டிசம்பர் 13 ராசி பலன்

🕉️மேஷம்
டிசம்பர் 13, 2020
கார்த்திகை 28 – ஞாயிறு

மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எந்த வேலையிலும் முழு கவனத்துடன் செயல்படவும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். புதிய நபர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். வாழ்க்கைத்துணைவர் வழி உறவுகளின் மூலம் விரயங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : கவனத்துடன் செயல்படவும்.
பரணி : காலதாமதம் ஏற்படும்.
கிருத்திகை : விரயங்கள் உண்டாகும்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 13, 2020
கார்த்திகை 28 – ஞாயிறு

எதிர்பார்த்த உதவிகள் அலைச்சலுக்கு பின்பு கிடைக்கும். எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்பான செயல்கள் ஈடேறும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். வெளியூர் பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : எண்ணங்கள் மேலோங்கும்.
ரோகிணி : காலதாமதமாகும்.
மிருகசீரிஷம் : அனுபவம் உண்டாகும்.


🕉️மிதுனம்
டிசம்பர் 13, 2020
கார்த்திகை 28 – ஞாயிறு

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். அந்நியர்களால் வருமானம் அதிகரிக்கும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : வருமானம் அதிகரிக்கும்.


🕉️கடகம்
டிசம்பர் 13, 2020
கார்த்திகை 28 – ஞாயிறு

கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். கற்ற கலைகளால் எதிர்பாராத இலாபம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான புதிய விஷயங்களுக்காக அலைச்சல்கள் அதிகரிக்கலாம். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய மாற்றங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : இலாபம் உண்டாகும்.
ஆயில்யம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


🕉️சிம்மம்
டிசம்பர் 13, 2020
கார்த்திகை 28 – ஞாயிறு

புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : ஆர்வம் உண்டாகும்.
பூரம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


🕉️கன்னி
டிசம்பர் 13, 2020
கார்த்திகை 28 – ஞாயிறு

தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு கீர்த்தி பெறுவீர்கள். உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். திறமைக்கேற்ற பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
உத்திரம் : கீர்த்தி உண்டாகும்.
அஸ்தம் : எண்ணங்கள் ஈடேறும்.
சித்திரை : அங்கீகாரம் கிடைக்கும்.


🕉️துலாம்
டிசம்பர் 13, 2020
கார்த்திகை 28 – ஞாயிறு

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். வியாபாரத்தில் இலாபம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். ஆரோக்கியம் சீராக இருக்கும். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். கால்நடைகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : பொறாமைகள் குறையும்.
விசாகம் : இலாபம் அதிகரிக்கும்.


🕉️விருச்சிகம்
டிசம்பர் 13, 2020
கார்த்திகை 28 – ஞாயிறு

நண்பர்களின் உதவியால் பொருளாதாரம் தொடர்பாக இருந்துவந்த பிரச்சனைகள் சற்று குறையும். பூர்வீக சொத்துக்களால் இலாபம் ஏற்படும். பத்திரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் நேரிடும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
அனுஷம் : மேன்மை உண்டாகும்.
கேட்டை : திருப்பங்கள் நேரிடும்.


🕉️தனுசு
டிசம்பர் 13, 2020
கார்த்திகை 28 – ஞாயிறு

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். நண்பர்களின் எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : கலகலப்பான நாள்.
பூராடம் : சந்திப்புகள் உண்டாகும்.
உத்திராடம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


🕉️மகரம்
டிசம்பர் 13, 2020
கார்த்திகை 28 – ஞாயிறு

அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை ஏற்படும். தொழிலில் சிறு சிறு மாற்றங்களை செய்வதன் மூலம் இலாபத்தை அடைய முடியும். முக்கிய நபர்களின் சந்திப்பும், உதவியும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப்பேசுவது நன்மையளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
உத்திராடம் : மந்தமான நாள்.
திருவோணம் : இலாபம் உண்டாகும்.
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.


🕉️கும்பம்
டிசம்பர் 13, 2020
கார்த்திகை 28 – ஞாயிறு

அரசாங்க பணியில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமைகள் வெளிப்பட்டு கீர்த்தி உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். பொருட்சேர்க்கை உண்டாகும். கையாளும் பொருட்களில் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : இடர்பாடுகள் நீங்கும்.
சதயம் : கீர்த்தி உண்டாகும்.
பூரட்டாதி : கவனத்துடன் செயல்படவும்.


🕉️மீனம்
டிசம்பர் 13, 2020
கார்த்திகை 28 – ஞாயிறு

புதிய தொழில் முயற்சிகளால் சுபவிரயங்கள் ஏற்படும். பொதுச்சேவையில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வாதத்திறமையால் இலாபம் உண்டாகும். கல்வி சம்பந்தமான பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : சுபவிரயங்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : ஈடுபாடு அதிகரிக்கும்.
ரேவதி : சாதகமான நாள்.


About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.