ஏப்ரல் 7 2022 தின ராசி பலன்கள்

டிசம்பர் 07 கார்த்திகை 21 ராசி பலன்

டிசம்பர் 07 கார்த்திகை 21 ராசி பலன்

இன்றைய பஞ்சாங்கம்

*️07-12-2021⏳*

*செவ்வாய்கிழமை*

*️மேஷம்*

டிசம்பர் 07, 2021

நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தெளிவும், தீர்வும் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் காணப்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

அஸ்வினி : தீர்வு கிடைக்கும்.

பரணி : கலகலப்பான நாள்.

கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.
—————————————
*️ரிஷபம்*

டிசம்பர் 07, 2021

உடல்நிலையில் சோர்வும், ஒருவிதமான மந்தத்தன்மையும் உண்டாகும். உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நண்பர்களிடம் கருத்துக்கள் பரிமாறும் பொழுது கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் மூலம் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். கீர்த்தி உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

ரோகிணி : கவனம் வேண்டும்.

மிருகசீரிஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.
—————————————
*️மிதுனம்*

டிசம்பர் 07, 2021

எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குழந்தைகளின் வழியில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதில் ஆர்வம் உண்டாகும். தொழில், வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சுபமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : சுறுசுறுப்பான நாள்.

திருவாதிரை : பிரச்சனைகள் குறையும்.

புனர்பூசம் : ஆர்வம் உண்டாகும்.
—————————————
*️கடகம்*

டிசம்பர் 07, 2021

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் மேம்படும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சகோதரர்களின் ஒத்துழைப்பு மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வங்கி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் மேம்படும்.

பூசம் : பிரச்சனைகள் குறையும்.

ஆயில்யம் : நம்பிக்கை பிறக்கும்.
—————————————
*️சிம்மம்*

டிசம்பர் 07, 2021

குழந்தைகளால் மனதிற்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் மேன்மை உண்டாகும். உறவினர்களில் உண்மையானவர்களை புரிந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு மேம்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.

பூரம் : புரிதல் உண்டாகும்.

உத்திரம் : ஆதரவு மேம்படும்.
—————————————
*️கன்னி*

டிசம்பர் 07, 2021

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்வதால் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார பணிகளில் இருந்துவந்த தேக்க நிலைகள் மாறும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : அனுபவங்கள் ஏற்படும்.

அஸ்தம் : சாதகமான நாள்.

சித்திரை : விழிப்புணர்வு வேண்டும்.
—————————————
*️துலாம்*

டிசம்பர் 07, 2021

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரம் தொடர்பான சிறு தூரப் பயணங்கள் சாதகமாகும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : தெளிவு ஏற்படும்.

சுவாதி : திறமைகள் வெளிப்படும்.

விசாகம் : ஆர்வம் உண்டாகும்.
—————————————
*️விருச்சிகம்*

டிசம்பர் 07, 2021

தனவரவுகளை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வரவுகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

அனுஷம் : மாற்றங்கள் உண்டாகும்.

கேட்டை : இலக்குகள் பிறக்கும்.
—————————————
*️தனுசு*

டிசம்பர் 07, 2021

உடனிருப்பவர்கள் பற்றிய தெளிவு பிறக்கும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். வியாபார பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மூலம் : தெளிவு பிறக்கும்.

பூராடம் : மாற்றங்கள் உண்டாகும்.

உத்திராடம் : எதிர்ப்புகள் குறையும்.
—————————————
*️மகரம்*

டிசம்பர் 07, 2021

அரசு சார்ந்த வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் சேமிப்புகள் உயரும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். இறை வழிபாடு மனதில் தெளிவை ஏற்படுத்தும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : உதவிகள் சாதகமாகும்.

திருவோணம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
—————————————
*️கும்பம்*

டிசம்பர் 07, 2021

கூட்டு வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

அவிட்டம் : மேன்மை உண்டாகும்.

சதயம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
—————————————
*️மீனம்*

டிசம்பர் 07, 2021

பிடிவாத போக்கை மாற்றிக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பான முயற்சியில் ஈடுபாடு உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : ஈடுபாடு அதிகரிக்கும்.

ரேவதி : முடிவுகள் சாதகமாகும்.
—————————————


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.