டிசம்பர் 07 ராசி பலன்

🕉️மேஷம்
டிசம்பர் 07, 2020
கார்த்திகை 22 – திங்கள்

குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கோபமான பேச்சுக்களை குறைத்து நிதானத்துடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த சில செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.
பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
கிருத்திகை : காலதாமதம் உண்டாகும்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 07, 2020
கார்த்திகை 22 – திங்கள்

மகிழ்ச்சியான செய்திகளின் மூலம் மனதில் அமைதி உண்டாகும். பால் தொடர்பான வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தொழிற்சங்கம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : அமைதி உண்டாகும்.
ரோகிணி : மேன்மையான நாள்.
மிருகசீரிஷம் : நுட்பங்களை அறிவீர்கள்.


🕉️மிதுனம்
டிசம்பர் 07, 2020
கார்த்திகை 22 – திங்கள்

புதிய கலைகள் கற்பது தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சலும், ஆர்வமும் கிடைக்கும். கணிதம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சான்றிதழ்கள் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் குறைந்து எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தேவையற்ற சில விஷயங்களின் மூலம் மனதில் குழப்பங்கள் ஏற்படும். சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான சிந்தனைகளும், முயற்சிகளும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : ஆர்வம் உண்டாகும்.
திருவாதிரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
புனர்பூசம் : மாற்றமான நாள்.


🕉️கடகம்
டிசம்பர் 07, 2020
கார்த்திகை 22 – திங்கள்

பேச்சுத்திறமைகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய கலைகள் கற்பதில் ஆர்வம் உண்டாகும். சிலருக்கு மனதிற்கு பிடித்த ஆபரணங்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : ஆர்வம் உண்டாகும்.


🕉️சிம்மம்
டிசம்பர் 07, 2020
கார்த்திகை 22 – திங்கள்

சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் நிர்வாகத்திறமைகள் வெளிப்படும். உடல் தோற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். தனிப்பட்ட திறமைகளை வளர்த்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செல்வச்சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : நிர்வாகத்திறமைகள் வெளிப்படும்.
பூரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.


🕉️கன்னி
டிசம்பர் 07, 2020
கார்த்திகை 22 – திங்கள்

முயற்சிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். புதிய தொழில் மற்றும் உபரி வருமானத்திற்கான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு முதலீடுகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
அஸ்தம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
சித்திரை : அனுகூலமான நாள்.


🕉️துலாம்
டிசம்பர் 07, 2020
கார்த்திகை 22 – திங்கள்

மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். புதிய துறைகள் பற்றிய சிந்தனைகளும், செயல்பாடுகளும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். விவசாயம் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்கள் தேவையற்ற கருத்துக்கள் பரிமாறுவதை குறைத்துக்கொள்வது நன்மையளிக்கும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : ஆசைகள் நிறைவேறும்.
சுவாதி : இன்னல்கள் குறையும்.
விசாகம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.


🕉️விருச்சிகம்
டிசம்பர் 07, 2020
கார்த்திகை 22 – திங்கள்

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசாங்கம் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதம் அகலும். உற்பத்தி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் பதவி தொடர்பாக உடனிருப்பவர்களின் ஆலோசனைகள் மகிழ்ச்சியை அளிக்கும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அனுஷம் : காலதாமதம் அகலும்.
கேட்டை : மேன்மை உண்டாகும்.


🕉️தனுசு
டிசம்பர் 07, 2020
கார்த்திகை 22 – திங்கள்

ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். தொழிலில் இருந்துவந்த தேக்க நிலைகள் படிப்படியாக குறையும். நண்பர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதிய அனுபவம் கிடைக்கும். தந்தைவழி சொத்துக்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : பிரச்சனைகள் குறையும்.
பூராடம் : தேக்க நிலைகள் அகலும்.
உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.


🕉️மகரம்
டிசம்பர் 07, 2020
கார்த்திகை 22 – திங்கள்

எதிர்பாராத சில செய்திகளின் மூலம் சேமிப்புகள் குறையும். உறவினர்களின் மூலம் அலைச்சலும், பதற்றமும் ஏற்படலாம். புத்திரர்களின் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
உத்திராடம் : சேமிப்புகள் குறையும்.
திருவோணம் : பதற்றமான நாள்.
அவிட்டம் : நிதானம் வேண்டும்.


🕉️கும்பம்
டிசம்பர் 07, 2020
கார்த்திகை 22 – திங்கள்

சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருங்கிய உறவினர்களுடன் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உங்களின் கருத்துக்களுக்கு வெளிவட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சதயம் : ஆதரவான நாள்.
பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.


🕉️மீனம்
டிசம்பர் 07, 2020
கார்த்திகை 22 – திங்கள்

உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்ல வேண்டும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமும், வெற்றியும் கிடைக்கும். தனிமையான சூழ்நிலைகளின் மூலம் மனதில் இருக்கும் கவலைகள் குறையும். மற்றவர்களை உதாசீனப்படுத்தாமல் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பகையை தவிர்க்க இயலும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
ரேவதி : கவலைகள் குறையும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.