பங்கள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
அனுஷம் : குழப்பமான நாள்.
கேட்டை : முன்னேற்றம் ஏற்படும்.


🕉️தனுசு
டிசம்பர் 06, 2020
கார்த்திகை 21 – ஞாயிறு

சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனைவிவழி உறவினர்களின் மூலமாக ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களிடம் பழகும்போது சற்று கவனம் வேண்டும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகள் மற்றும் உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். பழக்கவழக்கங்கள் தொடர்பான செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூராடம் : ஆதரவான நாள்.
உத்திராடம் : மேன்மை உண்டாகும்.


🕉️மகரம்
டிசம்பர் 06, 2020
கார்த்திகை 21 – ஞாயிறு

உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பங்காளி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத செய்திகளின் மூலம் சேமிப்புகள் குறையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமற்ற சூழல் ஏற்படும். வேலையாட்களிடம் பொறுமையுடன் செயல்படவும். புதிய செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : சாதகமற்ற நாள்.


🕉️கும்பம்
டிசம்பர் 06, 2020
கார்த்திகை 21 – ஞாயிறு

சுயதொழில் சார்ந்த செயல்பாடுகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இளைய சகோதரர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.


🕉️மீனம்
டிசம்பர் 06, 2020
கார்த்திகை 21 – ஞாயிறு

வேலையாட்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புண்ணிய தீர்த்த பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். குடும்ப பெரியோர்களின் ஆசிகளும், ஆலோசனைகளும் மனதிற்கு மகிழ்ச்சியையும், தெளிவையும் ஏற்படுத்தும். எதிர்பாராத உதவிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : பயணங்கள் கைகூடும்.
ரேவதி : தெளிவு பிறக்கும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.