டிசம்பர் 23 ராசி பலன்

🕉️மேஷம்
டிசம்பர் 23, 2020
மார்கழி 08 – புதன்

பொதுக்கூட்ட பேச்சுக்களில் ஈடுபடுபவர்கள் கவனமாக பேசவும். கல்லூரி படிப்பிற்கான சுபவிரயங்கள் உண்டாகும். பதவி உயர்விற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உண்மையை உணர்ந்து மனம் அமைதி கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம்
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : எண்ணங்கள் அதிகரிக்கும்.
கிருத்திகை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


🕉️ரிஷபம்
டிசம்பர் 23, 2020
மார்கழி 08 – புதன்

நீர் வழி தொழிலால் இலாபம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். கேளிக்கை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : இலாபம் அதிகரிக்கும்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.


🕉️மிதுனம்
டிசம்பர் 23, 2020
மார்கழி 08 – புதன்

கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புத்திரர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நிர்வாகத்தில் தனித்திறமைகள் புலப்படும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.
புனர்பூசம் : தனித்திறமைகள் புலப்படும்.


🕉️கடகம்
டிசம்பர் 23, 2020
மார்கழி 08 – புதன்

தொழில் தொடர்பான எண்ணங்கள் மேலோங்கும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
புனர்பூசம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூசம் : அனுகூலமான நாள்.
ஆயில்யம் : துரிதம் உண்டாகும்.


🕉️சிம்மம்
டிசம்பர் 23, 2020
மார்கழி 08 – புதன்

வாகனங்களால் இலாபம் உண்டாகும். உறவினர்களுக்கிடையே உறவு நிலை மேம்படும். வெளிவட்டாரங்களில் மரியாதைகள் உயரும். தொழிலில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள். தாயிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : இலாபம் உண்டாகும்.
பூரம் : மரியாதைகள் உயரும்.
உத்திரம் : இன்னல்கள் குறையும்.


🕉️கன்னி
டிசம்பர் 23, 2020
மார்கழி 08 – புதன்

இளைய சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். மனதில் தோன்றும் தேவையற்ற குழப்பங்களால் சோர்வு அடைவீர்கள். கையாளும் பொருட்களில் கவனத்துடன் இருக்கவும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதமாக கிடைக்கும். சுரங்க பணியாளர்கள் பணிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : எச்சரிக்கையுடன் இருக்கவும்.


🕉️துலாம்
டிசம்பர் 23, 2020
மார்கழி 08 – புதன்

திடீர் யோகத்தால் எதிர்பாராத செயல்கள் நடைபெறும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பொருள் வரவால் சேமிப்புகள் உயரும். பொதுக்கூட்ட பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் ஏற்படும். புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : அன்யோன்யம் அதிகரிக்கும்.
சுவாதி : கீர்த்தி உண்டாகும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


🕉️விருச்சிகம்
டிசம்பர் 23, 2020
மார்கழி 08 – புதன்

தொழில் அலைச்சல்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். எண்ணிய காரியங்களில் சில காலதாமதம் உண்டாகும். கடனால் மனவருத்தங்கள் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பங்கள் உண்டாகும். பணியில் மேன்மைக்கான செயல்களை செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான முயற்சியால் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : அனுபவம் கிடைக்கும்.
அனுஷம் : குழப்பங்கள் உண்டாகும்.
கேட்டை : முயற்சிகள் ஈடேறும்.


🕉️தனுசு
டிசம்பர் 23, 2020
மார்கழி 08 – புதன்

வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். கால்நடைகளால் சில விரயங்கள் உண்டாகும். எதிர்பார்த்த வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கான யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மூலம் : அனுகூலமான நாள்.
பூராடம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


🕉️மகரம்
டிசம்பர் 23, 2020
மார்கழி 08 – புதன்

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். பேச்சுக்களால் தனலாபம் உண்டாகும். வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : தனலாபம் உண்டாகும்.
திருவோணம் : முன்னேற்றமான நாள்.
அவிட்டம் : ஆசைகள் நிறைவேறும்.


🕉️கும்பம்
டிசம்பர் 23, 2020
மார்கழி 08 – புதன்

இளைய சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். துணிவுமிக்க தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுயதொழில் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.


🕉️மீனம்
டிசம்பர் 23, 2020
மார்கழி 08 – புதன்

நண்பர்களின் மூலம் பொருளாதார மேன்மைக்கான உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பொன், பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கலகலப்பான சூழல் உண்டாகும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் மேன்மை ஏற்படும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : நம்பிக்கை அதிகரிக்கும்.
ரேவதி : கலகலப்பான நாள்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.